மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாஸ்தா சுவையான இத்தாலிய உணவு

ஆச்சாரி

Jul 1, 2011

நம்மில் பலருக்கு இத்தாலிய உணவு என்றாலே பிசா தான் ஞாபகத்திற்கும் வரும். இங்கே நாம் பிசாவை விட செய்வதற்கு எளிதான, அதே நேரம் சுவையான பாஸ்தா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பாஸ்தா பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சீனாவில் இருந்து இத்தாலிக்கு வந்ததாக நம்பப்படுகிறது. பாஸ்தா என்பது ஒரு வகையான கோதுமை  மாவை  அடிப்படையாக வைத்து  தயார் செய்யப்படும் உணவு ஆகும். பாஸ்தா பல்வேறு வடிவங்களில் கடைகளில் கிடைக்கும். நூடுல்ஸ் வடிவம் மிகப் பிரபலமானது என்றாலும் பாஸ்தா உருளை வடிவம், நட்சத்திர வடிவம் உட்பட நூற்றுக்கணக்கான வடிவங்களில் கிடைக்கிறது. முதலில் பாஸ்தா வாங்குவது எப்படி என்பதைப் பார்ப்போம். கடைகளில் காய வைத்த பாஸ்தா வகைகள் நிறைய கிடைக்கும். இவற்றை நீண்ட நாள் சேமித்து வைத்து கொள்ளலாம்.

காய வைத்த சில பாஸ்தா வகைகள் இரண்டு வருடத்திற்கு கெடாமல் இருக்கும்.  காய வைக்காத உடனடியாக சமைப்பதற்கு விற்கப்படும் பாஸ்தாவை இரண்டு அல்லது மூன்று நாட்களில் பயன்படுத்தி கொள்ளலாம். பாஸ்தா பொதுவாக வெள்ளையாக வெறும் கோதுமை மாவில் மட்டும் செய்யப்பட்டதாக இருக்கும். அதே சமயம் கீரை, தக்காளி போன்றவை சேர்ந்த பாஸ்தாவும் இருக்கின்றன.பாஸ்தாவை சமைப்பதற்கு பல்வேறு முறைகள் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றிக்கும் பொதுவானது பாஸ்தாவை உப்பு போட்டு அவித்து விட்டு எதாவது சாறு, சீஸ், காய்கறி அல்லது இறைச்சி போட்டு ஓவனில் வைத்து சமைப்பது.

இப்போது எனக்கு மிகவும் பிடித்த முறையில் பாஸ்தா எப்படி சமைப்பது  என்று பார்க்கலாம். முதலில் என்ன தேவை என பார்க்கலாம்.

  • இரண்டு கோப்பை காய வைத்த  நட்சத்திர வடிவம் அல்லது அது போன்ற  எதாவது ஒரு தட்டையான  வடிவில் இருக்கும் பாஸ்தா.
  • ஒன்னரை கப் துருவிய செடார் அல்லது அது போன்ற  பாலாடைக்கட்டி
  • ஒரு கப் துருவிய பார்மிகியனோ பாலாடைக்கட்டி.
  • கொஞ்சம் வெண்ணை .
  • கொஞ்சம் பால்.
  • செர்ரி தக்காளிப்பழம் சிறியது 10
  • சிறிதாக அறியப்பட்ட காலிபிளவர் துண்டுகள் ஒரு கப்.
  • கொஞ்சம் உப்பு

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீரை கொதிக்க விடுங்கள். நீங்கள் தண்ணீர் கொதிக்கும் போது உப்பு, பாஸ்தாவை போட்டு கொஞ்ச நேரம் பாஸ்தாவை அவிய விடுங்கள். உப்பை கொஞ்சம் அதிகமாவே  போடுங்கள்.  உங்கள் மருத்துவர் உப்பு சாப்பிடக்கூடாது என்று சொல்லி இருந்தால் நீங்கள் உப்பு போட வேண்டாம். கொஞ்ச நேரத்தில்  பாஸ்தா மென்மையாக அதே சமயம் குழையாத பதத்தில் இருக்கும் போது அடுப்பை அணைத்து விட்டு, நீரை வடிகட்டி பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள். இந்த பதத்தை இத்தாலியில் அல்டென்ட் என்று கூறுவார்கள். பாஸ்தா முழுதாக வேக கொஞ்சம் நேரம் இருக்கும் போதே அடுப்பை அணைத்தீர்கள் என்றால் சரியாக இருக்கும்.இதற்கு கிட்டத்தட்ட எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் ஆகும்.

ஓவனில் வைக்கும் ஒரு பீங்கான் பாத்திரத்தில் கொஞ்சம் வெண்ணையை தடவி அதில் வேக வாய்த்த பாஸ்தாவை போடுங்கள்.  அதில் துருவிய செடார் பாலாடைக்கட்டி சீஸ் சேர்த்து லேசாக பிசறி விடுங்கள். அதில் கொஞ்சம் பால் ஊற்றுங்கள். பின்பு செர்ரி தக்காளி பழங்களையும், காலி பிளவர் துண்டுகளையும் சேருங்கள். இதற்கு மேலாக பார்மிகியனோ சீஸ் தூவுங்கள். ஓவனை 200  டிகிரிக்கு சூடேற்றுங்கள். சூடான பின்பு பீங்கன் பாத்திரத்தை அவனில் ஒரு இருபத்தி ஐந்தில் இருந்து முப்பது நிமிடங்கள் வரையில் வைத்து எடுங்கள். சூடான பாஸ்தா தயார்.

இதில் தக்காளி மற்றும் காலி பிளவருக்கு பதிலாக உங்கள் கற்பனையை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் சேர்க்கலாம். வேறு சீஸ் எதாவதை சேர்த்து பார்க்கலாம். பாலுக்கு பதிலாக பெஸ்டோ (சுவையான இத்தாலி மசாலா கலவை. கடைகளில் பச்சை அல்லது சிவப்பு நிறங்களில் கிடைக்கும்). பாஸ்தாவை பொறுத்தவரை உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை.

நார்வே கண்ணன்

One of the key selling points of this app is that http://www.phonetrackingapps.com users are completely anonymous

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாஸ்தா சுவையான இத்தாலிய உணவு”

அதிகம் படித்தது