மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வன விலங்குகளின் தொட்டில் பிரம்மகிரி

ஆச்சாரி

Mar 15, 2012

தென் மேற்கு பருவ மழை தொடங்கி மூன்று வாரங்கள் ஆகியிருந்தன. பெங்களூரில் அன்று மாலை பெய்த பெரு மழையால் மின்சாரம் தடைபட்டிருந்தது. மைசூர் சாலையில் இருக்கும் நண்பர் வீட்டில் நண்பர்கள் எல்லோரும் சந்திக்க முடிவு செய்திருந்தோம். இரண்டு நாட்கள் காட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தேன். இருட்டிலேயே எனக்கு தேவையான எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு, மழை நின்ற இரவில் என் நண்பரின் வீட்டை சென்றடைந்தேன். எல்லோரும் வந்து சேர்ந்து, பேசி முடித்து, அவரவர் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை எடுக்கும் போது மணி பதினொன்றை கடந்திருந்தது.

பிரம்மகிரி வன விலங்கு சரணாலயம். அடர்ந்த காடு. மலை உச்சியில் புல்வெளிப் பகுதி. மனித நடமாட்டம் அற்றுப் போன வனம். அங்கு இரண்டு நாட்கள் தங்கி வரலாம் என முடிவு செய்த போது,  நான் உடனே ஒப்புக்கொண்டேன்.

எங்கள் வாகனத்தை நாகர்ஹோலே தேசியப் பூங்காவின் வழியாக செலுத்த முடிவு செய்தோம். அந்த பிரதான சாலை,  இரவு நேரங்களில் மூடப்படும். வன விலங்குகள்  வாகனங்களில் அடிபட்டு உயிர் விடக் கூடாது எனும் நோக்கில், காலை ஆறு மணி வரை அந்த சாலை மூடப்பட்டிருக்கும். எங்கள் வாகனம், காலை ஐந்து மணிக்கே நாகர்ஹோலே எல்லையை அடைந்தது.

ஆறு மணிக்கு சாலை திறக்கப்பட்டபோது, நாங்கள் முதலில் நுழைந்தோம். அந்தச் சாலையில் முப்பது கி.மீ க்கும் அதிகமான வேகத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை. சாலையின் இரண்டு புறமும், ஆங்காங்கே புள்ளி மான்கள் கூட்டமாக நின்று மேய்ந்து கொண்டிருந்தன. வனம் எல்லோருடைய மனதையும் எளிதில் மாற்றிவிடும் தந்திரம் நிறைந்ததாக இருக்கிறது. எல்லோருடைய பார்வையும் வாகன சாளரத்துக்கு வெளியே  குவிந்திருந்தது. தன் முதுகை காட்டி நின்று கொண்டிருந்த யானையை எல்லோரும் எட்டிப் பார்த்து ரசித்த போது, அது தன் பார்வையை சிறிதும் எங்கள் மீது செலுத்தாமல் தன் வேலையில் தீவிரமாக இருந்தது. மனிதர்கள் விலங்குகள் மீது செலுத்தும் பார்வைக்கும், விலங்குகள் மனிதர்கள் மீது செலுத்தும் பார்வைக்கும் நிறைய  வேறுபாடு உண்டு. இடையில் தென்பட்ட வரிக் கழுத்துக் கீரியும், கேளையாடும் எங்கள் கவனத்தை ஈர்த்துவிட்டு மேய்ந்து கொண்டிருந்தன.

வனத் துறையினர் சாலையின் இருமருங்கிலும் போக்குவரத்து குறியீடுகளை நிறுவி இருந்தனர். வேகமாக செல்வதோ, ஒலிப்பான் பயன்படுத்துவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் சிலர் வாகனத்தை முந்திச் செல்வதும், ஒலிப்பான் பயன்படுத்துவதுமாக சென்றதால் அந்த அமைதியை முற்றிலும் உடைத்துப்போட்டது. நாகர்ஹோலே வனப்பகுதியை கடந்து நாங்கள் ஸ்ரீமங்களா என்ற இடத்தை அடைந்திருந்தோம். அங்கிருந்து கிளம்பி பிரம்மகிரியில் இருக்கும் வேட்டை தடுப்பு முகாமை அடைய முடிவு செய்திருந்தோம்.

