மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மார்பக சூடு (breast ironing)

ஆச்சாரி

Nov 1, 2011

மார்பக சூடு (breast ironing)  என்று அழைக்கப்படும் உடல் உருசிதைவு (body mutilation)  வன்கொடுமை ஆப்ரிக்க கண்டம் கேமரூன் நாட்டில்  பரவலாக நடந்து வருகிறது.  இங்கு வசிக்கும் நான்கில் ஒரு பெண்ணுக்கு  இக்கொடுமை நடக்கிறது. இது வரை புள்ளி விவரப்படி 3.8 மில்லியன் பெண்களுக்கு இக்கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது. இந்த மிருகத்  தனத்தை  பெற்ற தாய்மார்களே தங்கள் குழந்தைகளுக்கு விரும்பிச் செய்கின்றனர்.

கேமரூனில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த கொடுமையான பழக்கம்  நடைமுறையில் உள்ளது. கேமரூனின் தென்கிழக்கு பகுதியில் ஐம்பத்துமூன்று  சதவிகிதம் அண்மையில் அதிகரித்துள்ளது.  இதற்கு காரணம் இளவயது பருவமடைதல் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேம்பட்டுவரும் உணவு பழக்கம் பெண் குழந்தைகளின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது என்பதே அதற்கு காரணம்.

சுமார் ஒன்பது வயது பெண் குழந்தைகள் பருவமடையும் தருவாயில் இக்கொடுமையை சந்திக்கின்றனர். சூடான கல், தேங்காய் ஓடு, வாழைப்பழம், கிழங்குகளை மசிக்கும் மர உலக்கை கட்டை, சாணை கற்கள், மர கரண்டி  மற்றும் சுத்தியல்  போன்றவற்றை நிலக்கரி மேல் வெப்பமூட்டி  உபயோகிக்கின்றனர். சூடு ஏற்றப்பட்ட பொருள்களை கொண்டு பெண் குழந்தைகளின் வளரும் மார்பகங்களை அழுத்தி பட்டையாக்க அல்லது மறைந்து போகவைக்க முனைகின்றனர்.

கேமரூனின் தாய்மார்கள் மார்பக சூடு அவர்களின் பெண் குழந்தைகளை இளம் வயது பாலியல் கொடுமைகளை தடுக்கும் அரணாகவே கருதுகின்றனர். இதன் மூலம் மார்பக வளர்ச்சி தள்ளி போடப்படுகிறது, அதனால் ஆண்கள் ஈர்க்கப்படுவது தடுக்கப் படுக்கிறது என்று நம்புகின்றனர். இளமைக் கால பாலியல் தாக்குதல் மற்றும் பதின்வயது கருவுருதலை தடுக்க முடியும் என்றும் நம்புகின்றனர்.

குடும்பப் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக இதைச் செய்கிறோம். எங்களுக்கும் எங்கள் தாய்மார்கள் இதையே தான் செய்தார்கள். மேலும் கல்விகற்க எவ்வித தடையும் இல்லை, இவ்வாறு செய்வதால் பால்ய திருமணமும் தடுக்கப்படுகிறது என்று பெருமையாக தாய்மார்கள் கூறுகின்றனர்.  எங்கள் குழந்தைகளை காப்பாற்றவே இவ்வாறு செய்கிறோம் என்று அறியாமையுடன் நியாயப் படுத்துகின்றனர்.

இக்கொடுமைக்குப் பின் அக்குழந்தைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். தீக்காயங்கள் மற்றும் உருச்சிதைவு  போன்ற பல உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு இது வழிவகுக்கும் என்று மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.

மார்பக புற்று நோய், நீர்க்கட்டி, மன அழுத்தம், மார்பக தொற்று, உருக்குலைந்த மார்பகம், முழுமையடையாத ஒரு அல்லது இரு மார்புகள் வர வாய்ப்புள்ளது. பல பெண்கள்  பிற்காலத்தில் அவர்களின் குழந்தைகளுக்கு பால் புகட்ட முடியாமல் போய் முடியக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது  என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சியை கொண்டு அக்குழந்தை பாலியல் உறவிற்கு தயாராகி விட்டாள் என்று முடிவு செய்யும் உலகத்தை நினைத்தால் பதறுகிறது உள்ளம். இவை அனைத்திற்கும் கல்வி இன்மை மற்றும் விழிப்புணர்ச்சி குறைவு தான் காரணம்.

ஜெர்மன் மேம்பாட்டு நிறுவனம் ( GTZ) நடத்திய ஆய்வில் கடந்த 2006 ஜூன் மாதத்தில் இருந்து சுமார் பத்து வயது முதல் எண்பத்திரண்டு வயது வரை உள்ள பெண்களில் ஐயாயிரம் பேர்கள் இக்கொடுமையால்  பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மை காலமாக இக்கொடுமை அதிகரித்து உள்ளதால்  பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களை  நாடு முழுவதும் செய்கின்றன.

