மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வளர்ச்சியின் அறிகுறிகள்

ஆச்சாரி

Aug 1, 2012

ஒரு பொருளாதாரத்தின் வலிமையையும் அதன் நடவடிக்கையும் மற்றும் பெருக்கத்தையும் மதிப்பிடும் எண்ணிக்கையான GDP யைப் பற்றி முற்பகுதிகளில் அறிந்தோம். கூடவே GDP பெருக்கம் மட்டுமே வளர்ச்சியாகுமா என்ற கேள்வியும் எழுந்தது. இதை அறிய நாம் வளர்ச்சி (Development) என்றால் என்ன என்று வரையறுக்க கடமைப்பட்டுள்ளோம்.

பொருளாதாரத்தை மட்டுமே பார்க்காமல் ஒரு சமுதாயத்தின் மொத்த வளர்ச்சியையும் கணித்துப் பார்க்கையில், மருத்துவ வசதிகள், ஆரோக்கியம், படிப்பறிவு, சுற்றுப்புறச் சூழலின் செழுமை, வாழக்கை நீளம், தாய், சேய் நலம் மற்றும் வாழ்க்கைத் தரம் போன்றவைகளையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே சில பொருளாதார வல்லுநர்களின் ஒருமித்த கருத்தாகும்.

பொருளாதார ஆய்வுகளில் வளர்ச்சிசார் பொருளாதாரம் (Development Economics) என்ற கிளையுண்டு. இந்தப் பொருளாதாரக் கிளையை ஆய்பவர்கள் ஒரு சமூகத்தின் மொத்த வளர்ச்சியைப் பற்றி ஆய்வு செய்கின்றவர்கள். இவர்களின் ஆராய்ச்சியினால் பின்தங்கிய மற்றும் வளர்ந்து வருகின்ற நாடுகளின் பொருளாதார சிக்கல்களை வெளிப்படுத்தி அதற்கான பல்வேறு தீர்வுகளையும் முன்வைத்தனர். இவர்களின் ஆழமான கருத்து – ஒரு நாடு வளரவேண்டுமெனில், மேற்கூறிய சுகாதாரம், வாழ்க்கைத்தரம் போன்றவை முதலில் வளரவேண்டும். அதற்கு அரசாங்கம் முக்கிய பங்களிக்க வேண்டும் என்பதே. இது பொது பொருளாதார கருத்துக்கு நேர்மாறானது.

பொது பொருளாதாரம், தனியார் வளர்ச்சியையே முக்கியமாகக் கருதுகிறது. குறிப்பாக GDP போன்ற எண்ணிக்கைகள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தியையும், பெருக்கத்தையுமே கணிக்கின்றன. இதனால் பொது பொருளாதார நிபுணர்கள் தனியார் வளர்ச்சியை மட்டுமே ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்ற கருத்துக் கொள்கையில் இருந்தனர். இதைத் தகர்த்து பின்தங்கிய நாடுகளில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது கல்வியறிவின்மை, சுகாதாரக் கேடு, மழலை, குழந்தை சத்து குறைவு, பெண்கள் உரிமை மறுப்பு போன்றவைகளைக் களைந்தால் நாடு வளரும் என்ற கருத்தை முன்வைத்தனர். இதற்காக, பின்தங்கிய நாடுகளின் அரசுகள் முயற்சி செய்ய வேண்டியும், இதில் முன்னேற்றத்தைக் கணிக்க புதுப் புது எண்ணிக்கைகளையும் உருவாக்கினர்.

உதாரணமாக ‘PQLI’ என்ற எண்ணிக்கை மழலைச் சாவு, வாழ்க்கை நீளம், படிப்பறிவு போன்றவைகளைக் கணிப்பதாகும். Human Development Index (HDI) என்ற எண்ணிக்கை ஆரோக்கியம், சுகாதாரம் போன்றவைகளைக்  கணிப்பதாகும். இதுபோன்ற எண்ணிக்கைகளைத்தான் ஐ.நா.வின் வளர்ச்சி வாரியமான UNDP கணக்கில் கொண்டு நாடுகளுக்குத் தேவையான பண உதவியையும் ஆலோசனையையும் வழங்குகிறது. UNDP யின் millennium development goals  என்று சொல்லப்படுகிற வளர்ச்சிக் குறிக்கோள்கள் மேற்கூறிய பல சமூக நல நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது. இதை தமிழகத்தின் அரசியல்வாதிகள் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். ‘வல்லரசு’, ‘சிங்கார இந்தியா’ போன்ற வெற்றுக் கூற்றுகளை விட்டொழித்து உண்மயான சமூக வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்.

Thus, the problem lies not with the quality of our movies but with the publics lack of awareness that movies of good quality buying essays online are available

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வளர்ச்சியின் அறிகுறிகள்”

அதிகம் படித்தது