நாங்கள் அந்த இடத்தை அடையும் முன்பே மழை கொட்டத் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் வாகனத்தில் செல்ல முடியாமல் நடந்து செல்லத் தொடங்கினோம். மழை பெய்து ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. ஒரு தாய் தன் குழந்தையை ஏந்திக் கொள்வது போல வனம் மழையை ஏற்றுக் கொள்கிறது. சிறிது தூரத்தில் நாங்கள் சென்றடைய வேண்டிய இடம் வந்தோம். மணி பண்ணிரெண்டைக் கடந்திருந்தது. மதிய உணவிற்கு பிறகு மலை ஏறலாம் என முடிவு செய்திருந்தோம். இடைப்பட்ட நேரத்தில் எங்கள் மீது ஊறிக் கொண்டிருந்த அட்டைகளை நீக்கிக் கொண்டிருந்தோம். சிறிது தூரம் நடந்ததிலேயே நிறைய அட்டைகள் ஏறியிருந்தன.

மதிய உணவிற்குப் பிறகு எல்லோரும் தயாரானோம். எங்கள் இலக்கு மலையின்  உச்சியில் இருக்கும் புல்வெளிப் பகுதி வரை சென்று திரும்புவது. அனைவரும் தயாராகிவிட்டோம். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.  பறவைகளின் ஒலி இல்லை. மரங்களில் அசைவு இல்லை. ஓடைகளில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மழையும் வனமும் என்ன பேசிக் கொண்டதோ தெரியவில்லை. கடகடவென பனிமூட்டம் உருவானது. சிறிது நேரத்திலேயே பனிமூட்டம் கலைந்தது. மழையுடன் நட்புகொண்டு ஈரமேறியிருந்த மரங்கள் எங்களை பரிகசிப்பது போலிருந்தது.

ஒரு கையில் குடையையும் மறு கையில் மழையையும் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். அபூர்வமாகிவிட்ட சோலை மந்திகளை (சிங்க வால் குரங்கு) பார்க்க வேண்டும்  என்ற எண்ணம் எங்களுக்கு மேலோங்கி இருந்தது. அவை இந்த வனப் பகுதியில் வாழ்வது பற்றிய நம்பகமான தகவல்களால் எல்லோரும் சோலை மந்திகளை தேடியபடியே நடந்து சென்றோம்.

ஒரு மேட்டை ஏறிக் கடந்தபோது, அங்கு மூன்று மிளா (சாம்பார்) மான்கள் நின்று கொண்டிருந்தன. செம்பழுப்பு நிறத்தில் மாடு உயரத்தில் நின்று கொண்டிருந்த அவை எங்களை அடையாளம் காண முடியாமல் நாங்கள் வந்த திசை நோக்கி நின்று கொண்டிருந்தன. நாங்கள் அசையாமல் நின்று கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் வனத்தில் இது போன்று நேரடியாக விலங்குகளை பார்க்கும் போதும் ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. அதில் ஒரு போதும் இன்பம் குறைந்ததில்லை.

தொடர்ந்து நடந்தோம், ஒருவர் பின் ஒருவராக. எல்லோருக்குமான இடைவெளி அதிகரித்து வனத்தில் மூழ்கியபடி சென்று கொண்டே இருந்தோம். எங்கள் மீது ஊர்ந்து கொண்டிருந்த அட்டைகளை தட்டிவிட்டபடி தொடர்ந்து நடந்தோம். இடையிடையே ஓடையில் இறங்கி ஏறி நடந்தோம்.

எங்களுக்கு இடையிலான தூரம் அதிகரித்தது. ஆங்காங்கே எல்லோரும் நின்று அட்டைகளை தட்டிவிட்டபடி இருந்தோம். கால்களில் ஏறத் தொடங்கி கழுத்து வரை  வந்து விட்டன. எங்கெங்கே அட்டைகள் ஊர்கிறது என்பதும் அறிய முடியவில்லை. மழை தொடர்ந்து கொண்டே இருந்தது. அட்டைகள் எல்லோருக்கும் தொய்வை ஏற்படுத்தியது.

தொடர்ந்து நடந்தோம். ஏழு கி.மீ தூரம் வரை நடந்தோம். அட்டைகள் மிகப் பெரிய தடையை ஏற்படுத்தியது. எங்கள் கவனம் முழுவதும் அட்டைகளை உதறித் தள்ளுவதிலேயே இருந்தது. கையில் இருந்த உப்பை தடவி அட்டைகளை நீக்கினோம். இருப்பினும் எங்கள் பயணத்தை தொடர்வது சிக்கலாகவே இருந்தது. உடன் வந்த நண்பர் ஒருவருக்கு கண் அருகில் அட்டை கடித்து விடவே, பதறிப் போனோம். வனக் காப்பாளர் உதவியுடன் அந்த அட்டை நீக்கப்பட்டது.

