மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புறக்கணிப்போம் இலங்கை பொருட்களை

ஆச்சாரி

Jul 1, 2011

ஜூன் 11 2011 அன்று , சான்பிரான்சிஸ்கோ நகர  கடை வீதியில் அமைந்துள்ள கேப்(Gap) மற்றும் விக்டோரியா சீக்ரெட்(Victoria Secret) ஆகிய கடைகளின் முன்னே அமெரிக்க வாழ் தமிழர்கள் இலங்கையில் தயாரான துணிகளை அக்கடைகள் விற்பதை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

ஸ்பீல்ட் ( Spield International (Pvt) Ltd ) என்ற இலங்கை நிறுவனம் இலங்கையில் உற்பத்தியாகும் துணிகளை  அமெரிக்க கடைகளான கேப், வால்மார்ட் மற்றும் கே மார்ட் போன்ற கடைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. விக்டோரியா சீக்ரெட், தன் துணி உற்பத்தி தொழிற்சாலையை இலங்கையில் நிறுவி, துணிகளை அமெரிக்காவின் கிளைகளுக்கு  ஏற்றுமதி செய்கிறது.

இலங்கையில் உற்பத்தியாகும் துணிகளை தவிர்ப்பதன் மூலம் தமிழினப் படுகொலைக்கு வித்திட்ட இலங்கை அரசுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்பதே இந்த போராட்டத்தின் முக்கிய குறிக்கோளாக போராட்ட குழு தெரிவித்தது.

இந்த போராட்டம் மாதம் தோறும் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

The inclusion of oversized pages help with homework online or sheets of paper larger than

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “புறக்கணிப்போம் இலங்கை பொருட்களை”
  1. பண்ணன் says:

    சர்வதேச அரசியலில் உள்ள ஆதிக்க வலிமையுள்ள நலன்களையும், அதற்கு துணை போகும் நலன்களையும் ஓரளவு புத்திசாலித்தனமாகக் கணித்து சீனாவின் துணையுடன் இலங்கை அரசு காய்களை நகர்த்தி பலன்கள் பெற்று வருகிறது.

    இதில் இந்தியாவின் நலனும்,இலங்கைத் தமிழர்களின் நலனும் பாதிக்கப்பட்டு வருகிறது. இப்போக்கு இன்னும் மோசமாகும் என்பதை இப்போராட்டம் உணர்த்துகிறது.

    சீனாவுக்கு எதிராக முணகல் கூட வெளிப்படாதது சீனாவின் ‘சாதுர்யமான’ அரசியலை வெளிப்படுத்திகிறது.

  2. thol says:

    பெரும் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் வளரும் நாடுகளில் கொடிய சுரண்டல், மோசடிகளைச் செய்தும் ஊக்குவித்தும் உற்பத்தி செய்து வரும் பொருள்களை வாங்கி வாழ்ந்து கொண்டு ‘இலங்கைப்’ பொருள்களை மட்டும் புறக்கணித்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமா?

    இலங்கை அரசுக்கு ஆயுத உதவி, போர்ப் பயிற்சி உதவி, ஆதரவு உதவி செய்த நாடுகளின் பொருள்களை எல்லாம் புறக்கணித்தால் வாங்குவதற்கு எதுவும் மிஞ்சுமா?

அதிகம் படித்தது