மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முடமாகும் ஊடக தர்மம்!

ஆச்சாரி

Feb 15, 2012

ஊடகங்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என சொல்லும் அளவுக்கு அவை மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்து விட்டன. ஒரு நாட்டின் முதுகெலும்பு ஊடகங்கள் தான் என்று சொன்னால் அது மிகை ஆகாது .  எந்த நாட்டில் ஊடகங்கள் தங்கள் கடமையைத் தவறாமல் செய்கின்றனவோ அந்த நாட்டில் அரசு இயந்திரம் சரியாக இயங்கும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாதது என்பதை யாரும் மறுக்க முடியாது.  இந்திய சுதந்திரப் போராட்டத்தை நெஞ்சில் நெருப்புப் பிழம்பாக சுமந்த பாரதியும் , காந்தியும் இதழ்களுக்கு ஆசிரியராக இருந்து ஊடகங்களின் வாயிலாக தங்கள்  கருத்தை எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஊடகங்களின்  கடமையானது , அறத்தை நிலைநிறுத்தி , மக்கள் நலன் பேணி, உண்மையை உரக்கக் கூறவேண்டும். இனக்கலவரங்கள் , மதக்கலவரங்கள் , போர் என அனைத்தையும் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அதற்கு  உண்டு.

உலக வரலாற்றில் இருந்து  உதாரணங்கள் சில .   1948 , சனவரி 30 ல் மகாத்மா காந்தி சுடப்படுகிறார் .  அவர் இறந்து விட்டார் என மருத்துவர்களால் உறுதி செய்யப்படுகிறது. அப்போது பிரதமராக இருந்த நேரு அவர்கள் இந்த சோகச் செய்தியை இந்திய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆனால்   செய்தி வந்த அடுத்த கணமே இந்தியா கலவர பூமியாக மாறிவிடுமே என அச்சம் நேருவுக்கு  மேலோங்குகிறது.  அவர் மவுண்ட் பேட்டன் பிரபு அவர்களிடம் இதைப்பற்றி ஆலோசனை கேட்கிறார்.  ஊடகத்தின் தாக்கத்தை உணர்ந்த மவுண்ட் பேட்டன் அவர்கள்  கூறுகிறார் ,  “ காந்தி சுடப்பட்டார் என மட்டும் போடாமல் ஒரு வார்த்தையையும் அதில் சேருங்கள் , அதாவது கோட்சே என்ற  ஒரு இந்துவால் சுடப்பட்டார் என்று செய்தி கொடுங்கள்”  என அறிவுரை கூறினார். மதக்கலவரத்திற்கான அபாய நிலை அந்நாளில் தடுக்கப்பட்டது.

1972 ம் ஆண்டு,  சூன் 8 – ஆடைகள் இன்றி,  9  வயது வியட்நாம் சிறுமி அலறிக்கொண்டு ஓடி வரும் புகைப்படம் நாளிதழ்களில் வெளிவந்தது  , மனித நேயம் கொண்டோரும், உலக நாடுகள் அனைத்தும் அதைக்கண்டு துடித்தன. அந்தத் துடிப்பே  வியட்நாமின் போரை நிறுத்தியது.  ஆனால், இன்றைய நிலையில் தமிழகத்தில் தங்களை  முக்கிய நாளிதழ்கள்  என கருதிச்  செயல்படும் பெருத்து வளர்ந்த சில  ஊடகங்கள்  வெளியிடும் செய்திகள் தமிழர்களின் நலனை மிகவும் பாதிப்பதாக உள்ளது. குறிப்பாக 2009 ல் ஈழத்தில் நடந்த தமிழர் இனப்படுகொலையை பெரிதாக கண்டு கொள்ளாத ஒரு நாளிதழ்,  கூடங்குளம் பிரச்சினையைக்  கையாண்டவிதம் , தமிழ் மக்களை முற்றிலுமாக திசைதிருப்பும் முயற்சியாக இருந்தது . அணுவுலைக்கெதிராக மக்கள் போராட்டம் வலுப்பெறும் போது,  அணுவுலைக்கு ஆதரவான செய்தியை தீவிரமாக போட்டு போராட்டத்தின் வன்மையைக் குறைக்க தன்னால் ஆன  முயற்சியை செவ்வனே செய்தது. அதைப்போன்றே  மற்றுமொரு  நியாயமான  முல்லைப் பெரியாறு போராட்டம். மக்கள் மத்தியில் வலுப்பெற்றிருக்கும் இத்தருணத்தில் , தமிழர்களுக்கு எதிராகவும் கேரளாவுக்கு ஆதரவாகவும் சில செய்திகளை – தமிழர்களின் தயவில் வாழ்ந்து கொண்டே வெளியிடுகின்றன சில இதழ்கள்.

