பாலை – திரை விமர்சனம்
ஆச்சாரிDec 1, 2011
பல்லாயிரம் ஆண்டு வரலாறு நமக்கிருந்தாலும் சிறப்பான வரலாற்று திரைப்படங்கள் நம் தமிழ்த் திரை உலகில் எடுக்கப்படுவதில்லை. தப்பித் தவறி வரும் ஒரு சில படங்களும் கூந்தலுக்கு இயற்கையாகவே மனம் இருக்கிறதா போன்ற அதி முக்கிய கருத்துகளை மையமாக கொண்டே எடுக்கப்பட்டிருக்கின்றன. மக்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் பதிவு செய்த வரலாற்று திரைப்படங்கள் ஏதும் இல்லை. ஆங்கிலத்தில் வரும் திரைப்படங்கள் கூட அரசர்களது வீரத்தையும் சிறப்பையும் கூறும் படமாகவே இருக்கும். ஆனால் 2300 வருடங்களுக்கு முன் வாழ்ந்த தமிழ் பூர்வக்குடிகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை குடிகளின் மேம்பட்ட வாழ்வை மிக தத்ரூபமாக மிக யதார்த்தமாக பதிவு செய்ததற்கு இயக்குனர் செந்தமிழனுக்கு தலை வணங்கியே தீர வேண்டும்.
சாதிகளற்ற, ஏற்றத் தாழ்வுகளற்ற அறிவு ,ஆண் பெண் சமத்துவம் , பண்பு , வீரம் ,மண்பற்று நிறைந்த நம் ஆதிப்பொதுவுடைமை ’தமிழ்’ சமூகத்தை பாலையில் அதன் எதார்த்தத்தோடு காணலாம்.
ஒர் பூர்வக்குடி இனத்தின் கதையை பதிவு செய்யும் போக்கில் படம் ஈழத்தை நினைவுறுத்துகிறது. யாரையும் அடிமைப் படுத்தாத யாருக்கும் அடியும் பணியாத அந்த கம்பீர ’தமிழ்’ சமூகம் எங்கே என்று கேட்கத் தோன்றுகிறது. ஒரு மேம்பட்ட அற நெறி சமூகத்தை வந்தேறிகள் சிதைக்க முயல்வதும் அதனை அச்சமூகம் மீட்டெடுப்பதும் தான் படத்தின் பயணம். அந்த அற நெறி சமூகத்தில் நஞ்சை கலந்த வந்தேறிகளின் சூதினை களைய வேண்டிய வரலாற்று கடமையையும் படம் நமக்கு உணர்த்துகிறது.
தற்போதைய அழகியல் முறைகளோடு வரலாற்று கதையை கூறும் போக்கு படத்திற்கு மிக பொருந்தியிருக்கிறது. போர் காட்சிகளையும் , நாயகன் நாயகி உடன் போக்கு காட்சிகளையும் உருவாக்கியிருக்கும் விதம் அழகியல் சிறப்பு.
நாயகி காயாம்பூவின் குரலோடு விரிகிறது படம். அப்படியே அங்கிருக்கும் காதல், காலக் குறிப்பறிதல், சமத்துவம் , மண் பற்று , போர் வியூகம் என அனைத்திலும் சிறந்த ஒரு அறிவுக் குறிப்போடு செயல்பட்டிருக்கும் அந்த ஆதித் ‘தமிழ்ச் சமூகம்’ நிச்சயம் நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.
ஒளிப்பதிவு, கதாப்பாத்திரமைப்பு, படத்தொகுப்பு, மொழியை கையாண்ட விதம் என அனைத்திலும் இயக்குனர் செந்தமிழனின் அசாத்திய உழைப்பு தெரிகிறது. உணர்ச்சி குவியலான படமாக இல்லாமல் எதார்த்தத்தை எங்கும் இம்மியளவும் தொலைக்காத பதிவாக செய்திருப்பதே படத்தின் வெற்றி.
நிச்சயம் இந்தப்படம் உலக அரங்கில் தமிழர்களின் அடையளமாக பெருமிதம் கொள்ளச்செய்யும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த வரலாற்று ஆவணமாகப் போகும் திரைப்படத்திற்கு தமிழகத்தில் நிலை என்ன? திரையரங்குகள் கிடைக்காமல் சென்னை தவிர பல ஊர்களில் வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர் படக் குழுவினர். பெரும் படங்களும் சாகசவாத குப்பைகளும் ஆக்கிரமித்து இருக்கும் தமிழ் திரையரங்குகளில் மண்ணுக்கு போராடிய முன்னோர்களின் கதைக்கு ஒரு பிடி மண் கூட கிடைக்கவில்லை என்பது வேதனையான நிதர்சனம்.
மேலும் பாலை திரைப்படம் எடுக்கப்பட்ட விதம் குறித்து சொல்லியே ஆக வேண்டும். இப்படம் கெனான் 6டி எனப்படும் சிறிய காமிராவில் எடுக்கப்பட்டு மடிக்கணினியிலேயே படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. ஒரு படத்தொகுப்பு அறை கூட இல்லாமல் கடும் சிரமத்திற்கிடையே இந்த அழகிய அரிய படைப்பினை கொண்டு வந்துள்ளனர் பாலை குழுவினர். அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய சிறு கடமை பாலை திரைப்படத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வைப்பது தான்.
With a focus http://www.domyhomework.guru/ on the customer, expertise is gained on how to analyse, improve and innovate value chains in global business environments..
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
padam parten serappaga erundhadhu
இப்படி ஒரு படம் வந்ததே எனக்கெல்லாம் தெரியாது. படத்தின் தொழில் நுட்ப விஷயங்களின் தரத்தையும் சற்று அலசியிருக்கலாமே. அதாவது ஒளிப்பதிவு, இசை, வசனம், ஒப்பனை மற்றும் செட் போன்ற விஷயங்களைச் சொல்கிறேன். அவை தவிர்த்து, இந்த விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுவதாக உள்ளது. ஆனால், எங்கே பார்ப்பது?
http://www.facebook.com/photo.php?fbid=243430622387812&set=a.172352572828951.46023.172340196163522&type=1&theater