மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வெளியானது மைக்ரோசாப்ட்டின் புதிய இயங்குதளம் – விண்டோஸ் 8

ஆச்சாரி

Nov 1, 2012

உலகமெங்கும் பல்வேறு மக்களால் பயன்படுத்தப்படும் இயங்குதளம்(Operating System) விண்டோஸ். சுமார் நூற்றைம்பது கோடிக்கும் மேற்பட்ட கணினிகளில் விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளத்தையே பயன்படுத்துகின்றனர்.

விண்டோஸ் இதுவரை பல இயங்குதளங்களை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக windows xp என்ற இயங்குதளம், கணினி உலகின் ஒரு முக்கிய இயங்குதளமாக இன்றும் பேசப்படுகிறது. புதிய இயங்குதளங்கள் வந்துகொண்டே இருக்கும் இக்காலத்திலும் windows xp யின் மதிப்பு இன்னும் குறையவில்லை.

அதன் பின்னர் windows7 என்ற இயங்குதளம் ஜூலை 22ம் தேதி, 2009ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டது. இந்த இயங்குதளத்தின் சிறப்பம்சமே இதன் userinterface  தான். Windows xp யை ஒப்பிடுகையில் windows7 மிக எளிமையானதாக இருந்ததுடன், Windows7 னுடைய   பூட்டிங் நேரமும் குறைக்கப்பட்டது மற்றும் இதன் செக்யூரிட்டி திறனும் அதிகரிக்கப்பட்டது. Windows7ன் அடுத்த பரிமாணமே தற்பொழுது வெளியாகியுள்ள Windows8 இயங்குதளம்.

Windows 8:

விண்டோஸ் 8 இயங்குதளமானது Personal computer, Laptop மட்டுமின்றி Tablet, Smartphone என அனைத்திலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. Windows 8 ஆனது குறிப்பாக கை பேசியின் சிறந்த இயங்குதளமாக இருப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சிறந்து விளங்கும் Android மற்றும் iOS க்கு போட்டியாக Windows 8 கட்டாயம் இருக்கும்.

Windows 8-ல் புதிதாக USB3.0, UEFI Filmware, Cloud Computing  மற்றும் ARM architecture என புதிய தொழில்நுட்பங்களை சேர்த்துள்ளது. இதன் பாதுகாப்பு அம்சமாக Malware Filtering  மற்றும் Built-in Anti Virus Software அமைத்துள்ளனர்.

Windows Shell எனப்படும் புதிய Graphical User interface யை மைக்ரோசாப்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் Start Screen  புதிய மாறுபட்ட தோற்றத்தை கொண்டது. இதில் தொடுதிரை(Touch Screen Input) வசதி உள்ளது.

Windows Store and Apps:

விண்டோஸ் 8, புதுப்புது Apps சை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தையும் Windows Store market-ல் பெற்றுக்கொள்ளலாம். விண்டோஸ் ஸ்டோர் புதிய API(Application Programming Interface) களை கொண்டது. Programming Language எனப்படும் C, C++,  மற்றும் VB.NET, HTML, Javascript என அனைத்தையும் Support செய்யக்கூடியதாக Windows 8 உள்ளது.

Windows 8 ன் பலம்:

  • இதன் Boot Time எனப்படுவது 8 வினாடிகள்
  • 3G & 4G வசதிகள் கொண்டது
  • Gesture எனப்படும் முறையின் மூலமாக Login செய்தல்
  • Push Button Reset முறை
  • USB Drive மூலமாக Installation செய்யும் வாய்ப்பு

Windows 8 ன் பலவீனம்:

  • Start Menu வசதி இல்லை
  • Touch Interface வசதியை உபயோகிக்க Hardware தரத்தை உயர்த்த வேண்டியது அவசியம்
  • Windows Store ல் உள்ள Appsன் அளவு சற்று குறைவே.

Windows 7 உபயோகிப்போர் மேலும் ரூபாய் 2000 கொடுத்து Windows 8 Upgrade செய்துகொள்ளலாம். தனியாக வாங்குவதற்கு ரூபாய் 3499 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இந்த விலை ஜனவரி மாதம் 31ஆம் தேதி 2013 வரை மட்டுமே. அதன் பின்னர் இதன் விலை ரூபாய் 11,000 ஆகும்.

If a child is experiencing trymobilespy.com/ cruel or embarrassing texts, they may want to hide or erase all evidence that they are being victimized

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வெளியானது மைக்ரோசாப்ட்டின் புதிய இயங்குதளம் – விண்டோஸ் 8”

அதிகம் படித்தது