மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சமூக வரலாற்றை நினைவு கூர்வோம்

ஆச்சாரி

Mar 15, 2014

வரலாற்றை கதையாக:

வரலாற்றின் தன்மையைப் பற்றியும், வரலாறை அறிவதன் பயன்பாட்டைப் பற்றியும் சமூகத்தில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இறந்த காலம் என்பது இறந்து போன காலம் என்றும் அதனைப் படிப்பது வீண் என்றும் கிண்டல் தோனியில் கருத்துகள் நிலவி வருகின்றன. வரலாற்றை பொய்யாக திரித்து பிரச்சாரத்திற்கு நாசிகள் பயன்படுத்தியதும்,  இன்றும் புதிய பழமைவாதிகள் அதனையே செய்வதும் நடந்து வருகிறது.

ஆனால் வரலாற்றின் உண்மையான நோக்கம் இறந்த காலத்தின் அனுபவத்தைக் கொண்டு எதிர்காலத்தை கணிப்பதே ஆகும். பெரும்பாலானவர்களால் ஏற்கப்பட்ட இந்த கருத்து, ”வரலாறு என்பது இறந்த காலத்தின் கதை அது நிகழ்காலத்தை புரிந்து கொள்வதற்கும், எதிர்காலத்தைப் பற்றி கணிப்பதற்கும் உதவுகிறது” என்று வலியுறுத்துகிறது.

வரலாற்றை நினைவாக:

சமூகவியல் ஆய்வாளர்களிடையே வரலாற்றைப் பற்றிய மாறுபட்ட கருத்தும் நிலவுகிறது. அது வரலாற்றை கதையாக ஏற்பதை மறுக்காவிட்டாலும் வரலாற்றை நினைவாக வலியுறுத்துகிறது குறிப்பாக சமூகத்தின் ஒட்டுமொத்த நினைவாக வரலாற்றை குறிப்பிடுகிறது. முந்தைய தலைமுறையின் போராட்டங்களையும், தியாகங்களையும், வெற்றிகளையும் நினைவு கூர்வதற்கு வரலாறு வலிமையான வடிவமாக உள்ளது. மேலும் வரலாறு கடந்து போன காலத்தின் கதையாக மட்டும் இருக்க வேண்டியதில்லை அது சமூகத்தின் ஒட்டுமொத்த நினைவாகவும், உளச்சான்றாகவும் உணரலாம்.

சமூக வரலாறு:

வரலாறு என்பதை நினைவாக ஏற்பது சமூகயியல் ஆய்வாளர்களிடையே அதிக வரவேற்பு பெறுகிறது ஏனெனில் சமூக வரலாறு நினைவுகூரத்தக்கதாக உள்ளது. சமூக வரலாறு என்பது சமூக இயக்கங்களான பெண்ணுரிமை இயக்கம், தொழிலாளர் உரிமை இயக்கம், சுற்றுச்சூழல் இயக்கம் போன்றவற்றின் வரலாறாகும். இந்த சமூக வரலாறின் நோக்கம் எதிர்காலத்தை கணிப்பது அல்ல நாம் எப்படி இந்த சமூக நிலையை அடைந்தோம்? சமூக வரலாற்றியலாளர் இந்த கேள்விக்கு பதில் தேட விரும்புகிறார் நாளை நமக்கு எப்படி இருக்கும்? என்ற வினாவிற்கு விடைதேட அவர்கள் விரும்புவதில்லை. எனவே வரலாற்றை இறந்த காலத்தின் ஒட்டுமொத்த நினைவாகவும் அது நமது இன்றைய நிலையை எவ்வாறு வடிவமைத்தது எனவும் புரிந்துகொள்வது அவசியம். சமூக வரலாறு என்பது மக்களை, நிகழ்வுகளை, இடங்களை, பொருட்களை, கருத்தாக்கங்களை நினைவு கூர்வதற்கு உதவிசெய்கிறது. மேலும் சமூக வரலாறு என்பது வரலாற்றை பதிவு செய்ய பல்வேறு யுத்திகளை கையாழ்கிறது. செவி வழி வரலாறு, உணவு, உடை, இசை, இலக்கியம் போன்றவற்றின் மூலமாக சமூக வரலாறு எழுதப்படுகிறது.  எனவே சமூக வரலாறு ஒரு சமூகத்தின் பல்வேறு வண்ணமயமான கூறுகளை உள்ளடக்கியது.