அவர்கள் கூறும் செய்தி,  முல்லா பெரியாறு ( முல்லைப்பெரியாறு ) கேரளாவிற்குத்தான் உணர்ச்சிகரமான சிக்கலாம்  ,  அது தமிழகத்திற்கு இல்லையாம். தமிழத்தில் அரசியல்வாதிகள் தென் மாவட்ட மக்களின் வாக்கைப் பெற இப்பிரச்சினையை  பயன்படுத்திக்கொள்கின்றனர் என செய்தியை கேரளாவிற்கு சாதகமாக, லாபகமாக நகர்த்துகின்றார்கள் .

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்களை – சமூக விரோதிகள் போலவும் வன்முறைக்காரர்கள் என்றும் சித்திரித்து எழுதி, அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எக்காளமிட்டது,  தமிழ் நாளிதழ் ஒன்று.

இதைப்போல செய்தியை எல்லாம் சில ஆங்கில, தமிழ் முன்னணி நாளிதழ்கள்  கண்டுகொள்ளவே இல்லை.  தேடிக்கண்டுபிடித்து தமிழனுக்கு எதிரான போலிச் செய்தியை போடத்துடிக்கின்றன. இந்த இதழ்கள்  எல்லாம் தமிழனின் உழைப்பில் வியர்வையில் நன்றாகத் தின்று  திளைக்கின்றன. இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து செயல்பட்டு தமிழனுக்கு எதிரான பொய்ச் செய்தியைப்போடும் ஊடகங்கள் இனக்கலவரத்திற்கு துணை நிற்கின்றன.   எவ்வாறு (1843 லிருந்து 2011 )  இங்கிலாந்தில் மிகப்பிரபலமாக  செயல்பட்ட ‘நியுஸ் ஆப் தி வேர்ல்டு’ மூடப்பட்டதோ, அதே போல் இவையும் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாது , இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். அதற்கு இந்தியாவின் சட்டங்கள் கூர்மையாக்கப்படவேண்டும். ஒரு பணிவான வேண்டுகோள்: மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார் “உன்னுடைய பேச்சு, எழுத்து, செயல் சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கிற கடையனுக்கும் சிறிதாவது பயன்படுமா,  நன்மை தருமா என்று யோசித்துப் பார்” காந்தியின் இந்த வார்த்தையை  மனதில் நிறுத்திக் கொண்டு, ஊடகங்கள்  செயல்படவேண்டும் .

In this example, the professors at columbia need only know that the paper is copied, not exactly how to write a process analysis paper where it came from

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

6 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “முடமாகும் ஊடக தர்மம்!”
  1. VIJAY says:

    தினமலம்,துக்ளக்,விகடன்,குமுதம்,தந்தி, தினகரன்,காலைகதிர், சுன் ட்வ்,புதிய (பழைய) தலைமுறை இவர்கள் தமிழகத்தின் தமிழரின் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் மீடியாக்கள் இவற்றை இதன் செய்திகளை புரகணிதால் போதும்

  2. இளங்குமரன் says:

    இதே போன்றே தேவிகுளம், பீர்மேடு தமிழகத்துடன் இணைக்க போராடிய பொழுது நம்ம பெருந்தலைவர் காமராசு அய்யா மேடாவது, குளமாவது எல்லாம் இந்தியாவில் தான் இருக்கு என்று தடுத்துவிட்டார். அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறோம்.

    மிகச் சரியான வார்த்தை… சில நல்லவர்கள் கூட அவர்களை அறியாமலேயே நன்மை செய்வதாக நினைத்துத் தமிழர்களுக்குப் பெருந்தீங்கையே செய்துள்ளனர்…

    உலகிலேயே சபிக்கப்பட்ட இனமாகத் தமிழினம் மட்டும்தான் உள்ளதோ?

