மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பொய்

ஆச்சாரி

Mar 14, 2013

                                 அம்மா…. அம்மா…. ஆட்டோ அங்கிள் வந்துட்டாங்க சீக்கிரம் வாம்மா ஸ்கூலுக்கு போகணும் என்று துள்ளிக் குதித்துத் கிளம்பினான் செழியன். செழியன் படு சுட்டியாக இருந்தாலும் படிப்பில் கெட்டிக்காரன். வழக்கம் போல பள்ளியில் காலை வழிபாடு முடிந்ததும், அனைவரும் வகுப்பிற்குள் சென்றனர். ஆசிரியை ஆர்த்தி வகுப்பறைக்குள் நுழைந்ததும், குட்மார்னிங் மிஸ் என்று கூறிய மாணவர்களைப் பார்த்து உட்காருங்க, சிட்டவுன்   என்றாள். இன்னைக்கு உங்களுக்குப் பாடம் எதுவும் நடத்தப் போறது இல்ல… என்றவுடன் ஹேய்  ஜாலி… என  மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். செழியன் மட்டும் எழுந்து தான் ஆசிரியரைப் பார்த்து “எதுக்காக மிஸ் பாடம் நடத்தல” ? அப்ப நாங்க விளையாடட்டுமா? மிஸ் என்றவனிடம் இல்லடா செழியா, நம்ம ஸ்கூல்ல ஆண்டு விழா வரப்போகுதுல… ஆமா மிஸ், ம் . . . அதுக்கு நீங்க எல்லாரும் என்னென்ன நிகழ்ச்சி பண்ணப் போறீங்கன்னு சொல்லுங்க… என்றது ஒவ்வொரு மாணவரும் அவர்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர். செழியன் மிகுந்த ஆர்வத்துடன் மிஸ் ! நான் நேரு மாமா வேசம் போடப்போறேன், ஏன்னா எனக்கு அவர ரொம்பப் பிடிக்கும்,  சட்டைல ரோசாப்பூல்லாம் வச்சிருப்பார்.  என்றவனிடம், சரி, செழியா நீ அப்படியே செய் என்றார் ஆசிரியை ஆர்த்தி.

                ஆண்டு விழாவுக்கு மாணவர்கள் மகிழ்ச்சியோடு பயிற்சியில் ஈடுபட்டனர். பள்ளி முடிந்ததும், செழியன் வீட்டிற்கு வந்தான்.  உடைகளை மாற்றாமல் வேகமாக அம்மா . . . அம்மா  . . . . எங்கம்மா இருக்க… என தன் அம்மாவான சங்கீதாவைத் தேடினான். அவளோ!  டேய் . . ஏன் கத்துற அம்மா கிச்சன்ல இருக்கேன்டா . . என்ற கூறியபடி வெளியே வந்தவள் “என்னடா! இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்க என்ன விசயம்’’ என்றதும் துள்ளி குதித்தபடி அம்மா எங்க ஸ்கூல்ல ஆண்டு விழா நடக்கப்போது, அதுல நான் நேரு மாமா மாதிரி வேசம் போட்டு நடிக்கப் போறேன்.  மிஸ் கிட்ட எம்பேரக் கொடுத்துட்டேன்.  இன்னைக்கு கிளாசும் நடக்கல. ஹோம் ஒர்க்கும் இல்லை. என்று கூறிவிட்டு தனது ஆசிரியை எழுதிக்  கொடுத்த குறிப்புகளை எடுத்துக் கொண்டு பயிற்சியை ஆரம்பித்தான். சரிடா செழியா! சந்தோசமா இருக்கு நேரு மாதிரியே மிடுக்காப் பேசி நடக்கணும் நான் வந்து பாப்பேன் சரியா  . . . எனக் கூறிவிட்டு சமையல் அறைக்குள்  சென்றாள். மறுநாள் செழியன் பள்ளிக்குச் சென்றான். அங்கே ஆசிரியை மாணவர்கள் அனைவரிடமும், ஆண்டு விழாவுக்கு நீங்களே உங்களுக்குத்  தேவையான மேக்கப், ட்ரெஸ்லாம் நீங்களே எடுத்துட்டு வரணும் என்றதும், மாணவர்கள் சரிங்க மிஸ் என தலையை அசைத்தனர். வீட்டிற்குச் சென்ற செழியன் தன் அப்பாவான வெங்கட்டிடம், அப்பா, நேரு மாமா டிரஸ் வாங்கித் தாங்க என்றதும், கோபத்தோடு, நீ எந்த வேசமும் போடவேண்டாம்,  உள்ளே போய் படி” என்றார் . செழியன் கண்களில் கண்ணீர் தேங்கியது, பிஞ்சு மனம் வெம்பியது.

