மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புதுமை (கவிதை)

நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.

Jun 9, 2018

siragu pudhumai1

 

மேடுபள்ளங்களில் ஓடியும்

ஆறுகுளங்களில் விளையாடியும்

அயல்பக்க நட்போடும் இருந்த

குழந்தைகளை

வீடியோகேமிலும்

கணிணிவிளையாட்டிலும்

அடைத்துவைத்தது

நேரமற்றபுதுமை!

 

பல்லாங்குழி ஆடி பந்தங்களையும்

தாயம் ஆடி தங்கமானஉறவுகளையும்

பலப்படுத்திபொழுதுபோக்கிய

குமரிகளை வாட்ஸ்அப்பிலும்

ஃபேஸ்புக்கிலும் மூழ்கடித்து

பண்பாட்டைசீர்குலைத்தது

அறிவியல் புதுமை!

siragu pudhumai2

 

அறுபதுவயது பாட்டி

பேருந்தைவிட்டு

பதைபதைக்க இறங்கினாள்

‘சாப்பிடச்சென்றால்

கையாள் வேலைக்குநேரமாயிடும்

வேண்டாம் என்பார்கள்

இன்றைக்கும் உலைகொதிக்காது’

பாதுகாக்கவேண்டிய

பாட்டியைபணிக்கு அனுப்பி

வேடிக்கைப் பார்த்தது–நம்

நாகரிகப்புதுமை!

siragu pudhumai3

 

விபச்சாரத்தையும்

கள்ளக்காதலையும்

கட்டுப்படுத்தாமல்

அரசுதொட்டில் என்றபேரில்

அனாதை இல்லங்களைப் பெருக்கியது

அரசியல் புதுமை!

 

அயல்நாட்டுமோகம்

ஆடம்பரவாழ்க்கை

எனப்பெற்றோரை

அனாதையாக்கி

முதியோர் இல்லங்களை

பெருக்கியது–நமது

நவநாகரிகப் புதுமை!

 

பழமையைப் போற்றவேண்டாம்

பழிக்காமல் இருந்தால் போதும்!

புதுமையைப் புகழவேண்டாம்

புரிந்துநடந்தால் போதும்!

Siragu penniyam2

 

பெண்ணடிமையை அகற்றிய

புதுமையைப் போற்றுவோம்!

சமஉரிமை அளித்த

புதுமையை போற்றுவோம்!

அறிவுவளர்ச்சியில் விளைந்த

அறிவியல் கண்டுபிடிப்பை

புகழ்ந்து போற்றுவோம்!

இவைபோல் போற்றவேண்டிய

புதுமைகள் இன்னும் பல!

 

நாகரிகத்தை தொலைக்காத

பண்பாட்டை மறக்காத,

பாசத்தை கைவிடாத,

உறவுகளை உதறாத,

வாழ்க்கையை எந்திரமயமாக்காத,

புரட்சிசெய்யும் புதுமையை

புரிந்துபோற்றுவோம்!

 

 

 


நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதுமை (கவிதை)”

அதிகம் படித்தது