தமிழக சமூக வரலாறு:

தமிழகத்தின் சமூக வரலாறு கல்வித் துறையால் சிறிது எழுதப்பட்டிருந்தாலும் இந்திய சுதந்திரத்திற்குப் பின் அதிகமாக பதிவு செய்யப்படவில்லை. முக்கிய மாற்றங்கள் அனைத்தும் அரசியல் வரலாறாகவும், கலாச்சார வரலாறாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் அரசியல் எழுச்சி மொழிப்போர் தமிழ்ச் சமூகத்தின் நவீன மயத்தால் ஏற்பட்ட மாற்றம் பாரிய சினிமா கலாச்சாரம் தாழ்த்தப்பட்டவர்களின் எழுச்சி, சாதிஅரசியல் உலகமயத்தினால் ஏற்பட்ட தமிழ்சமூகத்தின் மீதான தாக்கம் போன்றவை கலாச்சார மற்றும் அரசியல் வரலாறாகவும், சமூகவியல், மனித இனஇயலாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் சமூக வரலாற்றை போற்றுவோம்:       

தமிழர்களின் சமூகஇயக்கங்களைப் பற்றிய ஆவணங்கள் அதிகமாக இருந்தாலும் அவற்றை அடிக்கடி நினைவு கூறும் வகையில் வரலாறு கடந்த 65 ஆண்டுகளாக எழுதப்படவில்லை. சில கல்வி சார்ந்த ஆவணங்களைத் தவிர பிற ஆவணங்களான நேர்காணல்கள், நினைவு கட்டுரைகள், சுயசரிதைகள், காணொளிகள், ஆவணப்படங்கள் போன்றவை பாதுகாக்கப்படவில்லை. இத்தகைய ஆவணங்களை சேகரித்து பாதுகாப்பதே நமது சமூக வரலாறை அறிந்துகொள்ள உதவும்.

அடுத்தபடியாக தமிழர்கள் தமது சமூக வரலாற்றை வருடாந்திர, மாதாந்திர நிகழ்வுகளின் வாயிலாக அறிந்துகொள்ளலாம். அமெரிக்காவில் வரலாற்றை நினைவு கூறுவதற்காக பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன உதாரணமாக பிப்ரவரி மாதத்தை கறுப்பர்களின் வரலாற்று மாதமாக அறிவித்து போற்றுகின்றனர்.

தமிழர் சமூக வரலாறு சில யோசனைகள்:

கீழ்காணும் யோசனைகளை நான் முன் வைக்கிறேன்.

ஜனவரி – தமிழ் பண்பாட்டு மாதம். இம்மாதத்தில் தமிழர்களின் பொங்கல் பண்டிகை, மொழிப்போர், முத்துக்குமாரின் தியாகம் போன்றவை போற்றப்படவேண்டியது. இயல்பாகவே இம்மாதத்தில் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், மொழி, விஞ்ஞானம் மற்றும் மருத்துவ அறிவு போற்றப்படுகிறது.

பிப்ரவரி – தமிழ் தொழிலாளர் மாதம். இம்மாதத்தை சிங்கார வேலர் அவர்களின் நினைவாகவும் தொழிலாளர் இயக்கத்தை ஏற்படுத்தியதன் நினைவாகவும் போற்றலாம்.

மார்ச்சு – தமிழ் பெண்ணுரிமை பாரம்பரியம் -மகளிர் தினம் மற்றும் ஒளவையாரின் நினைவைப் போற்றலாம்.

ஏப்ரல் – தமிழ் இலக்கியம், நாடகம், திரைத்துறை – பாவேந்தர் பாரதிதாசனார் மற்றும் தமிழ் , கவிதை,  இலக்கியத்தைப் போற்றலாம்.

மே – தமிழ் ஈழம் – வட்டுக்கோட்டை தீர்மானம், முள்ளிவாய்க்கால், ஈழப்போராட்டத்தின் நினைவைப் போற்றலாம்.

