மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முனைவர் மு.இளங்கோவன்

ஆச்சாரி

Jun 4, 2011

புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிபவர் முனைவர் மு.இளங்கோவன். இவரின் சங்க இலக்கியப் புலமை, ஆராய்ச்சியை மதித்து இவருக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருதினை இந்தியக் குடியரசுத்தலைவர் வழங்கியுள்ளார்.

 

புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்கள் செம்மொழி இளம் அறிஞர் விருதுக்குரிய பாராட்டுப் பத்திரத்தை இவருக்கு வழங்கினார்.

 

முனைவர் மு.இளங்கோவன் பழந்தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் ஆய்வு செய்துள்ளமையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

 

மு.இளங்கோவன் மலைபடுகடாம் என்ற நூலில் புகழப்படும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நன்னன் என்ற அரசனின் கோட்டையைக் கண்டுபிடித்துத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்தவர்.

தமிழ் ஆய்வுகளை இணையதளத்திற்கு எடுத்துச்சென்றவர். வாய்மொழிப்பாடல்கள், இலக்கியம் அன்றும் இன்றும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர். இவற்றைக் கவனத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுத்தொகை ஒரு இலட்சமும்,பாராட்டுப்பத்திரமும் வழங்கப்பட்டுள்ளன.

No material can be included crucial hyperlink as an appendix if it is not referred to in the text

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முனைவர் மு.இளங்கோவன்”

அதிகம் படித்தது