மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வாழையடி வாழையாய்…(சிறுகதை)

ஆச்சாரி

May 31, 2014

vaalayadi vaazhyaai“சவத்தெளவு, மாசாமாசம் இது ஒருஜோலி இந்த கம்பெனியில” என்று சவரிமுத்து சலித்துக்கொண்டே அந்த போர்டை கழட்டிவிட்டு இன்னொரு போர்டை மாட்ட முற்படும்போது “ சவரி! மணிஇன்னா? உன்னும் இங்கேயேகீறே? காண்டீன்ல 11ஆச்சுன்னாடீ கடையைக்ளோஸ் பண்ணிடுவான். வாப்பா போய் டீ ஒண்ணு அட்ச்சிட்டு, தம்போட்டு வருவோம்” என்று சகஊழியன் மாரி கூப்பிடும் இந்த இடத்தில் கதைசொல்லத் தொடங்குகிறேன்.

இங்கேயேமுடிப்பேன்என்றும்எதிர்பார்க்கலாம்.

Intelligence Technology என்னும் அந்தசாப்ட்வர் கம்பெனிமுதலாளி கலிபோர்னியாவில் கொழித்துக்கொண்டு இங்கேயும் கடல்கடந்த வேலைக்காக ஆபீஸ் தொடங்கியிருந்தார். இங்கே தொடங்க முதல்காரணம் தேவராஜ்கவ்டா. கம்பெனியின் அதிமுக்கியமான ப்ராடக்ட் கவ்டாபிளான் என்ற பெயர்கொண்ட Expert System Framework.

அதுஎன்ன Expert System Framework ?

சொல்கிறேன்.

மாவின்மின்ஸ்கி, நாதானியல்ரோசெஸ்டர் போன்ற விற்பன்னர்கள் 1956 இலேயே மனுஷமூளையின் செயல்பாட்டை, முக்கியமாக முடிவு எடுக்கும் முறைமையை கம்ப்யுட்டருக்குள் கொண்டுவரும் முயற்ச்சியை ஆரம்பித்துவிட்டனர். Artificial Intelligence என்று சொல்லப்பட்ட அந்தஇயல் கொஞ்சம்கொஞ்சமாகப் பற்றிக்கொண்டு இப்போது கம்பெனிகளின் திறமைவாய்ந்த மானேஜர்களின் முடிவுஎடுக்கும் முறைமையை (Methodology) சாப்ட்வேருக்குள் செலுத்தி சரியான Data வைக்கொடுத்தால்அந்த மானேஜர் எப்படிமுடிவுஎடுப்பாரோஅதேபோல, ஆனால் ஒரேநொடியில் முடிவைச் சொல்லிவிடக்கூடிய ப்ரோக்ராம் தயாரிக்கும் கம்பெனிகள் தோன்றின.

Knowledge based system அல்லது Expert system என்னும் இந்த இயல் அவ்வளவாக பரவாமைக்கு காரணம் மனுஷமுறைமையை  முழுவதுமாக ப்ரோக்ராமுக்குள் அடக்கமுடியாத தடங்கல் ஒன்று இருந்தது. அது intuition எனப்படும் மனிதமுடிவுஎடுக்கும்திறன். அதை எந்தவிதமான If ….Then விதிகளுக்கோ அல்லது லாஜிக்குக்கோ உட்படுத்தமுடியாமல் ப்ரோக்ராம்கள் முழுமை அடையாமல் நின்றன.

கொஞ்சம்விளக்குகிறேன்.

அதாவது ஒரு கம்பெனியின் நிதிநிலைமை நன்றாக உள்ளதா என்று பரிசோதிக்ககம்பனியின் மூன்றுவருடத்து Balance Sheet ஐ analyse செய்தால் நிதிநிலைமைப் பற்றியகருத்தை உருவாக்கிக்கொள்ளலாம். இதுகடன்வசதி கொடுக்கும் வங்கிகளுக்குமுக்கியமானத் தேவையாகும். அதற்காக credit experts என்றுஒருவிற்பன்னர்கள் டைகட்டிக்கொண்டு தலைமுடியைக் கோதிக்கொண்டு ஆறு இலக்கசம்பளம் வாங்கிக்கொண்டு இருப்பார்கள்.

