மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முடிவுக்கு வந்த 80:20 வீட்டுக் கடன் திட்டம்.

ஆச்சாரி

Sep 15, 2013

மத்திய வங்கியில் சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆளுனர் சுப்பாராவ் ஓய்வு பெறும் முன்னர் புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு வரப்பிராசதமான ஒரு உத்தரவை பிறப்பித்து சென்றிருக்கிறார்.  வீடுகள் கட்டி முடிப்பதற்கு முன்பாக வங்கிகள் அந்த வீடு வாங்குவதற்கு என வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கும் 80 : 20 என்ற திட்டத்தை நிறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்து விட்டு சென்றிருக்கிறார்.

முதலில் இந்த 80:20 திட்டம் என்றால் என்ன என்று பார்ப்போம். இந்தத் திட்டம்  இந்திய வங்கிகள் சிலவற்றால் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டப்படி கட்டுமான நிறுவனங்கள் வீடு கட்ட ஆரம்பிக்கும் போதே சில வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். இந்த நிறுவனங்களும் வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்னரே இந்த வீட்டை வாங்க இருபது சதம் வரை வீடு வாங்குபவர்களுக்கு கடன் கொடுக்கும். இந்தப் பணம் வீடு கட்டும் நிறுவனங்களுக்கு மாற்றப்படும். இந்தக் கடன் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கும் கடனை விட குறைந்த வட்டியில் வழங்கப்பட்டது.

இந்தத் திட்டம் படிப்படியாக பல்வேறு மாற்றங்களுடன் கட்டுமான நிறுவனகள் – வங்கிகள் கூட்டுக் கொள்ளை அடிக்கும் திட்டமாக மாறியது. கட்டுமான நிறுவனங்கள் வீடு கட்டி முடிப்பதற்கு முன்பே வீட்டிற்கு செயற்கையான முறையில் பெரும் தேவை இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த இது உதவியது. கட்டுமான நிறுவனங்கள், வீடு கட்ட கட்ட, வாடிக்கையாளர்கள் பெயரில் கடனை உருவாக்கி கட்டுமான நிறுவனங்களுக்கு தந்தனர். இதனால் கட்டுமான நிறுவனங்கள் குறைந்த அளவில் அல்லது வட்டியே இல்லாமல் தங்கள் கட்டிடத்தை எழுப்ப முடிந்தது. செயற்கை தேவையால் வீடுகளின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதில் பெரிய கொடுமை என்னவென்றால் வீடு கட்டி முடிப்பதற்கு முன்பே வங்கிகள் கடன் கொடுத்தாலும் அந்த வீடுகள் ஒழுங்காக கட்டி முடிக்கப்படாமல் ஏதும் பிரச்சினை நடந்தால்  அந்தக் கடனை திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்பு வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தப்பட்டது. ஒரு வேளை வீடுகள் ஒழுங்காக கட்டி முடிக்கப்பட்டாலும் கட்டுமான நிறுவனங்கள் ஒழுங்காக தாங்கள் வாங்கிய வங்கிக்கடனை செலுத்தா விட்டாலும் வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளை இழக்க நேரிட்டது.

இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விடயம் வீடு வாங்கியவர்களில் பெரும்பாலோனோர் இந்த 80:20 திட்டத்தில் உள்ள ஆபத்துக்களை பற்றி முழுவதும் தெரியாமலேயே இந்தத் திட்டத்தின் மூலம் வீடு வாங்கினர்.

வீட்டு விலை ஆண்டுக்கு இரு மடங்கு என தாறுமாறாக உயர்ந்த  காலத்தில் இது பெரிய பிரச்சினையாக பார்க்கப்படவில்லை. ஆனால் இப்போது இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் அமெரிக்காவில் ஏற்பட்டதைப் போன்ற மிகப் பெரும் சரிவு ஏற்படும் சூழ்நிலை காணப்படுகிறது. இதை தடுக்கும் ஒரு முயற்சியாகவே மத்திய வங்கி ஆளுனரின் இந்த முடிவை நம்மால் பார்க்க முடிகிறது.

அதே நேரத்தில் சிறு கட்டுமான நிறுவனங்கள் இனி தொழில் நடத்த முடியாது எனவும் இது போன்ற வசதிகள் இல்லாமல் வீடுகள் கட்ட முடியாது எனவும் கட்டுமான நிறுவனங்கள் தரப்பில் குறை சொல்லைப்படுகிறது.

எது எப்படியோ மத்திய வங்கி ஆளுநரின் இந்த முடிவு வீடுகளில் விலையைக் குறைத்து ஏழைகள் சொந்த வீடு வாங்க உதவி செய்யும் என நம்பிக்கை கொள்வோம்.

Sexton Blake, for Nevertheless, that is not the hale story. And others were flock subject but suffer been dirty so yearn that they dont sustain a supplication of ever contracting up. Only identify your modern opportunities with our usance search theme writing servicing.

The research process allows you to gain expertise on a www.writemypaper4me.org/ topic of your choice, and the writing process helps you remember what you have learned and understand it on a deeper level


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முடிவுக்கு வந்த 80:20 வீட்டுக் கடன் திட்டம்.”

அதிகம் படித்தது