சனவரி 22, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

விளை நிலம் இல்லாமல் மாட்டுக்குத் தீவனம் விளைவிப்போம்

ஆச்சாரி

Apr 26, 2014

சென்ற கட்டுரையில் <a href=’http://siragu.com/?p=13510′>தலைகீழாக  தக்காளி வளர்க்கும் தொழில்நுட்பம் </a> பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் ஒரே வாரத்தில் விலை நிலமே இல்லாமல் கால்நடைகளுக்கு எவ்வாறு தீவனம் வளர்ப்பது என்பது பற்றி பார்ப்போம்.

மாடுகளுக்கு தினமும் புல் கொடுத்து வளர்ப்பது மற்றும் விலையுயர்ந்த தீவனத்தை கொடுப்பது கால்நடை பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. அதிக மாடுகளை வைத்திருப்பவர்கள் அதிக அளவு புள்களை வளர்க்க அதிக இடமும், அதிக அளவு தண்ணீர் மற்றும் இதர இடுபொருட்களும் தேவைப்படுகிறது. அது மட்டுமன்றி தட்ப வெட்ப நிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. (முக்கியமாக மேலை நாடுகளில் குளிர் காலங்களில் புல் வளர்க்க முடியாது). அதே போல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் (தற்போது எண்ணிக்கையில் குறைந்து வந்தாலும்) புல் வளர்க்க போதுமான இடம் இருப்பதில்லை.

இந்த பிரச்சனையை தீர்க்க Fodder Solutions என்ற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது (Seed to Feed in 6 Days). தொழில்நுட்பம் என்றால் எதோ பெரிய ராக்கெட் சயின்ஸ் என்று நினைத்து விடாதீர்கள். மிகவும் எளிதான யோசனைதான் அது. நாம் முளை கட்டிய பயிரை சாப்பிடுகிறோம் அல்லவா? அதே முறையை கால்நடைகளுக்கும் விரிவுபடுத்தி விட்டார்கள்!. புற்களோடு  தீவனத்தையும் சேர்த்து நூதன முறையில் கால்நடைகளுக்கு உணவிட இம்முறையை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கு செய்ய வேண்டியன கீழ் காண்பவை.

1.தேர்ந்து எடுக்கப்பட்ட தானியம் மற்றும் பயிறு விதைகளை அவர்கள் கொடுக்கும் பிரத்யேகமான டிரேயில் போட வேண்டும். அந்த டிரேயை,Fodder Solutions நிறுவனம் கொடுக்கும் பிரத்யேக அறையில் வைத்து வளர்க்க வேண்டும்.

2. தண்ணீரை குறிபிட்ட இடைவெளியில் தெளித்து கொண்டு இருக்க வேண்டும்.

3.அவர்கள் கொடுக்கும் அறையில் வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவை தக்கவைக்கப்படுகிறது.

4. நீர் மற்றும் தட்பவெப்ப நிலை இருப்பதால் விதை முளை விட்டு ஆறே நாட்களில் சுமார் 12 செமீ உயரம் வளர்ந்து விடுகிறது.

5.வளர்ந்த புல்லை டிரேயிலிருந்து அப்படியே எடுத்து மாட்டிற்கு உணவாக கொடுக்கலாம். டிரேயில் உள்ள பயிரில் செடியும் வேரும் மட்டும் இருப்பதால் கால்நடைகள் அப்படியே முழுவதுமாக சாப்பிட்டு விடும்.

6.இது போல் டிரேயை சுழற்சி முறையில் உபயோகப்படுத்தினால் தினமும் புல் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

7.அடுக்கடுக்காக டிரேக்களில் வளர்ப்பதன் மூலம் மிகக் குறுகிய இடத்தில்  பல மாடுகளுக்கு தேவையான புல்களை வளர்க்களாம்.

இவ்வாறு பெறப்படும் முளை கட்டிய பயிரிலிருந்து கிடைக்கும் சக்தி  மார்கெட்டில் கிடைக்கும் பிற தீவன பொருட்களுக்கு இணையானது என்கிறார்கள். அது மட்டுமன்றி விதை முளை விடும் போது அதன் என்சைம் செயலாக்கம் அதிகரிக்கிறது. இந்த என்சைம், புரோட்டீன்களை எளிதில் செரிக்கக்கூடிய அமினோ அமிலங்களாகவும், கார்போஹைடிரேட்டை எளிய சர்க்கரை பொருட்களாகவும், கொழுப்பை, எளிய கொழுப்பு அமிலங்களாகவும் மாற்றி கொடுக்கிறது. அதாவது  இந்த உணவை செரிக்கபட்ட உணவு எனலாம். அது மட்டுமல்ல, இவ்வாறு முளைகட்டும் போது கால்நடைக்குத்தேவையான  வைட்டமின்A,E, பயோட்டின், நார்சத்து, Anti-oxidants மற்றும் போலிக் அமிலம் போன்றவற்றின் அளவும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முளைவிடும்போது எதிர்ப்பு சத்து காரணியாக (Anti Nutritional factor) உள்ள பைட்டேசின் அளவு குறைவதாகவும் ஆய்வுகள்  உறுதி செய்கிறது.

தமிழகத்தில் இயற்கையே விதையை முளைத்து வளர்க்க நல்ல  தட்ப வெப்பநிலையை கொடுக்கிறது. விதை தவிர எந்த பெரிய முதலீடும் இல்லாமல் இதை தமிழக விவசாயிகள் பரிசோதனை செய்து பார்க்கலாம் அல்லவா? இந்த எளிய தொழில்நுட்பத்தை இந்தியாவில் கூட பயன்படுத்தலாம் அல்லவா?

இது பற்றி மேல் விவரங்கள் அறிய http://www.foddersolutions.co.uk என்ற தளத்துக்கு செல்லுங்கள்.

உணவாக நாம் உண்ணும் முள்ளங்கி எவ்வாறு விவசாயத்துக்கு உழவாகவும்,உரமாகவும் கால்நடை தீவனமாகவும் உபயோகமாகிறது என்று அடுத்த கட்டுரையில் காண்போம்.

Therefore, to maximize your scores it is better for you to guess at cpm homework help an answer than not to respond at all

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “விளை நிலம் இல்லாமல் மாட்டுக்குத் தீவனம் விளைவிப்போம்”
  1. Saravanan says:

    இது புதுசில்லை. ஃபாடர் மெஷின் என்பது பல காலமாக இருப்பதுதான். ராஜீவ் காந்தி காலத்தில் ‘ஃபாடர் மெஷின் இறக்குமதி ஊழல்’ புகழ் பல்ராம் ஜாக்கர் விவகாரம் நினைவிருக்கிறதா?

அதிகம் படித்தது