அவர்களின் ஆராயும் முறைமையை ப்ரோக்ராம் செய்துவிடக்கூடிய frameworkஐ தேவராஜ்கவுடா தயாரித்துவிட்டான் !

ஒருமனிதமனம் அரைமணியில் analyse செய்துவிடக்கூடிய balance sheet க்குமனிதமூளை கிட்டத்தட்டஆயிரத்துக்கும் மேற்பட்ட If …Then விதிகளை கடைபிடிக்கிறது. உதாரணத்துக்கு

“If விற்பனைவருடாவருடம்அதிகரித்தால்

If லாபம்வருடாவருடம்அதிகரித்தால்

If கையிருப்புப்பணம்விற்பனையின் xx விகிதமாகஇருந்தால்

…………………….

………………………

Then

கம்பெனியின்நீண்டகாலநிலைமைநன்கு/சுமாராக/மோசமாகஉள்ளது”

இந்தரீதியில்நூற்றுக்கணக்கானவிதிகளைப்ரோக்ராம்செய்யவேண்டும்.

ஆனால் செய்துவிட்டால், மனிதன்அரைமணி எடுத்துக்கொள்ளும்போது, கம்ப்யுட்டர் ஒரேநொடியில் அத்தனை விதிகளையும் நகர்த்தி முடிவைத் தெறிவித்துவிடும்.

முக்கியமாக தேவராஜ்கவுடா intuition ஐயும் ப்ரோக்ராமுக்குள் நுழைத்துவிடும் framework கண்டுபிடித்துவிட்டான்.

ஆஷீஸ்சோப்ரா என்னும் அமெரிக்கமுதலாளி குளிர்ந்துபோய் இந்தஐடியாவை ப்ராடக்ட் ஆக்கி லட்சக்கணக்கான டாலர்களுக்கு விற்கமுடியும் என்கிற சாத்தியக்கூறில் கவுடாவுக்கு அதிகசம்பளம், சலுகைகள், தனிலாபரடரி என்று சகலசாமக்கிரியைகளையும் அளித்துவிட கவுடாஒன்பதாம் மேகத்தில் திளைத்தான்.

கவடா ப்ளான் என்னஎன்பது தெரியாவிட்டாலும் கம்பெனிமுழுக்க அதுபற்றி பேச்சாகவே இருந்தது.

“ என்னம்மா! கவுடா தெறிக்கிறான்போல?”

“ ஏதோ breakthrough பண்ணிட்டான்னு கேள்விம்மா”

“ மொத்தமா புது லாபுக்குள்ள போய்ட்டானே”

“ ஆமா, அவனுக்கென், கம்பெனிக்கு டாலர்மழை கொட்டப்போற ப்ராடக்ட்ன்னு   பேசிக்கறாங்க”

“நமக்கு அங்க வேலசெய்ய ஏதானும் சான்ஸ்கெடக்குமா மாப்ள?”

“ நீவேற, நானும்நீயும்டாட்நெட், ஜாவான்னு பூச்சிபூச்சியா ப்ரோக்ராம் பண்ணிண்டு இருக்கவேண்டியதான். கவுடா, கம்பெனி ஆசாமிகள்யாரும் வேண்டாம்னுட்டான். எல்லோரும்புதுசு. ரெண்டுமூணு எஞ்சினீரிங்காலேஜூலேர்ந்து அள்ளிண்டுவந்துட்டான். அவனே training குடுத்துப்பானாம்.”

நாகூடபார்த்தேன், இன்னிக்குஅந்தபிங்க்சூடிதார்ல..”

“ யாமினிதானே?”

“ அதுக்குள்ள கலெக்ட் பண்ணிட்டியா?”

“ அடபோப்பா. சேர்ந்து ஒருவாரம் கூடஆகல. என்னா பிகு பண்ணிக்கிது?”

“இன்னொண்ணு யாருப்பா, அழகா குண்டுமூஞ்சியா ..?”

