மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புகைப்படக்கலையும் தொழில்நுட்பமும்

ஆச்சாரி

Oct 1, 2012

புகைப்படம்- இது ஒரு மௌன மொழி. ஒவ்வொரு புகைப்படமும் நமக்கு கடந்த காலத்தை நினைவூட்டும். நாம் ரசிக்கும் ஒவ்வொன்றையும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு பின்னர் அதனை பார்க்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது என்பது மிகக் குறைவு.ஆனால் தற்பொழுது புகைப்படம் எடுக்காத நபரே இல்லை என்றாயிற்று. அதற்கு காரணம் தொழில்நுட்பம்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக்கண்டு மிகைக்காத ஆளே இல்லை என்று கூறலாம்.அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தின் தாக்கம் தற்போது உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.சமீபத்தில் போட்டோகினா(PHOTOKINA)-2012 என்ற கண்காட்சி ஜெர்மனி(GERMANY) நாட்டில் கொலோன் (COLOGNE)நகரில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு வகையான நிழற்படக்கருவிகள் (CAMERAS) அறிமுகம் செய்யப்படுகிறது.

அங்கு தற்போது அறிமுகம் செய்து வைத்த நிழற்படக்கருவிகளுள் சிலNIKON D600,CANON EOS 6D,SAMSUNG GALAXYCAMERA,FUJIFILM X-E1,SONY CYBER-SHOT DSC-RX1. இதில் NIKON D600 மற்றும் CANON EOS 6D நிழற்படக்கருவிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, இந்த இரண்டு நிழற்படக்கருவிகளுமே “FULL FRAME”(35mm) நிழற்படக்கருவிகள் ஆகும். இவை இரண்டைப் பற்றி இங்கு நாம் காண்போம்.

CANON EOS 6D:

இதில் CMOS உணரி(SENSOR) எனப்படுவது 24*35mm,WiFiமற்றும் GPS வசதிகளும் உள்ளது.இந்த வசதி மூலமாக நாம் எடுக்கும் புகைப்படத்தை  மற்றவருடன் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளலாம்.FACEBOOK மற்றும் YOUTUBE லும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.இதன் ஒளித்தோற்றமானது(VIDEO)1080p உடையது.இதன்வடிவம் மெல்லிய எடை கொண்டது(770g),144.5 x 110.5 x 71.2mm (Dimensions) ஆகும்,இதன் விலை அமெரிக்க டாலர் படி $2100 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • PIXEL COUNT எனப்படுவது 20.2Million
  • ISO வின் அளவு : STANDARD-(100-25600),EXPANDED-(50-102800)
  • AUTO FOCUS(AF) : 11
  • 4.5 FPS(Frames Per Second)
  • 1800mAh Battery திறன் கொண்டது

NIKON D600:

இதன் 24.3MP ஆனது மற்ற Nikon D800,Nikon D4 மற்றும்,Canon EOS 5D Mark III நிழற்படக்கருவிகளை போலவே நல்ல திறன் கொண்டது.Nikon D600 ல் இருக்கும் Autofocus மூலமாகதுல்லியமாகவும்,வேகமாகவும் புகைப்படம் எடுக்க உதவுகிறது.

மாறுபாட்டு அளவீடு(Dynamic Range)யை உயர்த்த HDR Function சேர்க்கப்பட்டுள்ளது.

மற்ற நிழற்படக்கருவிகளை ஒப்பிடும் பொழுது ISO அளவானது குறைவாகவே உள்ளது.

இதில் உபயோகப்படுத்திருக்கும் CMOS உணரி(Sensor),  உலகிலேயே இரண்டாவது சிறந்த உணரி ஆகும்.இதன் விலையும் $2100 அமெரிக்க டாலர் ஆகும்.

  • PIXEL COUNT எனப்படுவது 24.3Million
  • ISO வின் அளவு : STANDARD-(100-6400),EXPANDED-(50-25600)
  • AUTO FOCUS(AF) : 39
  • 5.5 FPS
  • 1,900mAhBattery திறன் கொண்டவை.

மற்றவற்றை (Full Frame Cameras) யை ஒப்பிடும் பொழுது இந்த இரண்டு நிழற்ப்படக்கருவிகளின் விலை சற்று குறைவே. மொத்தத்தில் இந்த இரண்டு நிழற்படக்கருவிகளின் உதவியோடும் நாம் ஒரு சிறந்த புகைப்படத்தைத்தர இயலும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “புகைப்படக்கலையும் தொழில்நுட்பமும்”
  1. pandian, photograher says:

    this is very useful to puding photographers.

அதிகம் படித்தது