மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பேராசிரியர் அடிகளாசிரியர் மறைவு

ஆச்சாரி

Jan 14, 2012

முதுபெரும் தமிழறிஞரும் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் செம்மொழித் தொல்காப்பியர் விருது பெற்றவருமான பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்கள் தம் 102 ஆம் அகவையில் தமது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் கூகையூரில் 8.1.2012 அன்று இரவு இயற்கை எய்தினார். தமிழ் தமிழ் என்றே தமது இறுதிநாள் வரை வாழ்ந்தவராவார் அப்பெருமகனார். அவருக்கு நான்கு ஆண் மக்களும் நான்கு பெண் மக்களும் உள்ளனர்.

அடிகளாசிரியர் விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சி வட்டத்தின் தென்கோடியில் உள்ள கூகையூரில் 1910 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் இளமைக்காலம் தொடங்கி தமிழ்ப் பேராசிரியராக,ஆய்வறிஞராக விளங்கினார்.

தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம்  (இளம்பூரணம்), சொல்லதிகாரம் (சேனாவரையம்), பொருளதிகாரம் (செய்யுளியல்-பேராசிரியம்), தொல்காப்பியம் பொருளதிகாரம்(ஏனைய இயல்கள்) எனத் தொல்காப்பியப் பதிப்புகளில் ஈடுபட்டு இவர் வெளிப்படுத்தியுள்ள பதிப்பு நூல்கள் உலகத் தரம் கொண்டவை.

பல பாடவேறுபாடுகளை நுட்பமாகக் கண்டவர்கள், புதுப்புதுப் பொருள்களைக் கண்டு சொன்னவர். பல நூல்களுக்கு உரை வரைந்துள்ளார். தஞ்சாவூர் சரசுவதி மகாலுக்காகப் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். 03.07.1950 முதல் 03.07.1970 வரை தஞ்சை-கரந்தைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தபோது தரமான தமிழ் மாணவர்களை உருவாக்கினார்.

ஏறத்தாழ அறுபது நூல்கள் இவரால் வெளியிடப்பட்டுள்ளன. பல நூல்கள் இன்னும் பதிப்பிக்கப்பெறாமல் உள்ளன.

பேராசிரியர் அடிகளாசிரியர் என்றால் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு அறிந்தவர்களுக்கு நன்கு புரியும். தொல்காப்பியப் பதிப்பில் இவருக்கு இணையாக ஒருவரைக் காட்டமுடியாதபடி ஆழமான, தெளிவான விளக்க உரைகளை வழங்கியவர். தம் ஆராய்ச்சியால் உழைத்து உருவாக்கிய இலக்கண நூல்களைப் பிறர் பதிப்பிக்க முன்வராதபொழுது தாமே அச்சிட்டு வெளியிட்டவர்.

இவ்வாறு தமிழின் மேன்மைக்காகவும் தமிழ்த் தொண்டே என் பெருந்தொண்டு என வாழ்ந்து மறைந்த அந்தப் பெருந்தகையின் நினைவை உள்ளார்ந்து போற்றிடுகிறது சிறகு.

At the time do my uni essay for me to http://essayprofs.com/ of the survey, just more than half were enrolled full-time %, and students reported spending an average of

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “பேராசிரியர் அடிகளாசிரியர் மறைவு”
  1. kasi visvanathan says:

    ஐயாவின் மறைவில், அவர் நினைவேந்தி, அவர் அற்றிய அரும் பணியினை நம் உறவுகளுக்கும் பகிர்வோம். அகவை நூறு கண்டு, அருந்தமிழ் சேவையினை நம் உறவுகள் அறியச் செய்வோம்.

அதிகம் படித்தது