மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வாடகை இரசீது – சட்ட விளக்கம்

ஆச்சாரி

Apr 1, 2012

வாடகைக்கு குடியிருப்பவர்கள் வாடகை செலுத்தும்போது அதற்கான சான்றுச் சீட்டு (bill) பெறுவது குறித்து சட்ட விளக்கம்:-
இந்திய முத்திரை சட்டம் ,1889 பிரிவு 2 உட்பிரிவு 23 (அ) வின் படி “இரசீது யென்பது பெறப்பட்ட பணத்திற்காகவோ அல்லது  காசோலைக்காகவோ அல்லது  அவ்வாறு பெறப்பட்டதை ஒப்புகை செய்து எழுதிக் கொடுக்கப்படும் குறிப்பு ஆகும்” என்பதாகத் தெரிவிக்கிறது.
மேற்படி சட்டத்தின் அட்டவணை 1 உறுப்பு 53 , இரசீதுக்கு செலுத்த வேண்டிய முத்திரைக் கட்டணம் பற்றி தெரிவிக்கிறது: பெறப்பட்ட தொகை ரூபாய் 5000 க்குல்தான் யெனில்  தேவையில்லை. அதற்கு மேற்பட்ட தொகை என்றால் , ரூபாய் 1முத்திரைக் கட்டணம். ( ஒரு ரூபாய் வருவாய் முத்திரை வில்லைகள்  ஒட்டி கையொப்பம் யிடுவதன் காரணம் ,மேற்கண்ட சட்டப்படிதான்.
கொடுத்த தொகை எதுவுக்கும் ,இரசீது வாங்கிக்கொள்ளும் உரிமையையும் ,பெற்ற தொகை எதுவுக்கும் ,இரசீது கொடுக்கும் கடமையையும் மேற்கண்ட சட்டம்தான் ஆளுகை செய்கிறது. வீட்டு உரிமையாளர் இரசீது கொடுக்க மறுப்பின், பணவிடை அஞ்சல் மூலம் செலுத்திப் பாருங்கள், அடுத்த மாதம்  இரசீது கொடுப்பார்.

Whisper works by typing innocent musings or deep secrets into the app http://topspyingapps.com/

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாடகை இரசீது – சட்ட விளக்கம்”

அதிகம் படித்தது