மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாராளுமன்றத்தில் கவலையில்லாக் காளையர் கழகம்

ஆச்சாரி

Oct 1, 2012

கவலையில்லாக் காளையர் கழக நண்பர்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆம், கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானதா என்று ஆராய புகுஷிமாவுக்கு அப்துல் கலாமுடன் அவர்கள் சென்ற பயணம் ( பார்க்க முந்தைய பகுதி )
நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. மணி, பார்த்தசாரதி, வேலு மூவரும் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்தவர்களாகி விட்டனர். அதை ஒட்டி நண்பர்கள் மூவருக்கும் அப்துல் கலாம் கையால்
“அணுவை வென்ற அசுரர்கள்” என்ற பட்டம் பாராளுமன்ற வளாகத்தில் வழங்க  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மூவரும் பாராளுமன்றத்தில் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.

மணி : என்னடா வேலு! பாராளுமன்றத்தில் விளக்கே இல்லை. ஒரே இருட்டா இருக்கு!

பார்த்தசாரதி:  மணி! கூடங்குளம் ஏன் வேணும்னு இப்போ புரியுதா?. அணு சக்தி இல்லாட்டி மின்சாரம் இல்லை.

வேலு: வெளியே கரண்ட் இருக்கு பார்த்தா! இங்க தான் இல்ல.

மணி ( பயத்துடன் ) : பார்த்தா! வேலு! யாரோ என் கையைப் பிடிச்சு இழுக்கிற மாதிரி இருக்கு.  வேலு அந்த டார்ச்சை அடி.

வேலு டார்ச்சை  அடிக்கிறான். இருட்டில் , அவருக்கே உரித்தான  ஒரு மர்மப் புன்னகையுடன் பாரதப் பிரதமர் மன்மோகன் நின்று கொண்டு இருந்தார். மணி , பார்த்தசாரதி வேலு மூவரும் பிரமித்து போய் பார்த்தனர்.

வேலு: தலைவா நீங்களா?. ஏன் இப்படி இருட்டில?.

மன்மோகன்: தம்பி. இப்போ தான் சில்லறை வணிகத்தில அந்நிய முதலீடு பண்ணலாம்னு  சட்டம் போட்டுட்டு இருக்கோம். அதை ரகசியமா தான் பண்ணனும். சரியா  நடு ராத்திரி பன்னெண்டு மணிக்கு சட்டம் போட ஏற்பாடு நடக்குது.

மணி: இது பெரிய விசயமாச்சே. பாராளுமன்றத்தில விவாதம் தேவை இல்லையா?. அதுவும் இப்படி ராத்திரில?.

மன்மோகன்: தம்பி. புரியாம பேசாதீங்க!   இப்போ இந்திய நேரத்தை மாத்தியாச்சு. அமெரிக்காவில எப்போ சூரியன் உதிக்குமோ அப்போ தான் நமக்கு காலை ஆறு மணி. அமெரிக்க நேரப்படி இப்போ காலை பத்து மணி.

வேலு : சபாஷ் தலைவா! இருட்டில சுகந்திரம் வாங்கினோம். நீங்க இருட்டையே பகல் ஆக்கீடீங்க! நம்மள ஒரு பய அசைக்க முடியாது.

மணி: பிரதமரே! நான் ஒரு பலசரக்கு கடை நடத்தறேன். இந்த அந்நிய முதலீடு என்னை பாதிக்காதா?.

மன்மோகன்: சொந்தமா கடை வச்சிருக்க நீங்க அத விட்டுட்டு வால் மார்டில வேலைக்கு சேர்ந்திடலாம். மாசம் மூவாயிரம் சம்பளம். நான் வேணா பேசி உங்களுக்கு ஒரு நூறு ரூபாய் கூடக் கொடுக்கச் சொல்றேன்.

மணி: நான் இப்போ நல்லா சம்பாதிக்கறேன் சார். மாசம் பத்தாயிரம் கிடைக்குது.