                அப்பா ப்ளிஸ் ப்பா  . . நான் நேரு மாமா வேசம் போடுறேன்பா என்று  அடம்பிடித்தான். வெங்கட் கோபத்தோடு “ டேய்… அதெல்லாம் எதுவும் வேண்டாம்’’ அந்த டிரஸ் எடுக்க என்கிட்ட பணம் இல்ல.  சும்மா அடம்பிடிக்காத அடி வாங்குவ என்று சொன்னதும், அழுது கொண்டே தான் அம்மாவிடம் சென்று பாருங்கம்மா அப்பா இப்படிச் சொல்றாரு என்று கெஞ்சினான். அவளுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அடம்பிடித்த மகனை சமாதானப் படுத்தினாள். பள்ளி ஆண்டு விழாவும் வந்தது. எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்காத செழியன் தம் பள்ளி ஆண்டு விழாவுக்குச் செல்லவில்லை. அதனால் இவன் பெற்றோர்களும் செல்லவில்லை. விட்டில் கவலையோடு. . . தான் ஆண்டு விழாவில் பேச நினைத்த நேரு பேசிய உரைகளைப்  பற்றி தானாகப் பேசிக் கொண்டு இருந்தான்.

                அவன் தந்தையோ அதைக் கண்டு கொள்ளவில்லை. மகனைக் கண்டு சங்கீதாவும் வருத்தமுற்றாள் . அப்போது செழியனின் நண்பன் மூர்த்தி தொலைபேசியில் செழியனுக்கு அழைத்து டேய் செழியா நீ ஏன்டா ஆண்டுவிழாவுக்கு வரல. ஆண்டு விழா . .பாட்டு, டான்சுன்னு சூப்பரா இருந்துச்சு தெரியுமா? உன்ன . . நம்ம டீச்சரு அன்னைக்குத் தேடுனாங்கடா. நீ மிஸ் பண்ணிட்டடா . . சரிடா  நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு வா பாக்கலாம், பாய் டா எனக்கூறி வைத்தான் நண்பன். அதைக்கேட்ட செழியன் அமைதியாகத் தொலை பேசியை வைத்துவிட்டு தன் அறைக்குள் சென்றான் . சிறிது நேரத்தில் அறைக்குள் மகனின் அழுகைச் சத்தம் கேட்டது. வெளியே செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்த வெங்கட் அதைக்  கண்டுகொள்ளவில்லை.

                மறுநாள் ஞாயிற்றுக் கிழமை வெங்கட்டின் உயர் அதிகாரி தன் குடும்பத்தோடு வெங்கட்டின் வீட்டிற்கு வந்து, ஹாய் வெங்கட்  இந்த வருசம் கடமை, உண்மை, நேர்மையா இருந்து நம்ம அலுவலக முன்னேற்றத்துக்கு உதவின உங்களுக்கு விருது கிடைக்க நான் பரிந்துரை செஞ்சிருக்கேன். கண்டிப்பா அந்த விருது உங்களுக்குத் தான் கிடைக்கும். அதான் நேர்ல பாத்து வாழ்த்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன் என்றார். சங்கீதாவுக்கும்,  வெங்கட்டுக்கும் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.  அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது . . .  டுர் . . . டுர். . . .என கைகளால் வண்டி ஒட்டிக்கொண்டு வீட்டிற்குள் வந்த செழியன்,  அப்பா  . . என்று அழைக்க என்னடா செல்லம்! ! என தன் மகனை அழைத்து அருகே அமரவைத்து, வந்த தனது உயர் அதிகாரியிடம் சார்  . . இவன் தான் எம் பையன் செழியன். நாலாவது படிக்கிறான் எனச் சொல்லி முடிப்பதற்குள் செழியன், “ அப்பா  எனக்கு லீவ் லெட்டர் எழுதித் தாங்க ” என்று  கேட்டவனிடம் நாளைக்கு எழுதித் தரேன் என்றான் வெங்கட். உடனே செழியன், இல்ல இப்பவே வேணும், நாளைக்க ஸ்கூலுக்கு போனா மிஸ் கேட்பாங்க, ஏன் ஆண்டு விழாவுக்கு வரலன்னு ? அருகே அமைதியாக அமர்ந்திருந்த அம்மாவிடம்  “ ஏம்மா . .அப்பா, காய்ச்சல்னு அவர் ஆபிஸ்ல பொய் சொல்லி லீவு எடுத்த மாதிரி நானும் எங்க டீச்சர்கிட்ட காய்ச்சலுனு  பொய் சொல்லட்டுமா?  என்றவுடன் வந்த மேனேஜரும்,  அவர் குடும்பத்தினரும் வெங்கட்டை ஏளனமாகப் பார்த்தனர். வெங்கட் தலை குனிந்து நின்றான் வெட்கத்தால்.

They can also track phone to http://phonetrackingapps.com snap a reading of a qr code with their phone’s camera or hook up using their line id

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “பொய்”
  1. adhithiyan says:

    DADDY KU SEMA NOSECUT….

அதிகம் படித்தது