சூன் – குறிஞ்சி மாதம்- குறிஞ்சி மலர், பசுமை இயக்கம், சுற்றுச்சூழல் பராமரிப்பு இவற்றைப் போற்றலாம்.

சூலை- முல்லை மாதம் – குற்றால அருவியின் சாரல் விழா, இயற்கை காட்சிகள், தமிழர் காடுகள், நீர்வீழ்ச்சிகள் இவற்றைப் போற்றலாம்.

ஆகஸ்ட்- நெய்தல் மாதம் – கடல், கடற்கரை, மீனவர், கடல் பாதுகாப்பு மற்றும் கடற்சார் பாரம்பரியத்தை போற்றுவோம்.

செப்டம்பர்- சுயமரியாதை – பெரியார், அண்ணாத்துறை ,சுயமரியாதை, பகுத்தறிவு இயக்கம் இவற்றைப் போற்றுவோம்.

அக்டோபர்- தமிழர் கட்டிடக்கலை மாதம் – தமிழர் கட்டிடக்கலை, கட்டிடப் பொறியியல் மற்றும்  சிற்பக்கலை இவற்றைப் போற்றுவோம்.

நவம்பர்- தமிழர் ஆன்மீக ஒற்றுமை – தமிழர்களின் அனைத்து மதசார் நம்பிக்கைகள் இவற்றை போற்றுவோம்.

டிசம்பர்- இசை மற்றும் நாட்டியம் – தமிழிசை, நாட்டுப்புற இசை, நவீன இசை, நாட்டியம் இவற்றை போற்றுவோம்.

மேற்கூறியவற்றை செயல்படுத்துதல்:

தமிழக அரசும், பல தொண்டு நிறுவனங்களும் மேற்கூறிய  நிகழ்வுகளை ஒட்டி பல விழாக்களையும் செயல்பாடுகளையும் நடத்தி வருகின்றனர். நான் கூற வருவது இவற்றையும் தாண்டி இத்தகைய நிகழ்வுகளை சமூக வரலாற்றின் நினைவாக மாற்றவேண்டும். அதற்காக இவற்றை ஆவணப்படுத்துதலும் பாதுகாத்தலும் மிக அவசியமான பணியாகும். இந்தப் பணியை செய்யும் கல்வி மற்றும் பிற துறைசார் நபர்களுக்கு உரிய மரியாதையும் விருதுகளும் வழங்கப்படவேண்டும். கடைசியாக அரசின் உதவியில்லாமல் இவற்றை செய்ய இயலாது. தமிழ்ச் சமூகத்தின் பெருமை மிகுந்த அங்கத்தினரான நாம் சமூக வரலாற்றை போற்றும் வகையில் சமூக இயக்கங்களை தோற்றுவித்து அரசின் ஒப்புதலைப் பெற்று இந்தப் பணியை சிறப்புற நடத்தி நமது எதிர்கால சந்ததியினருக்கு உதவ வேண்டும்.

Other learners need prompts that are http://paper-writer.org much more specific

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “சமூக வரலாற்றை நினைவு கூர்வோம்”
  1. kasi visvanathan says:

