மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வேட்டைக்காரன் கதை

ஆச்சாரி

Feb 15, 2012

செங்காடு என்ற மலைப் பகுதியில் வீரா என்ற ஒரு கழுதைப்புலி  வசித்து  வந்தது. காட்டு ஆண் விலங்கு கூட்டத்திலேயே தான் தான் அதிவீரன் என்று தன் மனைவி ராணியிடம் எப்பொழுதும் கூறும். விலங்குகள் வேட்டைக்குச் சென்று  திரும்பும் போது எல்லாம் ,  தன் மனைவியிடம் வீரா “அனைத்து வேட்டை விலங்குகள் மத்தியில்,  நான் தான்  துணிச்சலாக செயல்பட்ட ஒரே  வேட்டை விலங்கு” என்று கூறும். அன்றும் அப்படித்தான் இன்று என்ன நடந்தது தெரியுமா?  நான் தனி ஒருவனாக  நின்று விரட்டி, விரட்டி சிறுத்தைப் புலியையும், யானையையும் ஓடவைத்தேன்  என்றது. மற்ற விலங்குகள் எல்லாம் தொடை நடுங்கிகளாக இருக்கின்றன என்று பெருமை பேசியது. நான் என் முன்னங்கால்களை வேகமாக தூக்கி  முன்னோக்கி கொண்டு சென்ற போது சிங்கம் கூட என் வேகத்தைப் பார்த்து  பயந்து ஓடிவிட்டது, நான் வேட்டை விலங்குகளில் மிகச் துணிச்சலான  வேட்டைக்காரன் என்றது. அதைக்கேட்ட அவன் மனைவி ராணி  அப்படியா? மற்ற ஆண்  விலங்குகள்  யாரும் இன்று வீட்டுக்கு வேட்டையாடி இறைச்சி எடுத்துட்டு செல்லவில்லைனு சொல்லுங்க என்றது.

“அதெப்படி அப்படியே விட  முடியும் நான் வேட்டையாடியதில் நம் குடும்பத்துக்கு போக மிச்ச இறைச்சியை மற்ற விலங்குகளுக்கு  பிரிச்சு கொடுத்துட்டேன். பாவம் கூட்டத்தோட, குட்டிகளோட சாப்பிட்டு மகிழ்ச்சியாக வாழட்டும் என்றது பெருந்தன்மையுடன்.

ஒரு  நாள் பக்கத்து காட்டு  விலங்குகளுடன்  பகை உண்டானது. காட்டில் உள்ள எல்லா ஆண் விலங்குகளுடனும் பகைவர்களை விரட்டிக் கொண்டு காட்டுக்குள் சென்றது வீரா. மாலை களைப்பாக வீடு திரும்பிய உடன், நான் தனி ஆளாக நின்று எதிரிகளை விரட்டி ஓட வைத்தேன், மற்ற விலங்குகள் எல்லாம்  சும்மாவே நின்று வேடிக்கை பார்த்துட்டு இருந்ததுங்க. தொடை நடுங்கி விலங்குகள். இந்நேரம் காடு முழுவதும் என் புகழ் பரவி இருக்கும். என்னுடைய  ஆவேசத்தைப்  பார்த்து காடே நடுங்கி விட்டது. நான் வீரர்களில்  துணிச்சலான மாவீரன், இதைப் பற்றி என்ன நினைக்குற ராணி  என்றது?  என்னங்க என்னை  போய் கேட்கிறீர்கள் காடே உங்க புகழ்  பரவி இருக்குது என்று சொல்கிறீர்கள் , நான் சொல்ல என்ன இருக்கிறது என்றது ராணி பெருமையாக. தன் கணவன் வீரா செய்த வீர சாகசங்களை நினைத்து பெருமிதம் கொண்டது ராணி.

ஒரு  நாள் பக்கத்து காட்டில் உள்ள ஓடையில் சுவைமிக்க புதிய வகை மீன் குஞ்சுகள் இருக்கின்றனவாம் என்று கேள்விப்பட்டது சாமா  என்ற  பெண் கழுதைப்புலி. இதைக் கேட்டதும்  தங்கள் குட்டிகளை அங்கு கூட்டி செல்ல விருப்பப்பட்டது அனைத்து  பெண்  கழுதைப்புலிகளும். ஆண் கழுதைப்புலி்கள் எல்லாம் புதிய உறைவிடம் தேடி சென்றிருந்தமையால் அவைகளை தொந்தரவு செய்ய விரும்பாத சாமா கழுதைப்புலி ஒரு முடிவு செய்தது. அதன்படி யாராவது ஒரே ஒரு வீர ஆண் புலி மட்டும் நம்முடன் வரட்டும் காவலுக்கு அழைத்து செல்வோம் என்று ஆலோசனை  கூறியது சாமா. உடனே ராணி முன்வந்து அப்படி என்றால் ஆண்கூட்டத்திலேயே மிகப்பெரிய வீரன் என் கணவன் வீராதான், அவனையே காவலுக்கு அழைத்து செல்வோம் என்று கூறியது. மற்ற பெண் கழுதைப்புலிகள் இதை ஒத்துக்கொள்ளவே ராணி வீரா விடம் சென்று இதைக் கூறியது. ஆமாம் தேவைப்படும்போது மட்டும் இந்த வீராவின் வீரம் உங்களுக்கு ஞாபகம் வந்துவிட்டது மற்ற நாட்களில் என்னையும் என் வீரத்தையும் இந்த காடு மறந்து விடுகிறது என்று அலுத்துக்கொண்டே கிளம்பியது.   வீராவின் துணையுடன் பக்கத்து காட்டுக்கு கிளம்பின பெண்  கழுதைப் புலிகள் கூட்டம்.

