மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மாரத்தான் வந்த கதை தெரியுமா?

ஆச்சாரி

Oct 1, 2011

டாரியஸ் என்ற பெர்சிய அரசன் அறநூறு கப்பல்களில் ஆயிரகணக்கான போர்வீரர்களை ஏதென்ஸ்  நாட்டினரய் எதிர்த்து போர் தொடுக்க அனுப்பினான். ஏதென்ஸ்  நாட்டினர் ஸ்பார்டன் படையின் உதவியுடன்  தான் டாரியஸ்  படையை வெல்லமுடியும் என்று முடிவு செய்து உதவி கோர எத்தனித்தனர்.

உடனே  தகவலை தெரிவிக்க இன்று போல் தொலை தொடர்பு வசதியோ வலை, அலை பேசி வசதியோ இல்லை. எனவே அதி விரைவாக ஓடக்கூடிய ஓட்ட பந்தைய வீரன்( pheidippides ) பைடிபைட்சை தேர்ந்தெடுத்தனர். இரண்டு நாட்கள் இரவு பகலாக ஓடி, நீந்தி, மலைகளில் ஏறி ஸ்பார்ட்டாவை  அடைந்தான் பைடிபைட்ஸ்.

இரண்டாயிரம் வீரர்களை அனுப்ப சமதித்தனர் ஸ்பார்டன்கள். ஆனால் முழு நிலவு அன்று நடை பெரும்  மத திருவிழா முடியும் வரை ஸ்பார்ட்டாவை விட்டு வீரர்களை வெளியனுப்ப முடியாது என்றனர். மீண்டும் இச்செய்தியுடன்  ஏதென்ஸ் நோக்கி ஓடினான் பைடிபைட்ஸ் .
முழு நிலவு வரை காத்திருக்க முடியாது,  பெர்சியர்கள் நெருங்கி விட்டார்கள், போருக்கு ஆயத்தமாகுங்கள் என்று
ஏதென்ஸ் படைத்தலைவன் தன் படை வீரர்களுக்கு ஆணையிட்டான். இதற்கிடையில் டாரியஸ் மன்னனின்  பெர்சிய படை  கப்பல் மாரத்தான் என்ற இடத்தை வந்தடைந்தது. அங்கிருந்து ஏதென்ஸ் நகரை நோக்கி படையெடுக்க திட்டம் தீட்டி இருந்தனர் பெர்சிய படையினர்.கிரேக்க படையினர் குறைந்த அளவில் இருந்தனர். எனவே கிரேக்க படை தலைவர் முதலில் பெர்சிய படையினரை எதிர்பாரா விதமாக ஆக்ரோசமாக தாக்கலாம் என்று சமயோசிதமாக முடிவெடுத்தார் . இந்த எதிர்பாராத உடனடி ஆக்ரோஷ தாக்குதலில் நிலை குலைந்து அதிர்ச்சியில் பெர்சிய படையினர்  கப்பலை நோக்கி திரும்பி ஓடினர். இறுதியில் பெர்சிய படையினரே  கிரேக்க படையினர்களை விட அதிக  உயிரிழந்தனர்.
மறுபடியும் கிரேக்க படை தலைவர் பைடிபைட்சை  வெற்றி செய்தியை ஏதென்ஸ் ஓடி சென்று கூறுமாறு கேட்டுக்கொண்டார். ஏற்கனவே போரினால் அதிக சோர்வடைந்திருந்தான்  பைடிபைட்ஸ். ஆனாலும் மீண்டும் எவ்வளவு அதிகமாக ஓட முடியுமோ அவ்வளவு ஓடி, ஓடி இருபதிற்கும் அதிகமான மைல்களை கடந்தான்.  மூச்சிரைக்க  ஏதென்ஸ் நகரை அடைந்து ஒரு பெறு மூச்சுடன் வெற்றி செய்தியை கூறியவுடன் உயிர் நீத்தான் மாவீரன் பைடிபைட்ஸ்.

இந்த போரில்
பைடிபைட்ஸ் ஆற்றிய பனியின் நினைவாகத்தான் மாரத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன. 

முழு மாரத்தான் ஓட்டம் என்பது  42.195 கிலோ மீட்டர்  (26 மைல்கல் மற்றும்  385 யார்ட்ஸ்/நீட்டளவு) ஆகும்.

 

 


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாரத்தான் வந்த கதை தெரியுமா?”

அதிகம் படித்தது