மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வாழ் நாள் நன்மை

ஆச்சாரி

Jan 14, 2012

ராமசாமி ஊரிலேயே மிகவும் நல்லவர். ஏழை எளியவர்களுக்கு இல்லை என்று ஒரு நாளும் சொல்லாதவர். வயதான காரணத்தினால் காலம் ஆனார். உடனே  நல் தேவதைகள் அவரை சொர்க்கத்திற்கு கூட்டிச் சென்றார்கள்.

பின் ராமசாமிக்கு சொர்க்கத்தை சுற்றிக் காண்பித்தனர். ஒவ்வொரு மனிதர்களாகக் காண்பித்து இவர் இவ்வளவு நன்மை செய்தவர்,  இதைச் செய்தார் , அதைச் செய்தார் என்று விவரித்தனர். அப்போது ஒரு கால் மட்டும் அதுவும் பாதத்தில் இருந்து முழங்கால் மூட்டு வரை இருப்பதைக் கண்டார் ராமசாமி. மிகவும் வியப்புடன் இதென்ன விநோதமாக உள்ளதே என்றார் தேவதைகளைப் பார்த்து.

தேவதைகள் உடனே ருத்திரன் என்னும் கருமியின் காலின் ஒரு பகுதி இது. அவனுடைய மீதி உடற்பகுதி நரகத்தில் உள்ளது என்றும், ருத்திரன் ஒரு கருமி, கனவில் கூட பிறருக்கு உதவும் எண்ணம் இல்லாதவன். தான் தான் என்று சுயநலமாகவே வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து வந்தவன். அவன் வாழ் நாளில் ஒரே ஒரு முறை அறிந்தோ அறியாமலோ செய்த நன்மைக்காக அவன் கால் இங்கு உள்ளது என்றனர்.

ஒரு நாள் ருத்திரன் தெரு ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தான். வழியில் ஒரு பசு கம்பத்தில் கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைக் கண்டான். அக்கயிறு நீளம் குறைவாகவே இருந்தது. சிறிது தொலைவில் ஒரு பானையில் கலநீர் இருந்தது. அப்பசு கலநீர் பானையை அடைய முடியாமல் கழுத்தை எட்டி எட்டி இழுத்து முயற்சி செய்து கொண்டிருந்தது. ஆனால் கயிறு கழுத்தை இறுக்கியது. எதேச்சையாக இதைப் பார்த்த ருத்திரன் தனது வலது காலால் கலநீர் பானையை எட்டி உதைத்து பசுவிற்கு அருகில் தள்ளினான். பசுவும் அந்த நீரைக் குடித்து தாகம் தீர்த்தது. தாகம் தீர்ந்த பசு அவன் கால்களுக்கு மனமார நன்றி தெரிவித்தது. இது ஒன்றே அவன் செய்த வாழ் நாள் நன்மை. இதற்காகவே அவன்  இறந்த பின் அவன் கால்கள் சொர்கத்தில் உள்ளது என்றனர் தேவதைகள்.

என்ன குட்டிகளா? ஒரே ஒரு நன்மைக்கே முழங்கால் சொர்க்கம் அடைந்தது என்றால் வாழ் நாள் முழுவதும் நன்மைகள் செய்தால் கண்டிப்பாக நாம் முழுமையாக சொர்க்கம் அடைவோம் அல்லவா?

சொர்க்கம் கிடைப்பது இருக்கட்டும் பிறருக்கு உதவும் இன்பம் மிகவும் அலாதி. அதை நீங்களும் செய்து பாருங்களேன் உங்களுக்கும் புரியும். என்ன  இன்று முதல் பெரியோர் சொல் கேட்டு, பிறர் தேவைகள் அறிந்து உதவி செய்வோமா?

It http://essaydragon.com/ has a searchable directory of on-line sources


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாழ் நாள் நன்மை”

அதிகம் படித்தது