மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை வெள்ளி விழா

ஆச்சாரி

May 1, 2012

வட அமெரிக்காவில் உள்ள, ஐக்கிய அமெரிக்கா மாகாணங்கள் மற்றும் கனடா நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கங்களை ஒரு குடையின் கீழ்க் கொண்ட கூட்டமைப்பாக, கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (www.fetna.org) இயங்கி வருகிறது. இப்பேரவையானது எதிர்வரும் ஜூலை 6, 7, 8 ஆகிய தேதிகளில் பால்டிமோர் நகரில் தனது வெள்ளி விழாவையும் கொண்டாடவிருக்கிறது.

இவ்விழா மூதறிஞர் மு. வரதராசனார் அவர்களின் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுவது இதன் சிறப்பு. பேராசிரியர் மு.வ அவர்களின் குடும்பத்தினர் இவ்விழாவில் சிறப்பிக்கப்படவுள்ளனர். மேலும் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் முனைவர் மு.வ. குறித்து சிறப்புரையாற்றவுள்ளார். இவ்விழாவில் இளங்கவனர் முனைவர் கலை செழியன் அவர்கள் கலந்து கொண்டு கவன நிகழ்ச்சியொன்றை நிகழ்த்தவுள்ளார். இவர் ஒரு எழுபதின் கவனர். மதுரை மாநகர ஆட்சியாளர் திரு. சகாயம் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளர்.
மேலும் திரைப்பட நடிகர் வடிவேலு, இசைப்பாடகி திருமதி சித்ரா, பாடகர் திரு முகேஷ், ஆன்மீகவாதி திரு ஸ்ரீஸ்ரீ இரவிசங்கர், நவீன இலக்கியவாதி திரு. ச. இராமகிருட்டிணன் போன்றோர் பங்கேற்கவுள்ளார்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின், 2012-2014 ஆகிய ஆண்டுகளுக்கான தேர்தல் பணிகள் கடந்த ஒரு மாதமாக, தேர்தல் அலுவலர் திரு.சிவானந்தம் மாரியப்பன்(மின்னசோட்டா தமிழ்ச்சங்கம்) அவர்களின் மேற்பார்வையில் இடம் பெற்றன.
இத்தேர்தலில், கிட்டத்தட்ட 26 தமிழ்ச்சங்கங்கள், பேரவைப் பேராளர்கள், வாழ்நாள் உறுப்பினர்கள் எனப் பலரும் நேரடியாகப் பங்கு பெற்றார்கள். முடிவில், கீழ்க்கண்டவர்கள் பேரவை நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி நியூயார்க் நகரில் அறிவித்தார்.

தலைவர்: முனைவர் தண்டபாணி குப்புசாமி
(பனை நிலம் தமிழ்ச் சங்கம் – சார்ள்சுடன் – தென் கரோலினா)

துணைத் தலைவர்: பீட்டர் யெரோணிமூஸ்
(வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் – வாசிங்டன் டி.சி.)

செயலாளர்: பதிவர் பழமைபேசி என்கிற மெளன.மணிவாசகம்
(தென்-மத்திய தமிழ்ச் சங்கம் – மெம்ஃபிசு – டென்னசி)

துணைச்செயலாளர்: செந்தாமரை பிரபாகர்
(சார்லட் நகர தமிழ்ச் சங்கம் – வட கரோலினா)

பொருளாளர்: தங்கமணி பாலுச்சாமி
(அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் – அட்லாண்டா – ஜார்ஜியா)

இயக்குநர் 1: கரு. மலர்ச்செல்வன்
(பேரவை ஆயுட்கால உறுப்பினர் – ஊசுடன் – டெக்சாசு)

இயக்குநர் 2: யோபு தானியேல்
(மிசெளரி தமிழ்ச் சங்கம் – செயிண்ட் லூயிசு – மிசெளரி)

இயக்குநர் 3: பிரகல் திரு
(கனடியத் தமிழர் பேரவை – கனடா)

இயக்குநர் 4: சாரங்கபாணி குகபாலன்
(இலங்கை தமிழ்ச் சங்கம் – அமெரிக்கா)

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர் அரசு செல்லையா, முன்னாள் தலைவர் க.தில்லைக்குமரன் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். புதிய நிர்வாகிகள் அனைவரும், ஜூலை மாதம் பால்ட்டிமோர் நகரில் கோலாகலமாய் இடம் பெறவிருக்கும் பேரவை வெள்ளிவிழாவில் தத்தம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.

Many teens will just grunt out mobile spy of www.trymobilespy.com a reply about how their day went

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை வெள்ளி விழா”

அதிகம் படித்தது