மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வீட்டுகணக்கு – குறும்பட விமர்சனம்

ஆச்சாரி

Jun 4, 2011

விமர்சகர் : திரு.சமுத்ரன்

 

இக்குறும்படம், 6 அல்லது 7 வயதே ஆன ஒரு சிறுமி, தன்பக்கத்து வீட்டில் தங்கி இருக்கும் இளைஞர்களிடம் கடன் கேட்கும் காட்சியில் ஆரம்பிக்கிறது. வருமானம் என்று எதுவுமில்லாமல் சினிமாவில் பாட்டு எழுதுவதாக சொல்லி குடித்தும் புகைத்தும் வெட்டியாக வீட்டிலேயே இருக்கும் பொறுப்பற்ற அப்பன், குடும்பத் தேவைகளை சமாளிக்க குறைந்த சம்பளத்தில் வேலைக்கு போகும் அம்மா, அத்தெருவில் உள்ள எல்லோரிடமும் கடன் என்ற மோசமான நிலையில் இருக்கிறது அச்சிறுமியின் குடும்பம்.

 

தங்கள் பற்றாக்குறை வீட்டுக் கணக்கை கடன் மூலமே சமாளிக்கிறான் அச்சிறுமியின் தகப்பன். மளிகை, வீட்டு வாடகை, சலவைக்கடை, டீக்கடை என எந்தப் பக்கம் சென்றாலும் கடன்… கடன். அதனால், தான் போனால் கடன் குடுக்க மாட்டார்கள் என்று தெரிந்து தன் மகளான அந்தச் சிறுமியையே கடன் வாங்க அனுப்பி வைக்கிறான் அவன். கடன் கேட்கும் போது வரும் ஏச்சுப் பேச்சுக்களையும் அச்சிறுமி பொறுமையுடன் அங்கேயே எதிர்கொள்கிறாள். “எங்கஅப்பாசம்பாதிச்சு எப்படியும் கடன திருப்பி குடுத்துருவாருசார்” – கடன் வாங்குவோரிடம் எப்போதும் அப்பாவியாய் அந்த பெண் சொல்லும் வசனம் இது. கணக்கு வழக்கில்லாமல் எல்லோரிடத்திலும் கடன் வாங்கி இருக்கும் போது நம் பணம் திரும்பி வரும் என்ற எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டாலும் அச்சிறுமியின் அப்பாவி முகத்துக்காக சிலர் தொடர்ந்து கடன் கொடுக்கிறார்கள்.  தினமும் இதே கதையாகிப் போக, அதன் பிறகு என்ன ஆனது என்பதை இணைப்பில் கண்டு நெகிழுங்கள்.

ஆரம்பம் முதல் வெகு இயல்பாகவே செல்லும் இப்படம் வெகு இயல்பாகவே முடிகிறது. வெகு நேர்த்தியான காட்சி அமைப்புகள் நம்மை கதையுடன் ஒன்ற வைக்கின்றன. கதைக்கு பொருத்தமான நடிகர்கள் இப்படத்தை தரமான படைப்பாக்க நன்றாகவே ஒத்துழைத்திருக்கிறார்கள். அந்தத் தெருவை துல்லியமான ஒலி-ஒளிப்பதிவின் மூலம் அழகாக நம் கண் முன் கொண்டு வருகிறார்கள் ஒலி-ஒளிப்பதிவாளர்கள். இன்னும் சற்று முயன்றால் இயக்குனர் A.V அருண் பிரசாத்துக்கு கலைத்துறையில் மிக நல்ல எதிர்காலம் இருக்கிறது.

 

தமிழ் சினிமாவைப் பார்த்துப் பழகிய நம் மனம், அச்சிறுமி அவளின் அப்பாவை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறது, அச்சிறுமியின் நிலைமைக்கு விடை தேடுகிறது. ஆனால் நம் விருப்பப்படி இப்படம் யாரையும் எந்த செயலையும் நியாயப்படுத்தவில்லை அதே போல் (வாய்ப்பிருந்தும்) யாரையும் குறை சொல்லவுமில்லை, இதுவே இக்குறும்படத்தின் பெரும் குறையாக நம்மை உறுத்துகிறது.

 

கவிதையாக முடியும் கதையில், நம் கோபம் ஏற்கனவே அவள் அப்பாவின் மேல் பலமாக விழுந்திருப்பதால், முடிவில் நமக்கு ஏற்பட வேண்டிய தாக்கம் சிறிது சிதறுகிறது.

 

Stealth www.trymobilespy.com/ camera the stealth camera is where the subscriber can take a snapshot from the monitored cell phone and remotely from the control panel

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “வீட்டுகணக்கு – குறும்பட விமர்சனம்”
  1. thambi says:

    குறும்படம் – சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள். நம்ம நேரத்தை நிறைய விழுங்காம , ௧௦ – ௧௫ நிமிடத்துல முடிஞ்சிடுது. மனதிற்கும் ஒரு திருப்தி .

அதிகம் படித்தது