மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முடிவுக்கு பின் – குறும்படம்

ஆச்சாரி

Aug 1, 2011


காதல் மற்றும் குடும்ப கதைகளையே கேட்டு கேட்டு அலுத்துப்போயிருந்த நமக்கு, சற்றே வித்தியாசமான பார்வையை கொடுத்திருக்கிறார் , இயக்குனர் நளன். சில காரணங்களுக்காக அல்லது பிரச்சினைகளுக்காக, வாழ்க்கையில் இனி ஒன்றும் இல்லை, நான் சாவதே சரி என நினைத்து தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் மனிதர்கள். அவர்கள் இறந்த பின் , அந்த பிரச்சினைகள் முடிந்து விடுவது இல்லை , அதை விட அதிகமாகும், மேலும் அவரின் இழப்பு, குடும்பத்தையே சுக்கு நூறாக்கும் என்பதை தெளிவாக படம் பிடித்து எடுத்து காட்டி இருக்கிறார்.  ஆகவே இது போல கோழை சிந்தனை உள்ள மனிதர்களுக்கு  ஒரு சவுக்கடி தான் இந்த குறும்படம். சரி –  இப்போது கதைக்குள் போவோம்.

கிசோர் – 30 வயது வாலிபன் – ஏதோ  ஒரு காரணத்திற்காக தற்கொலை முடிவுக்கு போகிறான், விஷம் குடித்து விட்டு தன்  அறையில் மயங்கும் நிலையில் அமந்திருக்கிறான். கிசோர் அறைக்கு அந்நேரம் வருகின்றான் , நமது கதையின் நாயகன் கருணாகரன். தன் நண்பனின் இந்த இழிசெயலைப்  பார்த்து வெறுப்படைகின்றான். நண்பன் கருணாகரனை வெளியில் போக பணிக்கின்றான்.   கருணாகரன் சிறிது நேரம் பேசி தன் நண்பனின் மனதை மாற்ற முயல்கின்றான். முதலில் அவனின் முன்னால் காதலிக்கு கிசோர் தற்கொலை செய்து இறந்து விட்டதாக அலைபேசியில் அழைத்து சொல்லுகிறான். அவளோ சற்றும் பதறாமல் , தனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லி விடுகிறாள், அடுத்ததாக கிசோரின் அப்பாவிற்கு , அவன் மருந்து குடித்து விட்டு உயிருக்கு போராடுவதாக சொல்லுகின்றான். அவன் அப்பா அவனிடம் மிகுந்த பதட்டத்துடன், அவர் வாழ்வதே அவனுக்காக என்றும், அவனை தயவு செய்து மருத்துவமனைக்கு கொண்டு போகவும் கெஞ்சி பணிக்கிறார் , அப்போது அவரால் பேச முடியாமல் ஏதோ  நெஞ்சு வலி வந்தது போல, இருமிகொண்டே பேசி நிறுத்துகின்றார், கிசோர் மனம் மாறியவனாய், தன் நண்பனிடம் அப்பாவை காப்பாற்ற சொல்லி மன்றாடுகின்றான். அதே வேளையில் தானும் திருந்திய மனநிலையில் தன்னை மருத்துவ மனைக்கு எடுத்து போகுமாறு நண்பனிடம் மனமுருகி வேண்டுகின்றான். நண்பன் வெளியில் சென்று வாகனம் எடுத்து வருகின்றேன் என் சொல்லிவிட்டு, அறையின் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு செல்கிறான். கிசோர் உள்ளிருந்தவாறு தன் நண்பனிடம் கதவை திறக்குமாறும் , தான் மனம் திருந்தி விட்டதாகவும் கெஞ்சி கூத்தாடுகின்றான். கருணாகரன் முடியவே முடியாது என திட்ட வட்டமாக மறுக்கின்றான், “உன்னை போன்ற மனிதர்கள் திடீர் என மனம் மாறுவீங்க , அப்புறம் வாழ்க்கையில் மீண்டும் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதாவது காரணத்துக்காக  போவீங்க, அடுத்த  ஜென்மத்தில் சந்திக்கலாம்”. எனக்கூறி விட்டு செல்கின்றான். கிசோர் பிழைத்தானா இல்லையா ? கதையை  எப்படி முடித்திருக்கிறார் என்பதை அறிய படத்தின் காணொளி காண்க.

குறை என எதையும் சுட்டிக்காட்டி , படத்தின் ஆழமான கருத்தை சற்றே முடம் ஆக்க விரும்பவில்லை.  இசை , படப்பிடிப்பு, ஒளிப்பதிவு நன்றாக இருக்கின்றது.

சிறகு இதுபோன்ற சீரிய சிந்தனை உள்ள படங்களை,தனது சிறகை விரித்து வரவேற்கிறது. மேலும் இதுபோன்ற படைப்புகள் தொடர, படக்குழுவிற்கு சிறகின் வாழ்த்துக்கள்.

Lastly, if http://www.trackingapps.org/ a wrong pass code is entered on the cell phone’s lock screen, you get alerted

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

5 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “முடிவுக்கு பின் – குறும்படம்”
  1. சரவணன் says:

    எங்க ஊர்ல யாரும் கதவைத் தாழ்ப்பாள் போடாமல் தற்கொலை செய்ய முயற்சி செய்ய மாட்டார்கள்!

    நன்பன் கேரக்டருக்கு சின்னி ஜெயந்தை புக் பண்ணியிருக்கலாம். அவரைப்போலத்தான் இருக்கிறார் (அசப்பில்).

  2. kasi visvanathan says:

    தற்கொலை என்ற தலைப்பு எடுத்து மிக குறைந்த நேரத்தில் விளக்கம் அளித்து முடிந்த வரை செய்தியயை பதிவு செய்தது மிக அருமை. காதல் என்பது படங்களில் பார்த்ததால் செய்தியின் கனம் சென்றடையமுடியாவிட்டாலும் இயக்குனர் மீண்டும் இந்த தலைப்பில் தலைவனுக்காய் தீ குளிக்கும் தொண்டர் கூட்டம் கூரித்தும், குடிப்பழக்கம் சீரழிக்கும் குடும்பங்கள் எடுக்கும் முடிவு குறித்தும் கவனப்படுத்துங்கள். நன்றி.

  3. Karthik says:

    Directed well. But same old love story and suicide.

  4. நலன் குமாராசாமி says:

    நன்றி, நீங்கள் சுட்டி காட்டவிட்டாலும் படங்களின் நிறைய குறைகள் இருக்கின்றன, அதில் எங்களுக்கும் வருத்தம்தான்,மிகவும் அவசரமாக போட்டிக்காக எடுத்தோம், இருந்தும் எடுத்துகொண்ட கருத்து உங்களுக்கு பிடித்திருந்தது என்பதில் எங்களுக்கு சந்தோஷம்.. எங்கள் படத்தை விமர்சனம் செய்த்தறகு நன்றி

  5. Thiags says:

    Good short film.

    No one has the rights to take their life away.

    This short film is a lesson for people who is thinking of committing suicide.

அதிகம் படித்தது