மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வாழ்க்கையும்…(கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jul 3, 2021

siragu victory1

 

தோல்வியின் சருகெடுத்து

நெருப்பிட்டு பொசுக்குவோம்;

தீயில் எழும் புகையை பிடித்தெடுத்து

முகிலின்  தோட்டத்திற்கு அனுப்பி

நீரின் சூலை ஏந்திடச் செய்வோம்;

 

ஒவ்வொரு தோல்வியும்

சூல் கொள்கிறது

வெற்றித்  தடங்களை;

 

தடங்களின் கனம்  அதிகமானால்

மழையாய் பொழியும் தரை தொட்டு;

துளிகள் மீண்டு செல்லும் முகில் கூட்டத்திடம்;

 

நீரின் வட்டச் சக்கரம் போலவே

தொடர்ந்து கொண்டே இருக்கும்

நீண்டுகொண்டே இருக்கும்

பொழிந்து கொண்டே இருக்கும்

வாழ்க்கையும்…

 


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாழ்க்கையும்…(கவிதை)”

அதிகம் படித்தது