மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெல் அடிச்சாச்சு – குறும்படம்

ஆச்சாரி

Oct 1, 2011


இன்று மாற்று சினிமாவுக்கான களத்தில் முக்கியமானது குறும்படங்கள்.

சமூகத்தின் பல பக்கங்களை பதிவு செய்வதில் குறும்படங்கள் சிறப்பான பங்காற்றி வருகின்றன. அப்படி கல்வி பெற முடியாத சிறுவனின் வாழ்வை பதிவு செய்திருக்கும் படம்தான் ‘பெல் அடிச்சாச்சு’. பள்ளிக்கு நேரமாச்சு என ஒரு தாய் தன் மகனை எழுப்புவதோடு ஆரம்பிக்கிறது படம்.
பள்ளியில் சிறுவன் விளையாடும் காட்சியில் மற்றொரு மாணவன் சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்பதும் நல்ல திரைக்கதை யுக்தி. இறுதியில் நறுக்கென ஹைக்கூ கவிதை போல் படம் நிறைவடைகிறது. இறுதியில் பள்ளி வாசலில் திண்பண்டம் விற்றுவிட்டு சிறுவன் திரும்பும்போது , பண்டம் மடிக்கும் பேப்பரில்
குழந்தை கல்வி குறித்த செய்தி இருப்பது நல்ல பஞ்ச். இரண்டு வரிகளில் வேறொரு உணர்வை ஏற்படுத்தி இறுதியில் வேறு செய்தி சொல்லும் ஹைக்கூ போலபள்ளிக்குச் செல்லும் சராசரி சிறுவன் போல் தோற்ற மேற்படுத்தி இறுதியில் சிறுவன் பள்ளி வாசலில் பண்டம் விற்கப்போவது கூர்மையாய் மனதில் தைக்கிறது.
கதாப்பாத்திர தேர்வும் , நடிப்பும் , கேமரா கோணங்களும் படத்தொகுப்பும் நேர்த்தியாய் உள்ளன. நீராரும் கடலுடுத்த பாடலோடு இறுதி காட்சி வருவது வலிமை. இயக்குனர் s.u.அருண், கவனம் ஈர்க்கிறார்.
இன்னும் எத்தனை குழந்தைகளை பண்டம் விற்கவிட்டு தொழிற்சாலைகளில் விட்டுவிட்டு , காகிதம் பொறுக்க விட்டுவிட்டு வல்லரசு என அசிங்கமாய் மார் தட்டிக் கொள்ளப்போகிறோம் ?.
குறும்பட அமைப்பான தமிழ் ஸ்டுடியோவின் தளத்தில் இப்படத்தினை காணலாம்.

He gives the example of london, where he claims that the air is cleaner now than it has been since , thanks www.pro-essay-writer.com/ to decreases in smoke and sulphur dioxide

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “பெல் அடிச்சாச்சு – குறும்படம்”
  1. சரவணன் says:

    முதலில் காட்டப்படுவது சிறுவனின் கனவு என்று புரிந்து கொள்வது சற்று சிரமமாக உள்ளது. இரண்டாம் நாள் என்று காட்டாமல், முதலில் கனவு முடியும் இடத்திலேயே சஸ்பென்ஸை வெளிப்படுத்தி இருக்கலாம்.

    நாம் இதுவரை தமிழ் வணக்கமாகப் பாடிவந்த நீராரும்… இங்கு ஒவ்வொரு வரியும் நம்மேல் சவுக்கடியாக விழுகிறது. அதுவே இயக்குனரின் வெற்றி.

  2. rakshana says:

    எதிர் பாராத முடிவு! படத்தை பாத்துவிட்டு விமர்சனம் படித்தேன்!

அதிகம் படித்தது