மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

லட்விக்ஸ் ஆஞ்சைனா (Ludwig’s angina)

ஆச்சாரி

Dec 1, 2011

பற்களை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். இது என்ன புதிதாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? பழைய உண்மை தான். 1836 ஆம் ஆண்டு வில்ஹெல்ம் பிரெடெரிக் வான் லுட்விக் என்ற ஜெர்மன் நாட்டை சேர்ந்த மருத்துவர் வாய் பகுதிகளில் வரும் ஒரு தொற்று நோயை கண்டறிந்தார். அவர் பெயரின் பகுதியையே நோய்க்கு சூட்டி லட்விக்ஸ் ஆஞ்சைனா (Ludwig’s angina) என்று அந்த நோய்க்கு பெயரிட்டுள்ளனர்.
லட்விக்ஸ் ஆஞ்சைனா என்பது வாய்  உட்பகுதியில்  வரும் இணைப்பு திசு (connective tissue infection) தொற்று நோய். இது நாளடைவில் இதயத்தையே பாதிக்கும் கொடிய உயிர்க்கொல்லி நோய். அதிகமாக பெரியவர்களுக்கு வருகிற பல் தொற்று நோய் இது. அண்மை காலங்களில் இந்நோய்  சிறு குழந்தைகளுக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பற்களை சரியாக சுத்தம் செய்யாததால், சாதாரண கவனக் குறைவால் வருகிற  உயிர்க்கொல்லி நோய் இது.   வாயில் சிறிதாக வரும் வீக்கம், வலி, பிளவு அல்லது புண் என்று தொடங்கி மேலும் சிதைவடைந்து  புரையோடி உயிருக்கே ஆபத்தாகி விடும். பொதுவாக ஸ்டிரெப்டோகாக்கல் பாக்டீரியா என்ற ஒரு வகை நுண்ணுயிர் இதற்கு காரணம். (வேறு சில நுண்ணுயிர்களும் இந்நோயை உண்டுபண்ணும்).   வாயின் பிற் பகுதியில் உள்ள மோளார் (molar) வகை பற்களில் ஈறுகளில் காணப்படும் சிதைவு  தொற்று இது. முதலில் வாயின் அடி தளத்தில் உள்ள மோளார் பற்களின் அடியிலும் சுத்தியும் உள்ள ஈறுகளில் தொற்று ஏற்படும். பின்பு அது மனிதனின் சுவாச குழாய்களை நோக்கி கீழே பரவத் தொடங்கும். அப்படி பரவும் போது சுவாச குழாய்களில் வீக்கம் ஏற்படும். இதனால் மூச்சு  குழாய்கள் தடிமனாகி மூடிவிடும். இவ்வாறு மூடும்  போது மூச்சு விட சிரமமாகி அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல நேரிடும். ஆனால் மருத்துவ உலகம் முன்னேறிய இக்காலக் கட்டத்தில்  இக்கொடிய  சிதைவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் மாத்திரைகளால் சரி செய்து விடலாம். இவ்வாறு 50 % உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. எதற்கு இந்த அவலம் பல்லையும் வாயையும் சுத்தமாக வைத்துக்கொண்டாலே ஏகப்பட்ட பொருட்செலவையும், அவதியையும் தடுக்கலாம் அல்லவா?
அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல் மருத்துவ பல்கலை கழகத்தில் இதய தொற்றுக்கும்   பல் தொற்றுக்கும் நேரடி தொடர்புள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஈறுகளின் நோய்க்கும் பாதகமான பேருகாலத்திர்க்கும்,  பக்கவாதம், மாரடைப்பு நோய்க்கும் நேரடி தொடர்புள்ளது பற்றியும்  மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
தினமும் காலை, இரவு  இருவேளைகள் நன்றாக  பற்களின் உட்புறம், வெளிப்புறம் சுத்தமாக துலக்கிய பின்  பற்களுக்கு இடையே சிக்கியுள்ள உணவு துகள்களை  பிலாஸ் (floss) உபயோகித்து அகற்றி சுகாதாரமாக  வாயை பராமரித்தாலே எளிமையாக  இக்கொடிய நோயை தடுத்து விடலாம். பிலாஸ் உபோயோகித்த பின் ஈறுகளை தேய்த்தால் ஈறுகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஈறுகள்  பலம் பெறும். இப்படி தவறாமல் செய்து வந்தால் கூடுதல் வெகுமதியாக  நாற்பது, ஐம்பதுகளிலேயே ஈறுகள் வலுவிழந்து  பற்கள் ஆட்டம் கண்டு கீழே விழுவது தடுக்கப்படும்.

People have no control over what people post about you or how they rate you http://besttrackingapps.com

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “லட்விக்ஸ் ஆஞ்சைனா (Ludwig’s angina)”

அதிகம் படித்தது