மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மானமுள்ள தமிழர்களுக்கு . . . (பொங்கல் சிறப்புக் கவிதை)

ஆச்சாரி

Jan 18, 2014

சக தமிழன் சாகக்  காண்பான்

செத்தவன் தமிழன் அல்ல மனிதன்  என்பான்

மனிதத்துக்கும், தற்காப்புக்கும் இடைவெளி

தெரியாத தமிழன்

 

இன உணர்வைப் பின்நிறுத்தி

சாதி உணர்வை முன்னிறுத்தி

வேற்றுமையில் ஒற்றுமை காண

வக்கில்லாதவன் தமிழன்

 

நீர்நிலைகளை விட்டுக்கொடுத்தான்

பச்சைத் தமிழன் -அன்று

நீருக்கு அண்டை மாநிலத்தில்

பிச்சை எடுக்கிறான் -இன்று

 

மாநில எல்லைகளை விட்டுக் கொடுத்தான்

பெருந்தன்மை என்று பறைசாற்றுவான்

 

வேற்று மாநிலத்தில் வேலை செய்கிறான்

மாற்றான் என்று அடிக்கிறான் அவனோ

வாங்கிகொண்டு அழுகின்றான் இவனோ

 

நன்கு கற்பான்

பணிவுடன் வேலை செய்வான்

தன்னிலை அறியாதவன்

ஆளுமை கொள்ளாதவன்

இந்த நவீன உலகத்தின்

சிறந்த நவீன அடிமை தமிழன்

 

 

தமிழன் என்று கூறி

அடிப்பான் எவனோ

ஆனாலும் தமிழனாகச்

சேர மறுப்பான் இவனோ

 

அடித்தாலும் தாங்குவான்

இடித்தாலும் இளிப்பான் இந்தத்

தன்மான உணர்வில்லாத் தமிழன்

 

வம்சத்தையே அளித்தும்-எவராவது

வந்தே மாதரம் எனச்சொன்னால் கூட-

தனது . . .

வலியை தமிழ்  . . .

மறந்து மெய்சிலிர்த்து நிற்பான்

 

இந்திய தேசிய

மானம் இல்லாத் தமிழன்

His current research involves the acquisition of cognitive skills and the understanding of how human cognition is adapted to writing services for https://pro-academic-writers.com/ the information processing demands of the environment

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மானமுள்ள தமிழர்களுக்கு . . . (பொங்கல் சிறப்புக் கவிதை)”

அதிகம் படித்தது