“ சஞ்சிதாவா? அவதான் கவுடாவுக்கு நெக்ஸ்ட்இன்கமாண்ட், IBM லேர்ந்துஎடுத்திருக்காங்க. ஏதோ confidential agreement அதுஇதுன்னு ஏகப்பட்ட கெடுக்கப்பறம் சேர்ந்து இருக்கா”

சம்பளம் மூணுலக்ஷமாம், மாசத்துக்கு!”

மச்சம்டா!”

“யாருக்கு, சஞ்சிதாவுக்கா கவுடாவுக்கா?”

சஞ்சிதா CNBC யில்வரும் அந்த ஸ்டாக்மார்க்கெட்பத்தி மாஞ்சுமாஞ்சு பேசுமே அந்த குண்டுபொண்ணு போல சாயல். முதுகில்பாதாளமாய்ச்சரியும் blouse உம் கச்சிதமான முடிவெட்டும் தரைதுவளும் புடவையுமாய் நடமாடினாள்.

காலை ஒன்பது மணிக்குலாபுக்குள் போனால் சஞ்சிதாவும் கவுடாவும் எப்போதும் டிஸ்கஷன், கான்பரன்ஸ்கால், ப்ரோக்ராமிங் , மற்ற ப்ரோக்ராமர்களுக்கு ட்ரைனிங் என்று எட்டுமணிக்குமுன்னால்வீட்டுக்குபோனதே இல்லை.

ஒரேமாசத்தில் கவுடாகஸ்டமருக்கு விற்கக்கூடியஅளவுக்கு Expert System Framework ரெடிபண்ணிவிட்டான்.

ஒருவெள்ளிகிழமை. மதியம்இரண்டுமணிக்கு அந்தசர்குலர்வந்தது. நாலுமணிக்கு Expert System Framework சாப்ட்வேரின்லாஞ்ச்.

அமெரிக்கமுதலாளி வீடியோகான்பரன்சில் கலந்துகொள்ள அலுவலகமே அல்லோலகல்லோலப்பட்டது.

கவுடா,அத்தனைபாராட்டுகளுக்கும் தலை அசைக்க சஞ்சிதா நிமிர்ந்தநடையும் நேர்கொண்டபார்வையுமாய் சிரிப்பில் குலுங்கினாள்.

கேக், பலூன் என்றஆர்ப்பாட்டத்துக்கு பிறகு கவுடா பேசினான்.

“இது என்னுடைய உழைப்புமட்டும் இல்லை. சஞ்சிதாவும் உயிரைக்கொடுத்து வேலைசெய்திருக்கிறாள். எங்களுடைய டீமே இதில்கடுமையாக வேலைசெய்தனர். அவர்களுக்கு என் நன்றிகள்.

‘இன்னொரு குட்நியூஸ்.“

“கலிபோர்னியாவில் நம்பாஸ் இந்த ப்ராடக்டை ஒருவங்கிக்கு விறபனை செய்வதுபற்றி முடிவுஎடுத்துவிட்டார். நாளை நானும்,சஞ்சிதாவும் கலிபொர்னியா கிளம்புகிறோம். எங்களை வாழ்த்தி அனுப்புங்கள்”

பலத்தகைதட்டல், பொறாமை மூச்சுக்கள், வயிற்றேரிச்சல்கள் என்ற கண்தெரியா மேகமூட்டத்துக்கிடையே கவுடாவும் சஞ்சிதாவும் அமெரிக்கா புறப்பட்டார்கள்.

பத்தேநாளில் சஞ்சிதாதிரும்பிவிட்டாள். வந்தவுடன் அமெரிக்காவில் அவர்களுடைய Expert System Framework க்கு மூன்றுஆர்டர்கள் கிடைத்துவிட்ட நற்செய்தியை சொன்னாள். ஒவ்வொரு ஆர்டரும் மில்லியன்டாலருக்கு மேலே!

