ரசிக்க வைக்கும் திரைப்பாடல்கள் – விமர்சனக் கதம்பம்
ஆச்சாரிNov 1, 2012
“அம்மாவின்கைபேசி” – ‘ராஜபாட்டை போல வந்து..’: ரோஹித் குல்கர்னியின் இசையமைப்பில் நா. முத்துக்குமாரின் வரிகளுக்கு நம்மபுஷ்பவனம்குப்புசாமிஅவர்கள் ராகினி ஸ்ரீயுடன் பாடியுள்ள இந்த பாடல் சரியான இசைக்கலவையுடன் கூடிய ஒரு கிராம பாணியிலான கணவன்- மனைவி ஊடலைப்பாடும் விதமாக “பாடுதில்லாலே ஆடுதில்லாலே..”என இசைக்க கேட்கலாம். [4.46]
“துப்பாக்கி” – ‘கூகுள்கூகுள்..’ :சச்சின் படத்தையடுத்து 7 ஆண்டுகளுக்கு பின் பாடகர் அவதாரம் ஏற்றுள்ள நடிகர் விஜய், ஹாரிஸ் ஜெயராஜ்’ன் இசையில் கார்கியின் இளமை துள்ளும் வரிகளில், நடிகை ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து இளைஞர்களை சுண்டி இழுக்கும் உற்ச்சாகமான பாடலைத் தந்திருக்கின்றனர். [6.05]
“நீர்பறவை” - ‘பர பரவென..’(ஆண்) :ரகுநந்தன் இசையில் ஜி.வி.பிரகாஷ் குமார் குரலில் ஒலிக்கும் கவிப்பேரரசு வைரமுத்து இயற்றிய இப்பாடலில் கீபோர்ட் ஓசைமிளிர ரம்மியமான இசை ரீங்காரமிட மேலும் வரிகள் தெளிவாகவும் ரசிக்கும்படியும் அமைந்திருப்பது மெருகூட்டுகிறது. [5.19]
“ஆதிபகவன்” – ‘காற்றிலே நடந்தேனே..’ :அறிவுமதியின் வரிகளுக்கு உதித் நாராயண், ஸ்வேதா பண்டிட் இணைந்து யுவன் சங்கர் ராஜாவின் மெல்லிசையில் பாடியுள்ள கேட்க கேட்க சலிக்காத காதல் பாடலாக ஒலிக்கிறது “காற்றிலே நடந்தேனே காதலில்…..”எனும் வரிகளை முணுமுணுக்க வைக்கும். [4.56]
குறிப்பு: இப்படத்தின் 3.42 மணிகள் கொண்ட, முற்றிலும் ஆங்கிலத்தில் அமைந்த ப்ரோபசி&சத்யன் குரலில் ஒலிக்கும் ராப் பாடல் மிகவும் ஈர்க்கும்படியாக உள்ளது.
“ஆதலால் காதல் செய்வீர்” – ‘மெல்லசிரித்தால் காதல்தான்..’ : யுவன் சங்கர் ராஜாவின் இசையில் யுகபாரதியின் வரிகளுக்கு யுவன் பாடியிருக்கும் இப்பாடலில் காதலித்துப் பார் வியர்வை மின்னிடும், இருமல் சத்தம் இசை ஆகிடும்..எனும் ஈர்க்கும் வரிகளைக் கொண்டு மின்னணு கீபோர்டின் இசை பிணைப்புடன்‘ஆதலால் காதல் செய்வீர்’ என்கின்றனர். [3.57]
“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” – ‘ஏய் க்ரேஸி பெண்ணே..’ : வேத் சங்கரே பாடலியற்றி, இசையமைத்து,அவரே பாடியுமுள்ள இப்பாடல் ஒரு பெண்ணிடம் கொண்ட காதலை அவளிடம்அழகாக சொல்ல முனையும் பாடலாக கீபோர்ட், வயலின், தபேலா, கடம், பியானோ, குழல் போன்ற பல வாத்தியங்கள் கொண்ட சிறந்த இசையை செவிக்கு விருந்தளித்துள்ளனர். இப்பாடலை DTS ஒலியை கேட்டால் நிச்சயம் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். [4.01]
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரசிக்க வைக்கும் திரைப்பாடல்கள் – விமர்சனக் கதம்பம்”