இனி பயணத்தை தொடர்வது, உகந்ததல்ல என முடிவு செய்து திரும்பினோம். மூன்று மணி நேர நடையின் விளைவு நாங்கள் எல்லோரும் அட்டைகளால் சோர்வடைந்திருந்தோம். நாங்கள் தங்கி இருந்த இடம் வந்து சேர்ந்து, எங்கள் உடம்பில் இருந்த அட்டைகளை நீக்கவே ஒரு மணி நேரத்திற்கும் மேலானது. மழையும் மாலையும் இணைந்து கொண்டது. அன்று இரவு அந்த வனத்திலேயே தங்கினோம். மறு நாள் காலையில் மழை ஓய்ந்திருந்தது. ஓடையில் இன்னமும் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே அட்டைகள் இன்னமும் ரத்தம் தேடிக் கொண்டிருந்தன. உடலை சுருக்கி நீட்டி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. புல் தரை முழுவதும் நனைந்திருந்தது. வந்து போகும் பனி மூட்டம் தலை துவட்டிச் செல்கிறது. கிளிகள் வட்டமடித்துக் கொண்டிருந்தன. இரண்டாவது நாள் நடை பயணத்தை தவிர்த்துவிட்டு, திரு.கே.எம்.சின்னப்பா அவர்களை சந்திக்க கிளம்பினோம்.

கர்நாடக மாநிலத்தின் வன விலங்கு ஆர்வலர்கள் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பவர் திரு.கே.எம்.சின்னப்பா. நாகர்ஹோலே வனப் பகுதியை ஒட்டிய கிராமத்தில் வளர்ந்த இவர் சிறு வயதில் இருந்தே வனத்தின் மீதும், வன விலங்குகளின் மீதும் அதிக நேசம் கொண்டவராக இருந்தார். அறுபதுகளில் வன அலுவலராக நாகர்ஹோலே வனப் பகுதியில் பணியில் சேர்ந்தார்.

சுமார் இருபது ஆண்டுகள் வன அதிகாரியாக பணியாற்றிய இவர், நாகர்ஹோலே வனப் பகுதியை இந்தியாவின் மிக முக்கிய பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்றியவர். இவர் பணியில் சேர்ந்த போது, மான்களை காண்பதே அரிதாக இருந்தது. இன்று இது புலிகள் சரணாலயமாக விளங்குகிறது. நேர்மையாகவும், சிரத்தையுடனும் போராடிய இவர், நிறைய சிக்கல்களையும் சந்திக்க நேர்ந்தது.

1993 ல், பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று அதன் பின்னரும் தொடர்ந்து வனப் பாதுகாப்பிற்காக பணியாற்றியவர். தன்னார்வு தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து இவர் பணியாற்றத் தொடங்கிய போது, இவருக்கு வழங்கப்பட்ட சம்பளத்தைப் பெற மறுத்து, தன்னுடைய ஓய்வூதிய பணமே போதும் என்று சொன்னவர். தன்னுடைய சொந்த நிலத்தை வனப் பாதுகாப்பிற்காக விட்டுக் கொடுத்தவர்.

ஆசிய யானைகளை பற்றி மிகச் சிறந்த அனுபவம் கொண்டவர். இன்று வரை வனப் பாதுகாப்பிற்காக தொடர்ந்து பணியாற்றுபவர். அவருடைய அனுபங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றும் கர்நாடக  மாநிலத்தில் புலிகள் அதிகம் இருப்பதற்கு இவரே மிக முக்கிய காரணம்.

மீண்டும் நாகர்ஹோலே வழியாகவே பயணத்தை தொடர்ந்தோம். யானைக் கூட்டம், மான்கள் எல்லாவற்றையும் கடந்து, மாலை ஆறு மணிக்கு முன்னதாகவே, நாகர்ஹோலே வனப் பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோம். சாலை ஓரமாக வாகனத்தை  நிறுத்திவிட்டு தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது (வெள்ளை வயிறு) கருங்கரிச்சான் (White Bellied Drongo) பறவைகள் சுற்றிக் கொண்டிருந்தன. வனத்தில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. பறவைகளும் விலங்குகளும் எளிதில் கற்றுக் கொள்கின்றன. மனிதனுக்கு இந்த வகுப்பறையே கடினமாக இருக்கிறது. ஆனால் அதன் சுகம்  நமக்கு சிறகுகளை உருவாக்கி விடுகின்றன.

