மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மருந்து வித்தியாசம்

ஆச்சாரி

Nov 1, 2011

புகழ்பெற்ற நிறுவனத்தின் (Branded) மருந்து மற்றும் பொது (ஜெனிரிக்) மருந்து வித்தியாசம் என்ன?
ஒரு மருத்துவ நிறுவனம் புதிதாக ஒரு மருந்து கண்டுபிடித்தால் அதை உடனே காப்புரிமை (patent) செய்து விடும். இதன் மூலம் இருபது வருடங்களுக்கு மற்ற போட்டி  மருத்துவ நிறுவனங்கள் இதே மருந்தை தயாரிப்பது தடுக்கப் படுகிறது. இந்த காப்புரிமை காலத்தில் மருந்தை கண்டறிந்த நிறுவனம் தன் நிறுவனப் பெயர் கொண்டு மருந்துகளை வெளியிடுகிறது. இதை மருத்துவத் துறையினர் ஆங்கிலத்தில் பிராண்டட் (Branded) மருந்து என்று அழைக்கின்றனர். இந்த மருந்துகளின் விலை மிக அதிகமானதாக இருக்கிறது.
இருபது வருடங்களுக்கு பின் இந்த காப்புரிமை காலாவதி ஆகிவிடுகிறது. இதற்கு பின்பு மற்ற மருத்துவ நிறுவனங்கள் இதே கலப்பில் வேதியல் பொருட்களை சேர்த்து அதே மருந்துகளைத் தயாரிக்கின்றன. அதுவே பொது மருந்து (ஜெனிரிக் மேடிசின்) என்று மருத்துவத் துறையினரால் அழைக்கப்படுகிறது. இதே வேதியல் கலப்பில் எந்த  மருந்து நிறுவன மருந்தை உட்கொண்டாலும் ஒரே பலனை தான் தரப்போகிறது. பலன்களில் எந்த மாற்றமோ குறைகளோ ஏற்பட போவதில்லை.ஆனால் பொது மருந்துகளின் விலையோ பல மடங்கு குறைவு. அதனால் தான் மேலை நாடுகளில் மருத்துவமனையில் மருந்து சீட்டு கொடுக்கும் போது பொது மருந்துகளையே வாங்குங்கள் என்பர். நீங்களும் மறக்காமல் மருத்துவரிடம் பொது மருந்துகளை எழுதிக் கேட்டு மருந்து செலவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். Consultancy projects, schools and community links students 100 free essays online can put their knowledge into practice through collaborative work with partners


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மருந்து வித்தியாசம்”

அதிகம் படித்தது