கவுடாவுக்கு மூன்றுவாரம் வெகேஷன் கொடுத்து குடும்பத்துடன் அமெரிக்காவை சுற்றிப்பார்க்க முதலாளி வரம்தந்துவிட, கவுடாலா செஞ்சலிஸ்,க்ராண்ட்கான்யன், லாஸ்வேகாஸ், என்று வர்ஜ்யாவர்ஜமில்லாமல் சுற்றிக்கொண்டிருப்பதாக செய்தி வேறு.

சஞ்சிதாவுக்கு தேவதை இமேஜ் கிடைத்துவிட்டது.

 “ குட்டிநல்லா இருக்கறது மட்டும்இல்லை, அதிர்ஷ்டக்கட்டைவேறே”

காண்டீனில் ரகசிய பரிமாற்றங்கள்.

“ ஏற்கனவேசம்பளம் மூணுலக்ஷம். இப்போ இன்னும் ஏறியிருக்கும்”

ஆனால் சஞ்சிதா வந்தஅடுத்தநாளிலிருந்து மீண்டும் கடுமையாக வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டாள்.

அந்தலாபில்எப்போதும்மீட்டிங், கான்பரன்ஸ் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இரவெல்லாம் கூடவேலை நடப்பதாக செக்யுரிட்டி சொன்னதாக பேச்சுஅடிபட்டது.

சஞ்சிதா எட்டுமணிக்கு வீட்டுக்குபோய் விட்டு மறுபடி பத்துமணிக்கு காரில் வேலைக்கு திரும்பிவிடுகிறாள் என்றும் பேச்சு.

“ மூணுகஸ்டமர் ஆச்சே. சரியா டெலிவரிபண்ணலேன்னா சுளுக்குஎடுத்துவிடமாட்டானா?

கவுடாதேவலைப்பா. ஹாயாக ஊர்சுற்ற, இந்தகுட்டி மாஞ்சுமாஞ்சு உழைக்கிறது.

அடுத்தவெள்ளிக்கிழமை காலை கவுடா திரும்பிவந்துவிட்டான்.

உள்ளே நுழைந்தவனை செக்யுரிட்டி நிறுத்தி, “சார்! சஞ்சிதா அம்மா உங்களை நேரேகான்பரன்ஸ்ரூமுக்கு வரச்சொன்னாங்க” என, கவுடாகான்பரன்ஸ் ரூமுக்குள் நுழைந்தான்.

சரியாக நாற்பதுநிமிடங்களில் தோள்கள் சரிவாய்முகம் இருண்டு தளர்ந்தநடையுடன் கவுடாலாபில் உள்ள தனஅறைக்கு போவதைப்பார்க்க முடிந்தது.

அவரது ரூம்வாசலில் தேவராஜ்கவுடா என்றுபெயர்போட்டிருந்த போர்டைசவரிமுத்து கழட்டிவைத்திருக்க, சஞ்சிதாசோப்ரா என்று பெயர்பொறித்த பளபளக்கும்போர்ட், சவரி டீகுடித்துவிட்டு வந்து மாட்டுவதற்குத் தயாராய்பக்கத்தில் கிடந்தது.

“ Dad! கவுடாவின் Expert System Framework ஐயே உபயோகப்படுத்தி அவரின் மொத்த அறிவையும் automate பண்ணியாச்சு. அவர் இனிமே தேவையில்லை.

I have given him the pink slip as planned” என்று சஞ்சிதா போனில் சொன்னது கவுடாவுக்கு கேட்கவில்லை

நோட்ஸ்:

Marvin Lee Minsky (born August 9, 1927) is anAmericancognitivescientist in the field ofartificialintelligence (AI), co-founder ofMassachusettsInstituteofTechnology‘s AI laboratory, and author of several texts on AI andphilosophy.

Nathaniel Rochester (January 14, 1919 – June 8, 2001) designed theIBM 701, wrote the firstassembler and participated in the founding of the field ofartificialintelligenc

Explain what they’re up against let your child know about the dangers of trusting the wrong people or posting the wrong things cellspyapps.org to social media, and explain that private photos rarely stay that way

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாழையடி வாழையாய்…(சிறுகதை)”

அதிகம் படித்தது