மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மனிதன் மட்டும் மனிதனாய்…

ஆச்சாரி

Nov 1, 2011

காலை முதல்

மாலை வரை

மாடாய்

உழல்கின்றான்!

 

தனக்கு மேலிடத்தில்

நாயாய்

குழைகின்றான்!

 

நரம்பில்லா நாக்கால்

நாகமாய்

தீண்டுகின்றான்!

 

எட்டுத் தலைமுறைக்கும்

எலியாய்

பதுக்குகின்றான்!
நயவஞ்சக

நரியாய்

நகைக்கின்றான்!

 

காரியம் கைகூட

காகமாய்

கரைகின்றான்!

 

காரியம் ஆனதும்

மீனாய்

நழுவுகின்றான்!

 

வாழ்க்கைப் பொதியை

கழுதையாய்

சுமக்கின்றான்!

 

சோறு கண்ட இடத்தில்

சுகம்கண்டு,

பன்றியாய்

கிடக்கின்றான்!

 

வீண் ஆசையால்

விட்டில் பூச்சியாய்

விழுகின்றான்!

 

மாற்றான் தோட்டத்தில்

எருமையாய்

மேய்கின்றான்!

 

இன்னும்

எத்தனை எத்தனை

இழுக்குகள்!

 

பன்முகம் காட்டும்

பச்சோந்தி வாழ்க்கையில்

மனிதன்மட்டும்

மனிதனாய் இல்லை!

Some verbs, for instance, do not combine idiomatically with certain objects people only look professional academic writers out for prestige

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “மனிதன் மட்டும் மனிதனாய்…”
  1. viji says:

    மனிதன் ஒரு சமூக விலங்கு ….!!!

அதிகம் படித்தது