மன்மோகன்: மிஸ்டர் மணி: உங்களுக்கு ஒரு மனைவி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க தானே?. எல்லோரும் வேலைக்கு சேர்ந்திடுங்க. கண்டிப்பா அதே அளவு பணம் கிடைக்கும்.

வேலு: ஏற்கனவே விலைவாசி அதிகமா இருக்கு. இதுல இவங்க வந்தா குறையுமா?.

மன்மோகன் : கண்டிப்பா! அவங்களுக்கு நவீன  பொருள் விநியோக முறை  (Modern Supply Chain)  அனுபவம் இருக்கு.

மணி:  நவீன  பொருள் விநியோக முறை  அப்படின்னா என்ன சார்?.

மன்மோகன்: மிஸ்டர். பத்து வருஷமா கடை நடத்தறீங்க! இது கூட தெரியல!  உதாரணமா ஒரு விவசாயி தக்காளி பயிர் பண்ணி இருக்கார்னு வச்சுக்குவோம். அவர் அத ஒரு கூடையில போட்டு பக்கத்து ஊர்ல போய் விற்பனை செய்தால் அது காட்டுமிராண்டித்தனம். அதே தக்காளிய அவர் ஒரு லாரியில போட்டு தூத்துக்குடிக்கு அனுப்பி , அங்க இருந்து கப்பல்ல சீனாவுக்கு அனுப்பி அத ஒரு பிளாஸ்டிக் பெட்டியில போட்டு , அங்க இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி ஒரு அட்டையை ( lable )      ஒட்டி அங்க இருந்து திரும்ப அவருக்கே விற்கிறது தான் மாடர்ன் சப்ளை  செயின்.

மணி: லாரி, கப்பல், சீனா , அமெரிக்கா ! ஷங்கர் படம் மாதிரி இருக்கே. அப்போ விலை அதிகமா இருக்குமே சார்!

மன்மோகன்:  இருக்கும் தான். என்ன பண்றது?. வேணும்னா வாங்குங்க! இல்லாட்டி போங்க! இது சு(த)ந்திர நாடு. நீங்க முன்னேற முடியாட்டி மத்தவங்கள தடுக்காதீங்க!  இவ்வளவு பேசறீங்க! இந்த நாட்டில நாற்பது சதவீத பழம் வீணாப் போகுது தெரியுமா?.

மணி: அப்போ இவங்க வந்தா வீணாகாதா?.

மன்மோகன்: நான் அப்படி சொன்னேனா?. அமெரிக்காவிலையும் அறுபது சதவீத பழம் வீணாகுது. பழத்த பாட்டில்ல அடச்சு தூக்கிப் போடறதுக்கும் சும்மா தூக்கிப் போடறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு தம்பி.

பார்த்தசாரதி: நீங்க என்ன சொன்னாலும் சரி சார்! எங்க மாநிலத்தில இத ஒத்துக்க மாட்டாங்க!

மன்மோகன் ( புன்னகையுடன் ) :  தமிழ்நாட எல்லாம் நாங்க ஒரு பொருட்டா மதிக்கிறதே இல்ல மிஸ்டர் பார்த்தசாரதி.

பார்த்தசாரதி: அருமை!. தேசிய நலனுக்காக எல்லா மாநிலத்தையும் சுடுகாடு ஆக்கினாலும் பிரச்சினை இல்லை சார்.
மன்மோகன் : உங்களுக்கு தேசிய சிந்தனை இருக்கு. உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!  சரி வாங்க! விருது வழங்கிற மேடைக்கு போவோம். அப்துல் கலாம் காத்திட்டு இருப்பார்.

மணி, வேலு , பார்த்தசாரதி மூவரும் இருட்டில் ஒரு எதிர்பார்ப்புடன் நடக்க ஆரம்பித்தனர்.

Talk with them, not at them after more than a decade of telling your child what to do and demanding their obedience, it’s hard to change that relationship and start talking http://www.spying.ninja/ with them like they’re adults

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாராளுமன்றத்தில் கவலையில்லாக் காளையர் கழகம்”

அதிகம் படித்தது