மன ரீதியான பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் .
ஆச்சாரிJun 15, 2013
- தூக்கமின்மை, பசியின்மை, அன்றாட விசயங்களில் ஈடுபாடு இல்லாமை.
- எப்போதும் உடலில் ஓர் அசதி, வலி
- நடைப்பிண வாழ்க்கை, விரக்தி மனப்பான்மை, எதிர்மறை எண்ணங்கள்.
- தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இல்லாமை.
- அதிகமான குற்ற உணர்வு
- தாம்பத்ய உறவில் நாட்டமின்மை.
- தற்கொலை எண்ணங்கள், தற்கொலை முயற்சி
- நெஞ்சு படபடப்பு, கை நடுக்கம், அதிக வியர்வை
- தூக்கமின்மை, கவனச் சிதறல்
- எப்போதும் மனதில் ஒருவிதமான பய உணர்வு
- தேவையற்ற எரிச்சல், கோபம்
- தனிமையில் இருக்கவும், வெளியூருக்குத் தனியாகச் செல்லவும் பயம்
- பயத்தின் காரணமாக சமூக நிகழ்வுகளில் இருந்து ஒதுங்குதல்
- ஒரே மாதிரியான தேவையற்ற எண்ணங்கள் மீண்டும், மீண்டும் வந்து தொல்லை தருவது.
- ஒரே செயலைத் திரும்ப திரும்ப செய்வது, உதாரணமாக, கை கழுவுவது, பணத்தை எண்ணிப்பார்ப்பது, கதவுத் தாழ்ப்பாளை மீண்டும் சரிப்பார்ப்பது.
- மருத்துவர் எந்த நோயும் இல்லை என்று சொன்னாலும் ஒருவித பயத்துடன் மீண்டும் மீண்டும் பல மருத்துவர்களை ஆலோசிப்பது, ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் போன்றவற்றை எடுப்பது.
- குறிப்பிட்ட வயதுக்கு மேலும் படுக்கையில் சிறுநீர் கழித்தல்.
- பள்ளிக்கு செல்ல பயம்
- படிப்பில் ஆர்வமின்மை
- கவனக்குறைவுடன் கூடிய அதிக சுறுசுறுப்பு , ஒரு இடத்தில் உட்காராமல் அடிக்கடி அடிபட்டுக் கொள்ளுதல்
- குடிப்பழக்கம்
- கணவன்-மனைவி உறவுச் சிக்கல்கள்
- செக்ஸ் சம்பந்தமான பிரச்சனைகள்
- சாமியாட்டம்/ பேய் பிடிப்பது/ பல் கட்டிக் கொள்வது.
- தனக்குத்தானே சிரித்துக்கொள்வது
- காதில் மாயக்குரல்கள் கேட்பதாக உணர்வது.
- சந்தேக எண்ணங்கள் தோன்றுவது.
- உறவினர்கள் மற்றும் பிறர் தனக்கு எதிராகச் செயல் படுவதாகவும் , தனக்குப் பில்லி சூனியம் செய்வதாகவும் எண்ணுவது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் பத்து சதவீதம் மன நோயாளிகளே. மேலே கண்ட அறிகுறிகள் அதிகம் கொண்ட நபர்கள் நல்ல மனநல மருத்துவரைச் சந்திப்பது அவசியமாகும்.
The https://pro-academic-writers.com/ robust tagging of unrestricted text the bnc experience
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மன ரீதியான பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் .”