மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தனிப் பெருமிதம் கொள்வோம்

ஆச்சாரி

Jan 1, 2012

தொன்மைத் தமிழில் பிறமொழிச்  சொற்கள் மெல்ல மெல்ல உள் நுழைந்து அல்லது நுழைக்கப்பட்டு தூய தமிழோடு பிணைந்து- தமிழர்கள் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களாகி பின்பு அந்தச் சொற்களே வழக்கிழந்து போய் விட்டன.  தமிழுக்குத் தகை சேர்க்க – வளர்க்க புலவர்களும் அரசர்களும் தனி மனித ஆர்வமும் மேலோங்கி இருந்த காலத்திலேயே கலப்படச் சொற்களை- தமிழ்தான் என்றெண்ணிப் பேசி வந்திருக்கிறார்கள். மற்ற உலக மொழிகளுக்கு இல்லாத பெருமை தமிழுக்கு இருப்பதால்தான்- தன்னில் கலந்த பிற மொழிகளை உதிர்த்துவிட்டு தனித்தியங்கும் ஆளுமை கொண்டதாக இருக்கிறது.

வட மொழிச் சொற்களையும் ஆங்கிலத்தையும் கலந்து தமிழ்ச் சொற்கள் எனப் பயன்படுத்தப்பட்டு வந்த பல சொற்கள்  காணாமல் போய் விட்டன. காரணம் தமிழர்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வும் மொழி ஆர்வமும்தான்.

உலகின் மூத்த மொழி- நெகிழ்வுத் தன்மை கொண்ட மொழி –  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆளுமைகொண்ட மொழி எனப் பல சிறப்பியல்புகளைக் கொண்ட தங்கள் தாய் மொழி  தமிழைக் காக்க உணர்வுடன் எழுந்த தமிழர்களின் மொழிப் பற்றால்- வழக்கிழந்து மறைந்துவிட்டன பிறமொழி சொற்கள்.

எடுத்துக்காட்டாக-

நமஸ்காரம், குமாஸ்தா,

டபேதார், அபேட்சகர்,

பிரேரணை, ஜில்லா,

முனிசிபாலிட்டி, ஜமீன்,

எஜமான், , ஸ்ரீமான்,

முன்சீப், தஸ்தாவேஜ்,

சுபிட்சம், ஊர்ஜிதம்.

அபிலாஷை, பந்தோபஸ்து

இந்த வார்த்தைகள் அனைத்தும்  தமிழ் வார்த்தைகளே அல்ல. ஆனால் ஒரு காலக்கட்டத்தில் இவைகளையே அதிகமாக தமிழர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். தமிழ்-தன்னாளுமை கொண்ட மொழியாதலால் அந்த வார்த்தைகளைப் புறக்கணித்துவிட்டது. அதனால்

அந்த வார்த்தைகளெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன.

இப்போது -

நமஸ்காரம்-  வணக்கம் என்றும்

குமாஸ்தா- பணியாள் எனவும்

டபேதார்- சிப்பந்தி ஆகவும்

அபேட்சகர்- விண்ணப்பதாரர் என்றும் ,

பிரேரணை- மனு எனவும்

ஜில்லா- மாவட்டம் எனவும்

முனிசிபாலிட்டி- வட்டம் என்றும்

ஜாமீன் நிலக்கிழார் எனவும்

எஜமான்- முதலாளி என்றும்

ஸ்ரீமான் திரு என்றும்

முன்சீப் கிராம நிர்வாகி எனவும்

தஸ்தாவேஜ்- ஆவணம் ஆகவும்

ஊர்ஜிதம்- உறுதிப்படுத்தல்

சுபிட்சம் வளம் எனவும்

அபிலாஷை தன்னின்பம்  என்றும்

பந்தோபஸ்து- பாதுகாப்பு எனவும்

ஆஸ்தி- சொத்து

பேசப்பட்டு தமிழ் மக்களிடம் தமிழ்ப் பதங்களே  பயனிலுள்ளன.

தமிழுக்கு ஊறு நேரும்போதெல்லாம் தமிழர்கள் வாளாவிருந்துவிடுவதில்லை. இப்படி சங்க கால முதலே இருந்து வந்ததால்தான் அந்நிய மொழிக் கலப்பு தொடர்ந்து இருந்து வந்தாலும் தமிழ் இன்றும் சீரிளமையாய் சிறந்தோங்கி வாழ்கிறது.  தமிழ் மீது நேரிடையாகவும் மறைமுகமாகவும்  திணிக்கப்பட்ட எத்தனையோ ஆதிக்கங்களை வீழ்த்தி – உச்சத்தில் வைத்து மெச்சும் தமிழர்கள் தங்கள் குடி இந்த மண்ணில் வாழும்வரை தமிழைத் தாங்கிப் பிடிப்பார்கள் இன்னும் பல வார்த்தைகள் தமிழோடு கலந்துகொண்டுதான் உள்ளன.

அவைகளும் கால ஓட்டத்தில் கரைந்துவிடும். உலகமயமாதல்- விஞ்ஞானம் பெருகும் சூழல். இந்தச் சவால்களிலிருந்து தமிழை மீட்டெடுப்பது இன்றைய தமிழர்களின் கடமை. தமிழ் காப்போம்- தனிப் பெருமிதம் கொள்வோம்.

It’s a permanent record, gold states, bullying and harassment, even in jest can damage a child down the celltrackingapps.com road

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தனிப் பெருமிதம் கொள்வோம்”
  1. பழமைபேசி says:

    முகநூளில் பகிருங்கள்??

    முகநூலில்

    • admin says:

      பழமைபேசி அவர்களுக்கு நன்றி.
      பிழை திருத்தப்பட்டுவிட்டது.

  2. kasi visvanathan says:

    உண்மைதான். வன்கலப்பு மிகுந்து வரும் காலகட்டங்களில் விழித்தெழுந்து தற்காத்தல் என்ற நிலை இருப்பதால் தான், நாம் இன்றும் தமிழ் என்பதன் பெருமையை உடையவர்களாய் இருக்கின்றோம். இனியும் விழிப்புடன் கல்லப்பினை தவிர்த்து பழுது படாமல் தமிழ் மொழியை காப்போம். இது நம் கடமை.

அதிகம் படித்தது