மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பிரதமருக்கு கடிதம்

ஆச்சாரி

Mar 15, 2012

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் செயல்படும் நாற்பதற்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்கள் ஒருங்கிணைந்த குடை அமைப்பாகும். இதன் உறுப்பினர் சங்கங்களில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டுத் தமிழ் விழா, மிகவும் புகழ் பெற்றது.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, ஐ.நா. சபை மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறது. அமெரிக்காவில் வாழும் ஐந்து இலட்சம் தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை இந்தக் கடித்ததை எழுதியிருக்கிறது.

இக்கடிதத்தின் நகலைக் காண இங்கு சொடுக்குங்கள்.

It is phone tracker app from http://besttrackingapps.com/ also available for tablet computers and ipads

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பிரதமருக்கு கடிதம்”

அதிகம் படித்தது