பிரம்மகிரி வன விலங்கு சரணாலயம். அடர்ந்த காடு. மலை உச்சியில் புல்வெளிப் பகுதி. மனித நடமாட்டம் அற்றுப் போன வனம். அங்கு இரண்டு நாட்கள் தங்கி வரலாம் என முடிவு செய்த போது,  நான் உடனே ஒப்புக்கொண்டேன்.

எங்கள் வாகனத்தை நாகர்ஹோலே தேசியப் பூங்காவின் வழியாக செலுத்த முடிவு செய்தோம். அந்த பிரதான சாலை,  இரவு நேரங்களில் மூடப்படும். வன விலங்குகள்  வாகனங்களில் அடிபட்டு உயிர் விடக் கூடாது எனும் நோக்கில், காலை ஆறு மணி வரை அந்த சாலை மூடப்பட்டிருக்கும். எங்கள் வாகனம், காலை ஐந்து மணிக்கே நாகர்ஹோலே எல்லையை அடைந்தது.

ஆறு மணிக்கு சாலை திறக்கப்பட்டபோது, நாங்கள் முதலில் நுழைந்தோம். அந்தச் சாலையில் முப்பது கி.மீ க்கும் அதிகமான வேகத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை. சாலையின் இரண்டு புறமும், ஆங்காங்கே புள்ளி மான்கள் கூட்டமாக நின்று மேய்ந்து கொண்டிருந்தன. வனம் எல்லோருடைய மனதையும் எளிதில் மாற்றிவிடும் தந்திரம் நிறைந்ததாக இருக்கிறது. எல்லோருடைய பார்வையும் வாகன சாளரத்துக்கு வெளியே  குவிந்திருந்தது. தன் முதுகை காட்டி நின்று கொண்டிருந்த யானையை எல்லோரும் எட்டிப் பார்த்து ரசித்த போது, அது தன் பார்வையை சிறிதும் எங்கள் மீது செலுத்தாமல் தன் வேலையில் தீவிரமாக இருந்தது. மனிதர்கள் விலங்குகள் மீது செலுத்தும் பார்வைக்கும், விலங்குகள் மனிதர்கள் மீது செலுத்தும் பார்வைக்கும் நிறைய  வேறுபாடு உண்டு. இடையில் தென்பட்ட வரிக் கழுத்துக் கீரியும், கேளையாடும் எங்கள் கவனத்தை ஈர்த்துவிட்டு மேய்ந்து கொண்டிருந்தன.

வனத் துறையினர் சாலையின் இருமருங்கிலும் போக்குவரத்து குறியீடுகளை நிறுவி இருந்தனர். வேகமாக செல்வதோ, ஒலிப்பான் பயன்படுத்துவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் சிலர் வாகனத்தை முந்திச் செல்வதும், ஒலிப்பான் பயன்படுத்துவதுமாக சென்றதால் அந்த அமைதியை முற்றிலும் உடைத்துப்போட்டது. நாகர்ஹோலே வனப்பகுதியை கடந்து நாங்கள் ஸ்ரீமங்களா என்ற இடத்தை அடைந்திருந்தோம். அங்கிருந்து கிளம்பி பிரம்மகிரியில் இருக்கும் வேட்டை தடுப்பு முகாமை அடைய முடிவு செய்திருந்தோம்.

நாங்கள் அந்த இடத்தை அடையும் முன்பே மழை கொட்டத் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் வாகனத்தில் செல்ல முடியாமல் நடந்து செல்லத் தொடங்கினோம். மழை பெய்து ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. ஒரு தாய் தன் குழந்தையை ஏந்திக் கொள்வது போல வனம் மழையை ஏற்றுக் கொள்கிறது. சிறிது தூரத்தில் நாங்கள் சென்றடைய வேண்டிய இடம் வந்தோம். மணி பண்ணிரெண்டைக் கடந்திருந்தது. மதிய உணவிற்கு பிறகு மலை ஏறலாம் என முடிவு செய்திருந்தோம். இடைப்பட்ட நேரத்தில் எங்கள் மீது ஊறிக் கொண்டிருந்த அட்டைகளை நீக்கிக் கொண்டிருந்தோம். சிறிது தூரம் நடந்ததிலேயே நிறைய அட்டைகள் ஏறியிருந்தன.

