மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிடிப்பு (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Nov 28, 2020

Siragu ovvoru nodiyilum

காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது ?
நம் எண்ணங்கள் ஏன் சுழல மறுக்கிறது ?

காலத்திற்கு எதன் மீதும்  பிடிப்பு இல்லை
ஓடிக்கொண்டே இருக்கும்
இன்று நீ
நாளை நான்

காலம் யாரையும் பிடித்து வைப்பதில்லை
காலம் எதையும் பிடித்து வைப்பதில்லை
ஆனால்

எண்ணங்கள் ஏதோ ஒன்றின் மீதுள்ள
பிடிப்பினால் பிறக்கின்றது
அது யாரையும் விட்டு விலகுவதே இல்லை
பிடிப்பின் பிடி தளர்ந்தாலும்
பிடிப்பின் உருவம் மறைந்தாலும்
பிடிப்பின் உயிர் பிரிந்தாலும்
பிடிப்பினால் பிறக்கும் எண்ணங்கள்
மட்டும் மடிவதேயில்லை ;


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிடிப்பு (கவிதை)”

அதிகம் படித்தது