மேலும்  அரசு சார்பற்ற நிறுவனங்கள் இளம் தாய்மார்களுக்கு ஊக்கமளித்து மார்பக சூடிற்கு எதிராக பிரசாரம் செய்கின்றன. பல பாதிக்கப்பட்ட பெண்களும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். பள்ளிகளிலும், கல்விக் கூடங்களிலும் இளம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயலுகின்றனர்.

தாக்கு, தெரேஸா தெச்சு போன்ற பாதிக்கபட்ட பெண்கள் நிறைய விழிப்புணர்வு  பட்டறைகள்  நடத்துகின்றனர். தெரேஸாவின் தாய் அவருக்கு ஒன்பது வயதில் சூடு வைத்தார் என்று மிகவும் வலியுடன் பழையவற்றை CNNக்கு அளித்த பேட்டியில் நினைவு கூறுகிறார். இப்பொழுது அவருக்கு பதினெட்டு வயதானாலும் மிகவும் ஆறாத மறவாத வலியுடனே அவ்விடயத்தை பற்றி கூறுகிறார். பள்ளிக்கு செல்லும் முன்பு தினமும் காலையில் தன் தாய் கிரேஸ் சூடான குழவியை வைத்து சூடு போடுவார் என்றும், இவ்வாறாக  தொடர்ந்து  பல வாரங்கள் சூடு வைக்க பட்டதையும் நினைவு கூறுகிறார். ஒரு நாள் குழவி சூடு அதிகம் ஏறி தன்னைப் பொசுக்கிவிட்டதாகவும் கூறுகிறார்.

மோனிக்கா என்ற ஒரு தாயை நேர்காணல் எடுத்த போது இப்பொழுதுதான் அண்மையில் தான் தன் ஒன்பது வயது மகளுக்கு சூடு வைத்ததாக கூறினார். சூடுவைக்கும் போது குழந்தை பெஷ்ஷி அழுது ஓடுவாள். அவளை நான் கெட்டியாக பிடித்துக் கொள்வேன். ஒரு நாளைக்கு இரு முறை என்ற கணக்கில் இரண்டு மாதங்களுக்கு சூடு வைக்க வேண்டும் என்கிறார். சூடு ஏற்றிய கல்லை இதற்கு பயன் படுத்தினேன் என்றும்,  தன் மகள் பெஷ்ஷி ஒரு குழந்தையை  வளர்க்கும் அளவிற்கு முதிர்ச்சி அடையவில்லை இல்லை என்றும் கூறுகிறார். இவ்வாறு செய்வதால் என் குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் படுவது தள்ளி போகும். மேலும் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற  வாய்ப்பிருக்கிறது என்கிறார் தாய் மோனிகா.

முந்தைய தலைமுறையினர் இக்கொடுமையான பழக்கத்தை ஏற்றுக்கொண்டு விட்டாலும், இளைய தலைமுறையினர் இதை கடுமையாக எதிர்க்கின்றனர். சிறு வயது திருமணம் மற்றும் தாய்மையை தடுப்பதற்கு சூடு வைப்பது தீர்வில்லை என்றும் அதற்கு மாறாக உடலமைப்பைப் பற்றியும் குழந்தை உருவாகாமல் எப்படி தடுப்பது என்பதை பற்றியும் விளக்குவதே தீர்வாகும் என்று இளைய தலைமுறையினர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். This is an important clue that they are do my uni essay able to process information that represents number at a rather abstract level


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “மார்பக சூடு (breast ironing)”
  1. kasi visvanathan says:

    பாலியல் மட்டுமல்ல சமூக அளவிலும் பெண்களின் எதிர்கொள்ளல் என்பது மிக மோசமான நிலையில் தான் உள்ளது. இங்கு பலர் தங்களின் பெண்களின் தற்காப்பு கருதி செய்யும் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வும், அதற்கான பாதுகாப்பும் உறுதிசெய்ய வேண்டும். இப்படி ஒரு சமூக நிகழ்வை பலரும் அறியத்தந்த கட்டுரை ஆசிரியருக்கும் நன்றி.

  2. Nellai Kumaran says:

    சிறு வயதில் எகிப்து போன்ற ஆபிரிக்க பழங்குடி பெண்களின் கொடுமைகளைப் படித்தோம் (Unesco Courier). சில நாட்கள் முன் Waris Dirie அவர்களின் பால்ய வயது கொடுமைகளைப் படித்தோம். இது போன்ற கொடுமைகள் எப்போது மாறும் ?

  3. அசோக் குமார் says:

    நல்ல கல்விதான் சமுக மாற்றத்தை உருவாக்கும், இந்த மக்கள் நல்ல மாற்றத்தை அடைந்திட எல்லாவள்ள இறைவன் அருள்புரிவராக

அதிகம் படித்தது