மதிய உணவிற்குப் பிறகு எல்லோரும் தயாரானோம். எங்கள் இலக்கு மலையின்  உச்சியில் இருக்கும் புல்வெளிப் பகுதி வரை சென்று திரும்புவது. அனைவரும் தயாராகிவிட்டோம். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.  பறவைகளின் ஒலி இல்லை. மரங்களில் அசைவு இல்லை. ஓடைகளில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மழையும் வனமும் என்ன பேசிக் கொண்டதோ தெரியவில்லை. கடகடவென பனிமூட்டம் உருவானது. சிறிது நேரத்திலேயே பனிமூட்டம் கலைந்தது. மழையுடன் நட்புகொண்டு ஈரமேறியிருந்த மரங்கள் எங்களை பரிகசிப்பது போலிருந்தது.

ஒரு கையில் குடையையும் மறு கையில் மழையையும் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். அபூர்வமாகிவிட்ட சோலை மந்திகளை (சிங்க வால் குரங்கு) பார்க்க வேண்டும்  என்ற எண்ணம் எங்களுக்கு மேலோங்கி இருந்தது. அவை இந்த வனப் பகுதியில் வாழ்வது பற்றிய நம்பகமான தகவல்களால் எல்லோரும் சோலை மந்திகளை தேடியபடியே நடந்து சென்றோம்.

ஒரு மேட்டை ஏறிக் கடந்தபோது, அங்கு மூன்று மிளா (சாம்பார்) மான்கள் நின்று கொண்டிருந்தன. செம்பழுப்பு நிறத்தில் மாடு உயரத்தில் நின்று கொண்டிருந்த அவை எங்களை அடையாளம் காண முடியாமல் நாங்கள் வந்த திசை நோக்கி நின்று கொண்டிருந்தன. நாங்கள் அசையாமல் நின்று கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் வனத்தில் இது போன்று நேரடியாக விலங்குகளை பார்க்கும் போதும் ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. அதில் ஒரு போதும் இன்பம் குறைந்ததில்லை.

தொடர்ந்து நடந்தோம், ஒருவர் பின் ஒருவராக. எல்லோருக்குமான இடைவெளி அதிகரித்து வனத்தில் மூழ்கியபடி சென்று கொண்டே இருந்தோம். எங்கள் மீது ஊர்ந்து கொண்டிருந்த அட்டைகளை தட்டிவிட்டபடி தொடர்ந்து நடந்தோம். இடையிடையே ஓடையில் இறங்கி ஏறி நடந்தோம்.

எங்களுக்கு இடையிலான தூரம் அதிகரித்தது. ஆங்காங்கே எல்லோரும் நின்று அட்டைகளை தட்டிவிட்டபடி இருந்தோம். கால்களில் ஏறத் தொடங்கி கழுத்து வரை  வந்து விட்டன. எங்கெங்கே அட்டைகள் ஊர்கிறது என்பதும் அறிய முடியவில்லை. மழை தொடர்ந்து கொண்டே இருந்தது. அட்டைகள் எல்லோருக்கும் தொய்வை ஏற்படுத்தியது.

தொடர்ந்து நடந்தோம். ஏழு கி.மீ தூரம் வரை நடந்தோம். அட்டைகள் மிகப் பெரிய தடையை ஏற்படுத்தியது. எங்கள் கவனம் முழுவதும் அட்டைகளை உதறித் தள்ளுவதிலேயே இருந்தது. கையில் இருந்த உப்பை தடவி அட்டைகளை நீக்கினோம். இருப்பினும் எங்கள் பயணத்தை தொடர்வது சிக்கலாகவே இருந்தது. உடன் வந்த நண்பர் ஒருவருக்கு கண் அருகில் அட்டை கடித்து விடவே, பதறிப் போனோம். வனக் காப்பாளர் உதவியுடன் அந்த அட்டை நீக்கப்பட்டது.

இனி பயணத்தை தொடர்வது, உகந்ததல்ல என முடிவு செய்து திரும்பினோம். மூன்று மணி நேர நடையின் விளைவு நாங்கள் எல்லோரும் அட்டைகளால் சோர்வடைந்திருந்தோம். நாங்கள் தங்கி இருந்த இடம் வந்து சேர்ந்து, எங்கள் உடம்பில் இருந்த அட்டைகளை நீக்கவே ஒரு மணி நேரத்திற்கும் மேலானது.

