மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புதிய ஆகாஷ் TABLET-2

ஆச்சாரி

Oct 15, 2012

சகலமும் நவீனமயம் ஆகிவரும் இக்காலத்தின் சமீபத்திய முக்கிய கண்டுபிடிப்பு TABLET எனப்படும் மின்னணுசார் (Electronic) சாதனம் ஆகும். Tablet என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு காரணம் இதன் வடிவம் TABLET OF STONE என்ற கல்லின் வடிவம் போல் உருவாக்கப்பட்டதால் TABLET என்று பெயர் பெற்றது.

இது எளிதில் எடுத்துச்செல்லக்கூடியதாகவும், செவ்வக வடிவிலும் இருக்கும்.மடிக்கணினி எனப்படும் Laptop ஆனது உருவத்தில் பெரிதாக இருப்பதால் இதற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது தான் Tablet. இதன் விலையும் மடிக்கணினியை ஒப்பிடும் பொழுது சற்று குறைவே.

இந்திய அரசு மாணவர்களின் கல்விக்காக, அனைத்து கல்லூரி மாணவர்க்கும் குறைந்த விலையில் Tablet வழங்குவதற்காக ஆகாஷ்  எனப்படும் Tablet கணினியை 5 அக்டோபர் 2011 இல் அறிமுகம் செய்து வைத்தது. முதலில் Shakshat Tablet என்று பெயர் வைக்கப்பட்டது பின்னர் ஆகாஷ் என்று பெயர் மாற்றம் செய்தது.

அறிமுகம் செய்து வைத்த சிறிது நாட்களிலே மாணவர்களின் மத்தியில் ஆகாஷ் Tablet க்கு நல்ல வரவேற்பு இருந்தது, மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆகாஷ் Tablet தனை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர். இதற்கு முக்கிய காரணம் இதன் விலையே.வெளிச்சந்தையில் விற்கும் Tablet கணினிகளுடன் ஒப்பிடும் பொழுது இதன் விலை பல மடங்கு குறைவு.

இதனை உற்பத்தி செய்துதர Quad என்ற நிறுவனம் ஒப்பந்தம் பெற்றது. Datawind என்ற ஆங்கிலேய  நிறுவனம் ஆகாஷ் Tablet கணிணியின் Developer ஆக செயல்படுகிறது. அடுத்த மாதம் ஆகாஷ் Tablet 2 என்ற புதிய Tablet கணினியை இந்திய அரசு வெளியிட உள்ளது.

Aakash Tablet 2:

இந்த Tablet இல் புதிய Android 4.0 Icecream Sandwich OS உள்ளது. இதன் விலை இந்திய ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டுமே. உலகிலேயே மிக குறைந்த விலையில் கிடைக்கும் Tablet இதுவாகும். முதலில் 20,000 மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் Sim Card வசதியும் உள்ளது. இதன் சிறப்புகள்,

  • Dual Core ARM Cortex A-9 800MHz செயலி (Processor)
  • நான்கு மணி நேர மின்கல அடுக்கு (Battery),3200 mAh.
  • Capacitive Screen கொண்டது
  • Internal Memory 2Gb
  • Wi-fi மற்றும் GPRS வசதி

வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்தை மாணவர்கள் சரியான வழியில் பயன்படுத்தவே அரசு இது போன்ற சலுகைகளை தருகிறது . இதன் மூலம் நாம் நமது கல்வி அறிவை மேம்படுத்த ஆகாஷ் பெரிதும் உதவியாக இருக்கும்.

You order-essay-online.net need to debate it with the books and other sources of 4 introduction information and ideas you use

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதிய ஆகாஷ் TABLET-2”

அதிகம் படித்தது