    கட்டுரை சிற் சில இடங்களில் முரண்பட்டுள்ளது என்பது தெளிவு:
    1. // ஜனவரி – தமிழ் பண்பாட்டு மாதம்.// இது முதல் கோணல். மிகச் சமீபத்தில்தான் அதாவது இந்த ஆண்டு பொங்கலை திராவிடத் திரு நாளாக அறிவித்து சென்னை பெரியார் திடலில் திராவிடத் திரு நாள் கொண்டாடப்பட்டது. அப்படியிருக்க தமிழ் தேசியம் புறக்கணிப்போம் என்று உள்ளூர் உப்புமாக்கள் தீர்மானம் போட்டதை, சர்வதேச ஒபாமாக்கள் உணரமுடியாத தகவல் இடைவெளியும் உள்ளது.
    2. // ஜனவரி – தமிழ் பண்பாட்டு மாதம்.// இது வெளிப்படையாகவே கட்டுரையின் உள்ளடக்கத்துடன் இடிக்கின்றது. ஒளவையார் என்பதா அல்லது அவ்+வையார் என்பதா என்பதை விட பிற்போக்கான கருத்துக்களை பதிவு செய்து வரலாற்றில் காட்டுமிராண்டி மொழி என்ற இழி நிலையினை அடைய வைத்தமைக்கு இந்த மேற்படி அவ்+வையாரோ அல்லது ஔவையாரோதான் காரணம் என்பதில் பகுத்தறிவாளர் பாசறையில் கிஞ்சித்தும் கருத்து பேதம் இல்லை. ஆதலினால் இந்த மாதத்தை பெரியார்-மணியம்மையார் மாதமாகவோ அல்லது பெரியார்- நாகம்மையார் மாதமாகவோ அறிவித்தால் பெண்ணியம் சிறப்புறும்.
    3. செப்டம்பர்- சுயமரியாதையும் – நவம்பர்- தமிழர் ஆன்மீக ஒற்றுமை, என்பதும் முரண்பாட்டின் உச்சம். தமிழ் இனத்தை சிறுபான்மை ௯ பெரும்பான்மை என்று கூறு கட்டிய பின் விஜய நகரத்திலிருந்து சனகம சகோதரர்கள் தமிழர்களை சீர்திருத்துவதற்குப் புறப்பட்ட நாள் முதலாய் தமிழர் பண்பாடு அனைத்தும் அட்ட்டவனைப்படி அழிக்கப்படுகின்றது. ஆகவே ஆன்மீகம் என்ற எந்த அடையாள உரிமையும் இல்லாத இந்த மண்ணில் எதற்கு இப்படி ஒரு புனையப்பட்ட விழாக்கள் ??
    4. டிசம்பர்- இசை மற்றும் நாட்டியம் – இது என்ன அனியாயம். சென்ற வாரம் குத்து மதிப்பாக கோவில்களில் ராஜராஜன் பாடவைத்தையெல்லாம் இசை என்று எப்படி அறிவியல் ஆய்வு இல்லாமல் ஏற்கமுடியும் என்ற வீரபாண்டியனின் கர்ஜனைக்கும் பிறகு இசை பற்றிய அறிவியல் புலன் இல்லாமல் திருவையாறுக்கு பங்கம் என்றால் பகுத்தறிவாளர்களால் ஏற்க முடியாது. குடகு மலையில் பெய்யும் மழைக்கு இங்கு கல்லனையில் பண்பாட்டு விழா எடுப்பது என்பது பண்பாளர் செயல் அல்ல.
    5. ஏப்ரல் மாதம் தமிழ் இலக்கியம் என்பது மிகவும் பொருத்தம். ஆம் முட்டாள்களுக்கு உங்கந்த மாதம். இப்பொழுது பாவேந்தர் முதலே தமிழில் இலக்கியம் என்பது உண்டு. தமிழ் தாத்தாவிற்கோ, பாரதியாருக்கோ, வள்ளலாருக்கோ, தாயுமாணவருக்கோ, உமருப்புலவருக்கோ, வீரமாமுனிவருக்கோ, இளங்கோவடிகளுக்கோ, (அய்) ஐயன் வள்ளுவனுக்கோ, தொல்காப்பியனுக்கோ, அவ் வைப்பாட்டிக்கோ( ஔவைப்பாட்டிக்கோ) தமிழ் இலக்கியத்துடன் தொடர்பு இல்லை என்று கால நிர்னயம் செய்யும் நல்ல உக்தி, திராவிட சால்பின் உன்னத முக்திதான்.
    ஒட்டுமொத்தமாக சிற்சில இடங்களைத் தவிர, கட்டுரைதமிழ் ஆர்வலர்களின் தவறான தமிழிசை ஆர்வத்தை இடைத்துரைத்ததைவிட செம்மையாக திராவிடப் பண் பேனப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இந்த வாசகனின் கருத்துரிமையினையும் மத்திக்கும் சிறகு ஊடகம் உயரப் பறக்க வாழ்த்துக்கள்.

அதிகம் படித்தது