மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மீன் உணவு (கட்டுரை)

ஆச்சாரி

May 1, 2013

 மனிதர்கள் மீன் பிடி கலையைக்  குறைந்தது சுமார் 42,000 ஆண்டுகளுக்கு முன்பே பாலியோலித்திக் காலம்  முதலே செய்து வருகின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். நாற்பது ஆயிரம் (40,000) ஆண்டுகளுக்கு முன்பு டுனா(tuna) போன்ற நீரின் ஆழத்தில் வேகமாக நகரும் மீனைக்கூட லாவகமாகப் பிடிக்கும் திறமையுள்ளவராக இருந்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். ஆஸ்த்திரேலிய ஜெரிமலை குகை தளத்தில் அகழ்வரைச்சியின் போது   23,000 முதல் 16,000 ஆண்டுகளுக்கு முன்னர் உபயோகப்படுத்திய மீன் கொக்கியைக்  கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

மீன் உணவும் மனித மூளையின் பரிணாம வளர்ச்சியும்:
மனித மூளையின் பரிணாம வளர்ச்சி அளவு கூட,அதிக கடலுணவு உண்பதினால் இருக்கக்கூடும் என்று மானுடவியலாளர்களுக்கு  மத்தியில் கருத்து இருக்கிறது.  ஏராளமாக கடல் உணவுவில் மூளைக்குத்தேவையான  தேர்ந்தெடுக்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கலவையாக இருந்ததுள்ளதால்  இக்கருத்து நிகழ்கிறது. மூளைக்கு தேவையான அயோடின் மற்றும் புரதம் மீனில் அதிகம் நிறைந்துள்ளது.

இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கடல் மீனில் ஏராளமான  ஒமேகா-3- கொழுப்பு அமிலம் (Omega-3 fatty acids) உள்ளதால் மீன்  மூளைக்கும், இதயத்திற்கும் நல்லது என்கின்றனர். குறிப்பாக பாசிநிறம் அதிகமுள்ள அடர் நிறமுள்ள மீன் வகைகளில்  ஒமேகா-3- கொழுப்பு அமிலம் அதிகளவில் காணப்படுகிறது. மீன் உணவை அதிக அளவில் சேர்த்து கொண்டால் நினைவுத் திறன் அதிகரிக்கும், வயதான காலத்தில் தாக்கும் மறதி நோய் (Dementia and Alzheimer ‘s disease) வராது என்று கண்டறிந்துள்ளனர். மீன் இரத்தக் குழாய்களில் இரத்தம் கட்டியாகி அடைப்பதை தடை செய்கிறது.  கடல் மீனில் உள்ள  DHA (Docosahexaenoic acid) என்ற வேதிப்பொருள் குழந்தைகளின்  அதிகமான செயல்திறனையும் (hyperactivity), நடத்தை கோளாறுகளையும் (behavioural problems) சரிசெய்வதாகவும், மேலும் அவர்களின் கல்வி தொடர்பான திறமைகளை அதிகரிப்பதாகவும், கவன ஈர்ப்புத் திறன்  கூடுவதாகவும்  ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

வாரம் ஒரு முறை மீன் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு வருவது ஐம்பது சதவிகிதம் (50 %) தடுக்கபடுகிறது.    மாதம் மூன்று முறை மீன்/கடல் உணவு உண்டால் இதய நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோயில் இருந்து தப்பிக்கலாம். அதிக கொழுப்பு உள்ள மீனின் எண்ணெயிலுள்ள (Eicosapentaenoic acid (EPA) and Docosahexaenoic acid (DHA)   இயற்கையான ஒமேகா-3 – கொழுப்பு அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிக்கிறது. டி ஹெச் எ (DHA) என்பது பொதுவாக கருவில் வளரும் குழந்தையின் துவக்க காலத்தில் மூளை மற்றும் கண்ணின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இது மூளை வளரும் போது  மூளையின் செல்களைத் தூண்டுகிறது. கருவுற்றிருக்கும் தாய் மற்றும் குழந்தை பெற்ற தாய்க்கும் மீனுணவு மிக நன்மையானது.

தாய்ப்பாலில் டி ஹெச் எ (DHA) மற்றும் அரச்சிடானிக் அமிலம் (arachidonic acid) இருப்பதால்,  தாயப்பால் குடித்த குழந்தைகளின் கண்பார்வை நன்றாகவும், மூளைத்திறன் அதிகமாகவும் இருக்கிறது. டி ஹெச் எ (DHA) மகப்பேறு காலத்தில் உண்டாகும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.  பொதுவாக கடல் மீன் உண்பதன் மூலம் மன இறுக்க நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. மீனை அதிக அளவில் உண்பதால் உடல் பருமன் அடைந்து விடுமோ என்ற கவலை தேவை இல்லை.

புற்று நோய் அபாயம் மற்றும் இரண்டாம் வகை சர்க்கரை நோயும் இதனால் குறைகிறது. மூட்டு வலி மற்றும் கீழ்வாத வலியைக் குறைக்கிறது. நுரையீரலைக் கண்காணித்து, பாதுகாத்து, சுவாசம் தொடர்பான சங்கடங்கள் வராமல் கவனித்துக் கொள்கிறது.

ஒமேகா-3 -கொழுப்புகள் (Omega-3 fats) நமது தோலை பளபளவென ஆக்குகிறது. முதுமைக் காலத்தில் கொலாஜென் (collagen) சிதைவால் ஏற்படும் தோல் சுருக்கத்தையும் இது  குறைக்கிறது. பொதுவாக ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் சீரணப் பிரச்சினைகள்  மீன் உணவு உண்டு வந்தால்  நம்மை அணுகாது.

இத்தனை   பயன்களும் குழம்பு மீனால் தான், வருக்கும் பொறித்த  மீனில் இப்பலன்கள் கொஞ்சம் குறையும். வறுத்த மீனில் கொழுப்பு சத்தும்  கூடிவிடும். எனவே அதிகம் குழம்பு மீனை உண்டு வளமான ஆரோக்கிய வாழ்வை பெறுவோம்.

These findings get altered here suggest that the brain is a dynamic organ, shaped to a great extent by experienceby what a living being does, and has done

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “மீன் உணவு (கட்டுரை)”
  1. charan says:

    amma kai mootu kela 2inch plate vachuruku periyavagsluku mootu join panathunu soluraka bloonku strength koodukarathu eappadi enna sapadaum spelling thapa erutha sorry ennaku help panuga

அதிகம் படித்தது