மழையும் மாலையும் இணைந்து கொண்டது. அன்று இரவு அந்த வனத்திலேயே தங்கினோம். மறு நாள் காலையில் மழை ஓய்ந்திருந்தது. ஓடையில் இன்னமும் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே அட்டைகள் இன்னமும் ரத்தம் தேடிக் கொண்டிருந்தன. உடலை சுருக்கி நீட்டி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. புல் தரை முழுவதும் நனைந்திருந்தது. வந்து போகும் பனி மூட்டம் தலை துவட்டிச் செல்கிறது. கிளிகள் வட்டமடித்துக் கொண்டிருந்தன. இரண்டாவது நாள் நடை பயணத்தை தவிர்த்துவிட்டு, திரு.கே.எம்.சின்னப்பா அவர்களை சந்திக்க கிளம்பினோம்.

கர்நாடக மாநிலத்தின் வன விலங்கு ஆர்வலர்கள் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பவர் திரு.கே.எம்.சின்னப்பா. நாகர்ஹோலே வனப் பகுதியை ஒட்டிய கிராமத்தில் வளர்ந்த இவர் சிறு வயதில் இருந்தே வனத்தின் மீதும், வன விலங்குகளின் மீதும் அதிக நேசம் கொண்டவராக இருந்தார். அறுபதுகளில் வன அலுவலராக நாகர்ஹோலே வனப் பகுதியில் பணியில் சேர்ந்தார்.

சுமார் இருபது ஆண்டுகள் வன அதிகாரியாக பணியாற்றிய இவர், நாகர்ஹோலே வனப் பகுதியை இந்தியாவின் மிக முக்கிய பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்றியவர். இவர் பணியில் சேர்ந்த போது, மான்களை காண்பதே அரிதாக இருந்தது. இன்று இது புலிகள் சரணாலயமாக விளங்குகிறது. நேர்மையாகவும், சிரத்தையுடனும் போராடிய இவர், நிறைய சிக்கல்களையும் சந்திக்க நேர்ந்தது.

1993 ல், பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று அதன் பின்னரும் தொடர்ந்து வனப் பாதுகாப்பிற்காக பணியாற்றியவர். தன்னார்வு தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து இவர் பணியாற்றத் தொடங்கிய போது, இவருக்கு வழங்கப்பட்ட சம்பளத்தைப் பெற மறுத்து, தன்னுடைய ஓய்வூதிய பணமே போதும் என்று சொன்னவர். தன்னுடைய சொந்த நிலத்தை வனப் பாதுகாப்பிற்காக விட்டுக் கொடுத்தவர்.

ஆசிய யானைகளை பற்றி மிகச் சிறந்த அனுபவம் கொண்டவர். இன்று வரை வனப் பாதுகாப்பிற்காக தொடர்ந்து பணியாற்றுபவர். அவருடைய அனுபங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றும் கர்நாடக  மாநிலத்தில் புலிகள் அதிகம் இருப்பதற்கு இவரே மிக முக்கிய காரணம்.

மீண்டும் நாகர்ஹோலே வழியாகவே பயணத்தை தொடர்ந்தோம். யானைக் கூட்டம், மான்கள் எல்லாவற்றையும் கடந்து, மாலை ஆறு மணிக்கு முன்னதாகவே, நாகர்ஹோலே வனப் பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோம். சாலை ஓரமாக வாகனத்தை  நிறுத்திவிட்டு தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது (வெள்ளை வயிறு) கருங்கரிச்சான் (White Bellied Drongo) பறவைகள் சுற்றிக் கொண்டிருந்தன. வனத்தில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. பறவைகளும் விலங்குகளும் எளிதில் கற்றுக் கொள்கின்றன. மனிதனுக்கு இந்த வகுப்பறையே கடினமாக இருக்கிறது. ஆனால் அதன் சுகம்  நமக்கு சிறகுகளை உருவாக்கி விடுகின்றன.

A restrictive adjective is placed after the noun marker, if there is one (a, an the, some, this, any, and essay writer online from pro-essay-writer.com so on), and is not punctuated (italics added in the following examples) the angry man sat down abruptly

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வன விலங்குகளின் தொட்டில் பிரம்மகிரி”

அதிகம் படித்தது