  3. RANGA says:

    //மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார் “உன்னுடைய பேச்சு, எழுத்து, செயல் சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கிற கடையனுக்கும் சிறிதாவது பயன்படுமா, நன்மை தருமா என்று யோசித்துப் பார்” காந்தியின் இந்த வார்த்தையை மனதில் நிறுத்திக் கொண்டு, ஊடகங்கள் செயல்படவேண்டும் .///

    கண்டிப்பாக செயல்படும் ஐயா!!!தகவலுக்கு நன்றி.

  4. siraku rasikan says:

    மிகவும் அருமையான கருத்து. இவரது எண்ணமும் எழுத்தும் சிந்திக்க வைக்கும் அனைவரையும்.

  5. Blogger says:

    தினமலரை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. மற்ற நாளிதழ், இணைய, ஊடக செய்திகளையும் படியுங்கள் என்றுதான் சொல்கிறோம். கீற்று, வினவு, சிறகு, சவுக்கு படியுங்கள். எஸ். ராமகிருஷ்ணன், ஞானி படியுங்கள். அல்லது ஜெயமோகன், பத்ரி சேசாத்ரி படியுங்கள். எல்லாம் படியுங்கள், அதன்பின் உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். என்றுதான் சொல்கிறோம்.

  6. Blogger says:

    தினமலரின் யோக்கியதை என்ன என்று பார்போம்.

    ஒன்று : இந்திய விடுதலைக்குப் பின் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கும் பொழுது கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்தின் திருவாங்குதூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இங்கு பிறந்த தினமலர் நிறுவனர் ராமசுப்பு அய்யர் திருவாங்குதூர் மன்னரின் தொந்தரவுக்கு ஆளானார். அதனால் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போராடிய மார்சல் நேசமணி, சங்கரலிங்கம் போன்றவர்களுடன் இணைந்து போராடினார். அவருடைய நன்மைக்காக இந்த போராட்டம் (இல்லை என்றால் குமரி மாவட்டம் தமிழகத்தில் இருந்தால் என்ன, கேரளாவிடம் இருந்தால் என்ன, எல்லாம் இந்தியாவில் தானே இருக்கிறது – என்று ராமசுப்பு அய்யர் தினமலரில் எழுதி இருப்பார் )

    இரண்டு – 2008 ஆண்டுகளில் அலைக்கற்றை ஊழல் பற்றி வட இந்திய ஏடுகள், தமிழக ஆங்கில ஏடுகள் எல்லாம் எழுதி பல மாதங்கள் ஆகியும் தினமலர் அதைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. ஊழலே நடக்கவில்லை என்று ஆ. ராசாவும் , சிதம்பரமும் மண்ணு மோகனை சந்தித்து விளக்கியதாக தினமலர் செய்தி வெளியிட்டது. என்னடா தினமலம் இப்படி பண்றானே என்ன காரணம் என்று யோசித்தால் …….ஆங் , தினமலர் நிறுவனர் ராமசுப்பு அய்யரின் தபால் தலையை நம்ம திகார் அமைச்சர் ஆண்டிமுது ராசா வெளியிடுகிறார். அவர் அதை வெளியுட்டு முடிக்கும் வரை நம்ம தினமலம் அலைக்கற்றை ஊழல் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை – என்னே பத்திரிகை தர்மம்.
    அதன்பின்னர் தமிழக் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே தினமலம் அலைக்கற்றை ஊழல் பற்றி எழுத ஆரம்பித்தது. தபால் தலை தான் வெளியிட்டாச்சா அப்புறம் என்ன, எழுத வேண்டியதுதானே..மானம் கெட்ட பிழைப்பு .. ..

    (இதே போன்றே தேவிகுளம், பீர்மேடு தமிழகத்துடன் இணைக்க போராடிய பொழுது நம்ம பெருந்தலைவர் காமராசு அய்யா மேடாவது, குளமாவது எல்லாம் இந்தியாவில் தான் இருக்கு என்று தடுத்துவிட்டார். அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறோம்.)

அதிகம் படித்தது