புதிர் போட்டி ( திறமை உள்ளவர்களுக்கு மட்டும்)
ஆச்சாரிApr 1, 2013
1.எட்டு, எட்டைக் கூட்டினால் 1000 வரவேண்டும். இந்த எட்டு, எட்டையும் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் போட்டு கூட்டிக் கொள்ளலாம் ஆனால் கூட்டுத்தொகை 1000 வர வேண்டும்.
2.இருபத்தொன்பதில் 29 –ஐக் கழித்தால் மீதி 9 வரும் எப்படி?
3.புகைவண்டி மட்டுமே செல்லக்கூடிய ஒரு பாலம் கடலுக்கு மேல் உயர்ந்து நிற்கிறது. இதில் புகைவண்டி வரும் போது எதிரே தெரியாமல் மனிதர் எவரும் நடந்து வந்தால் ஒன்று கடலில் குதிக்க வேண்டும். இல்லை, புகைவண்டியில் அடிபட்டு இறக்க வேண்டும். ஏனென்றால் தண்டவாளம் ரயில் செல்ல மட்டும் செல்லக்கூடிய அளவுள்ளதாக உள்ளது. இந்நிலையில் ஒருமுறை ஒருவர் புகைவண்டி வரும்போது வெள்ளைத் துண்டை தலையில் கட்டிக்கொண்டு, வலது கையில் அரிவாளும், இடது கையில் ஒரு ஆட்டையும் பிடித்துக்கொண்டு இத்தண்டவாளத்தில் வருகிறார். இவர் இறக்காமல் எப்படி தன் உயிரை காப்பாற்றுவார் கூறுங்கள்.
4.ஒரு மரத்தில் 13 பறவைகள் அமர்ந்திருந்தன. அப்போது ஒரு வேட்டைக்காரர் அம்மரத்தில் ஒரு பறவையை மட்டும் குறிவைத்துச் சுட்டுவிடுகிறார். சுட்ட பறவை கீழே விழுந்து விடுகிறது. மரத்தில் இருந்த 13 பறவையில் 1 பறவை இறந்த பின் மீதம் எத்தனை பறவைகள் மரத்தில் இருக்கும்?
5.ஒரு மிருகக்காட்சி சாலையில் பல பறவைகளும், விலங்குகளும் இருக்கின்றன. அதில் மொத்தம் 36 தலைகள், 100 கால்கள் – இவற்றில் பறவைகள் எத்தனை? விலங்குகள் எத்தனை?
6.விகடகவி – இந்த வார்த்தையை முன்னும்,பின்னும் வாசித்தாலும் ஒரே பொருளை தரும். இது போல் ஏதேனும் இரு தமிழ் வார்த்தைகள் கூற முடியுமா?
7. IT-ட்டது BUT-ட்டனால் WHAT-ட்டென்ன என்று தயவு செய்து பதில் கூறவும்?
8.ஒருவன் கிழக்கு திசையை நோக்கி ஒரு தெருவுக்குள் நடந்து போகிறான், சிறிது தொலைவில் சென்றதும் இடது பக்கம் திரும்பி நடக்கிறான். அவ்வாறு வரும் போது அங்குள்ள நான்கு வழிச் சந்திப்பை வந்தடைந்தவன் , இங்கிருந்து தனது இடது பக்கம் நடக்கிறான். பின்பு சிறிது தூரத்தில் வலது பக்கம் திரும்பி நடந்தவன் டக்கென்று இடது பக்கம் திரும்பி, மீண்டும் ஒரு இடது பக்கம் நடந்து வருக்கிறான். இப்போது அவன் எந்த திசை நோக்கி நடந்து வருகிறான் எனக்கூற முடியுமா?
9.மழைக்காலத்தில் ஒரு தவளை கட கட, கட கட எனக் கத்துகிறது. இதன் அருகே உள்ள மற்றொரு தவளை கர்ர… கர்ர… எனக் கத்துகிறது. இதில் முதலாவதாகக் கத்தும் தவளையின் குரலை மொழி பெயர்த்தால் வட்டி கேட்பவனைப் போலவும், இரண்டாவது தவளையின் குரலை மொழி பெயர்த்தால் வட்டி கொடுப்பவனைப் போலவும் அமையுமாறு மேற்கண்ட சொற்களைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். அது என்ன வார்த்தை?
10. இது சென்னையில் வசிக்கும் ஒரு குடிகாரனின் கவிதை. முடிந்தால் தூய தமிழில் மொழிபெயர்ப்பு செய்யுங்கள்.
மன்சத் தொட்டு சொல்றேன்ப்பா
அல்லாரும் எண்ணிய கூப்டுறது ஏயூமய
நான் துன்ற நாஷ்டா வாயப்பயம்
டை-டானிக்க இஸ்த்துனுப் போனது கடலு அய
இம்மாம் பெர்சா கீர ஏரியால நானே தய
வூட்டாண்ட இனி கம்முனா வுயும் கொல
ரோட்டான்ட வூந்ததுதான் ஏன் நெல
மப்டீல மாமியா வூட்டுக்கு போனது பல
அம்புட்டும் அன்னாத்தயோட கல
மெரசல்னா ஏன் உசிருக்கு இன்னா வெல
நானு மேல பூட்டா – அந்தக் கூவம்
சேராண்ட வைப்பாங்க செல
ஒ.கே நான் ஜகா வாங்கிக்கிறேன் தல
குறிப்பு:
என்னங்க விடையை தெரிஞ்சுக்கனுன்னு ரொம்ப ஆவலா இருக்கீங்களா? முடிஞ்சா கண்டுபிடிங்க. அவசியம் விடைகள் தெரியனும்னா அடுத்த சிறகு வெளியீட்டில் பார்க்கவும். நன்றி.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதிர் போட்டி ( திறமை உள்ளவர்களுக்கு மட்டும்)”