பெண்  கழுதைப் புலி கூட்டம் நடுவே வீரா மட்டும்  தனியே  வருவதைக் கண்ட பக்கத்து காட்டு சிங்கக் கூட்டம்,  கழுதைப்புலி கூட்டத்தை சுற்றிவளைத்தது. பகைவர்கள் சுற்றிவளைத்ததைக் கண்ட வீரா, பெண்கள் கூட்டத்தை நோக்கி விரைவாக மரங்களுக்குப்பின் சென்று மறைந்துகொள்ளுமாறு கட்டளையிட்டது. தானும் ஒரு மரத்திற்கு பின் சென்று மறைந்துகொள்ள முயன்றது. இதைக்கண்ட சிங்கக் கூட்டம் நகைத்தது, பெண் கழுதைப்புலிகளுக்கும் சிரிப்பையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. சிங்க ராசா கழுதைப்புலி கூட்டத்தில் இருந்து ஒரு பெண் கழுதைப்புலியை நோக்கி உன் பெயர் என்ன என்று வினவியது. அது வீராவின் மனைவி கழுதைப்புலி, எனவே தன் பெயரைக் கூறியது.  அப்படியா எங்கள்  கூட்டத்திலும் பெண்களுக்கு ராணி என்று பெயர் வைப்பது உண்டு. எனவே எங்கள் இனப் பெண்களின் பெயரை வைத்து உள்ள  உன்னைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை, தப்பித்துப் போய்விடு என்று கூறியது. இதைக் கேட்ட மற்ற பெண் கழுதைப்புலிகளும் தங்கள் பெயர் ராணி என்று கூறி தப்பித்துக் கொண்டன.

ராசா சிங்கத்திற்கு ஒரே வியப்பு, எங்கள் காட்டில் ஒவ்வொரு பெண் விலங்குகளுக்கும் வேறு வேறு பெயர் வைப்பது வழக்கம், ஆனால் உங்கள் காட்டில்  உள்ள அனைத்து பெண் விலங்குகளுக்கும் ராணி என்ற ஒரே பெயரையே வைத்துள்ளனர்  என்றது வியப்பாக. கடைசியாக வீராவை நோக்கி உன் பெயர் என்ன என்றது சிங்க ராசா. என் பெயரும் ராணிதான் என்றது வீரா. இதைக் கேட்ட சிங்க ராசாவிற்கு கோபம் வந்துவிட்டது. பெண்கள் அனைவருக்கும்தான் ராணி என்று பெயர் வைத்துள்ளனர்  ஆண்களுக்குமா என்றது கோபமாக. உடனே வீரா நான் ஆண் கழுதைப்புலி இல்லை நான் பார்க்கத்தான் ஆண் போல் தோற்றம் அளிக்கிறேன். ஆனால் உண்மையில் பெண் என்றது. இதைக் கேட்ட அதன் மனைவி ஓடி வந்து, இல்லை சிங்க ராசா உண்மையில் இவர் தான் என் கணவர். காடெல்லாம் புகழ் பரவிய வீரர்களில்  துணிச்சலான மாவீரன் வீரா  என்றது. உடனே சிங்க ராசாவிற்க்கு சிரிப்பு வந்து விட்டது. உயிர் பயத்தில்  உளறிய வீராவை நோக்கி உன்னைக் கொன்றால் எனக்கு இழுக்கு, ஓடிப் போ என்று விரட்டி விட்டது.

அன்று முதல் காடு வந்த வீரா தன்னை வீரன், மாவீரன் என்று சொல்வதில்லை. குகையில் இருந்து வெளிப்பட்டாலே மற்ற பெண் புலிகள் நகைத்தன. வெளியே தலை காட்ட முடியவில்லை. தன் மனைவி ராணியிடம் இனி தான்  வீரர்களில்  துணிச்சலான மாவீரன் வீரா இல்லை, வேட்டை மிருகங்களில் துணிச்சலான  வேட்டைக்காரன் இல்லை, சாதாரண ஒரு கழுதைப்புலி தான்  என்று சொல்லி அனுப்பியது. அதில் இருந்து காட்டில் யாரும் வீராவைப் பார்த்து கேலியாக நகைப்பதில்லை.  என்ன குட்டிகளா, வீராவைப் போன்று பொய்யாக தற்பெருமை செய்யக்கூடதல்லவா? உங்களுடை நற்செயல்களைப் பொறுத்து தன்னாலே புகழ் வரும். ஆகவே உங்கள் செயலில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் செய்தவைகளை பற்றி நீங்களே யாரிடமும் தற்பெருமையாக கூறாதீர்கள். அவர்களாகவே உங்கள் செயல்களைப் பற்றி பேசுவார்கள்.

With http://www.spying.ninja such a variety of uses, it can be difficult to keep tabs on a child’s privacy settings and activity

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “வேட்டைக்காரன் கதை”
  1. Ramesh Babu says:

    எகாட்டுவிலங்குகள் நாட்டுக்குள் உலாவினால் எப்படி இருக்கும். கற்பனை செய்யுங்கள்

  2. mohanraj says:

    your websites all msg is very usefull

  3. K`J`MARI says:

    I LIKE THIS STORY

அதிகம் படித்தது