மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முத்தான மூன்று நாட்கள் நடைபெறும் வட அமெரிக்கத் தமிழ்த் திருவிழா

ஆச்சாரி

Jun 15, 2012

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை என்கிற கட்டமைப்பானது, வட அமெரிக்காவில் இருக்கிற பல தரப்பட்ட தமிழ்ச் சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் உள்ளடக்கிய ஒரு ஒன்றியமாகும். தமிழ் மொழி சார்ந்த கலை, இலக்கியம், பண்பாடு போற்றுமுகமாகவும், வட அமெரிக்கத் தமிழர் வாழ்வியலைச் செம்மைப்படுத்தும் நோக்கிலும் கடந்த இருபத்து ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து செயலாற்றி, இப்போது எதிர்வரும் ஆனித் திங்கள் 22-ஆம் நாள் (சூலை மாதம் 5-ஆம் நாள்) துவக்கி தனது வெள்ளி விழாவினையும் சிறப்பாகக்கக் கொண்டாடவிருக்கிறது.
ஆண்டுதோறும், அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை நடத்தி வருகிற பேரவை, அவ் விழாவினைத் தமிழுக்குத் தொண்டாற்றிய ஒருவருக்குச் சிறப்புச் செய்து வருவதையும் ஒரு மரபாகக் கொண்டு வருகிறது. அதற்கொப்ப, இவ்வாண்டுக்கான திருவிழாவினை முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாகவும் அறிவித்து இருக்கிறது.

பால்ட்டிமோர் நகரில் ஆனித் திங்கள் 22, 23, 24 (சூலை 6, 7, 8) ஆகிய நாட்களில் இடம் பெற இருக்கும் இத் திருவிழாவில், தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், கவனக் கலை வித்தகர் முனைவர் கலை. செழியன், வாழும்கலை அறக்கட்டளைத் தலைவர் ஸ்ரீஸ்ரீஇரவிசங்கர், நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக், பகடிக்கலைஞன் மதுரை முத்து, பழம்பெரும்  நடிப்புக்கலைஞர் சரோஜாதேவி, முன்னணி நடிகர் பரத், கட்டியக்கலைஞர் சிவ.கார்த்திகேயன், திரைக்கலைஞர் அமலா பால் , தமிழிசையேந்தல் டி.கே.எஸ்.கலைவாணன், மெல்லிசைப் பாடகர் கே.எஸ்.சித்திரா, பாடகர் முகேஷ், வித்யா- வந்தனா சகோதரிகள், வீரத்தாய் வேலு நாச்சியார் நாடக நாட்டியக் குழு என ஏராளமானோர் பங்கேற்று பேரவையின் மூன்று நாள் திருவிழாழாவைச் சிறப்பிக்க உள்ளார்கள். விழாவில், தமிழ்ச்சங்கங்களின் எண்ணற்ற கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறறவுள்ளன.

பேரவைத் தலைவர் முனைவர் தண்டபாணி குப்புசாமி, விழா ஒருங்கிணைப்பாளர் திரு.பாலகன் ஆறுமுகசுவாமி முதலானோர்  திருவிழா ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். கூடுதல் செய்திகளை  அறிய, பேரவையின் வலைதளத்தினை பார்க்கலாம். www.fetna.org தொடர்பு கொண்டு பேச, முனைவர் தண்டபாணி குப்புசாமி(843-814-7581,:president@fetna.org), திரு.பாலகன் ஆறுமுகசுவாமி(301-237-1747,balagancpa@msn.com).

Understanding the options available today will ultimately save a http://besttrackingapps.com/ lot of heartbreak and second guessing of our reactions tomorrow

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முத்தான மூன்று நாட்கள் நடைபெறும் வட அமெரிக்கத் தமிழ்த் திருவிழா”

அதிகம் படித்தது