மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

2013 ஆம் ஆண்டு உலக அளவில் தொடங்கப்பட்ட மிகச்சிறந்த தொழில் நிறுவனங்கள் ஓர் அலசல்

ஆச்சாரி

Mar 15, 2014

1)      ஸ்நாப்சாட் ( http://www.snapchat.com/ )

நண்பர்கள் தங்களுடைய புகைப்படம் மற்றும் காணொளிகளை பிற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளம் இதுவாகும். பகிரப்பட்ட புகைப்படம் மற்றும் காணொளிகள் பார்த்த பத்து வினாடிகளுக்குள் தானாகவே மறைந்துவிடும் என்பதே இதன் சிறப்பம்சமாகும். ஒரு நாளைக்கு சுமார் முப்பத்தைந்து கோடி பகிர்வுகள் பகிரப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலராகும்.

2)      உபர் (https://www.uber.com/)

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க பயணிகள் இந்த தொழில் நிறுவனத்தின் மென்பொருளை உபயோகிக்கலாம். தமக்கு தேவையான ஊர்தி ஓட்டுனர்களை ஒரு இடத்திற்கு மிக எளிதாக வரவழைக்க முடியும். இந்த நிறுவனத்தின் மதிப்பு 340 கோடி அமெரிக்க டாலராகும்.

3)      ஆப்டிமைசிலி (https://www.optimizely.com/ )

தொழில் நிறுவனங்கள் தங்களுடைய பல்வேறு இணைய தளத்தை பரிசோதித்து பார்க்க உதவும் தளம் இந்த நிறுவனத்தின் சிறப்பம்சமாகும் . ஸ்டார் பக்ஸ், ஈபே, டிஸ்னி போன்ற நிறுவனங்கள் இந்த தளத்தை உபயோகித்து தங்கள் நிறுவனத்தின் பலதரப்பட்ட இணைய தளத்தை பரிசோதித்து கொள்கின்றன.

4)      ஜென்டெஸ்க் (http://www.zendesk.com/ )

தொழில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்க உதவும் மென்பொருள் இதுவாகும். சுமார் 140 நாடுகளிலுள்ள தொழில் நிறுவனங்கள் 10 கோடி வாடிக்கையாளர்களை இந்த மென் பொருள் இணைக்கிறது.

5)      காயின் (https://onlycoin.com/ )

பல கடன் அட்டைகளை ஒரே கடன் அட்டைக்குள் கொண்டு வந்த வெற்றி இந்த தொழில் நிறுவனத்தைச் சாரும்.  கூகுல் போன்ற நிறுவனங்கள் இந்நிறுவனத்தில் அதிக அக்கறை காட்டுகின்றது.

6)      லிப்ட் (http://www.lyft.me/ )

விமான நிலையத்திற்கு செல்ல உங்கள் நண்பர்களை அழைக்காமல் வாடகைக்காக காத்திருக்கும் ஊர்தி ஓட்டுனர்களை உங்களுக்கு அளித்து உங்கள் பயணத்தை எளிதாக்கக்கூடிய மென்பொருள் இதுவாகும். இதன் வளர்ச்சி வார வாரம் ஆறு சதவீதமாக அதிகரித்து வருகிறது.

7)      டிராப்பாக்ஸ் (https://www.dropbox.com/ )

உங்களுக்கு தேவையான புகைப்படம் , காணொளிகள் மற்றும் மென் பொருள் பதிவுகள் ஆகியவற்றை எங்கேயும் எப்பொழுதும் காண உருவாக்கப்பட்ட மென் பொருள் நிறுவனம் இதுவாகும். சுமார் 20 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

8)      டீன்டர் (http://www.gotinder.com/ )

உங்கள வாழ்க்கை துணையை தேடி கொண்டு வந்து உங்கள் கண்முன் நிறுத்தும் மென்பொருள் நிறுவனம் இதுவாகும் . இது வரை ஐந்து கோடி மக்களை தன் வாடிக்கையாளர்கலாக கொண்டுள்ளது.

9)      ஹோட்டல் டுநைட் ( http://www.hoteltonight.com/ )

கைபேசிமூலம் நமக்கு தேவையான தங்குமிடங்களை அதே இரவுக்குள் பதிவு செய்ய துணைபுரியும் மென்பொருளை இன்னிறுவனம் தயாரித்துள்ளது.

10)   விஸ்பர் ( http://whisper.sh/ )

முகபுத்தகம் மற்றும் ஏனைய சமூக வலைதளங்களின் கோட்பாடுகளுக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட மென் பொருள் நிறுவனம், உங்களுடைய புகைப்படம், காணொளி ஆகியவற்றை மற்றவர்களுடன் பகிராலாம் . இதன் சிறப்புயாதெனில் இந்த நபர் இந்த குறிப்பிட்டப் புகைபடத்தை வெளியிட்டார் என்பது மற்றவருக்கு தெரியாது.   2500 கோடி பக்கங்கள் இந்த இணையதளத்தில் பரிமாறப்படுகிறது.

11)   குயிஸ்அப் (https://www.quizup.com )

 

உங்கள் நண்பர்களில் யார் பொது அறிவில் சிறந்தவர்கள் என்பதை அறிய இந்த நிறுவனம் இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளது. இம்மென்பொருள் வாயிலாக யார் எங்கு வேண்டுமானாலும் யாருடனும் பொது அறிவில் போட்டியிடிலாம். இது பல லட்சம் பொது அறிவு வினாக்களை உள்ளடக்கியுள்ளது.

12)   ஹம்டன் கிரீக் (http://hamptoncreekfoods.com/ )

இந்த நிறுவனம் மற்ற நிறுவங்களை விட வித்தியாசமானது. முட்டையை உபோயாக படுத்தாமல் முட்டை போன்ற திரவத்தை உருவாக்கி உள்ளார்கள். 1500 க்கும் மேற்பட்ட தாவர வகைகளை ஆராய்ந்து அதில் 13 வகையான தாவரங்களை உபயோகித்து இதை உருவாக்கியுள்ளனர் . கொழுப்பு சத்து இல்லாத இந்த முட்டையை கூடிய விரைவில் உண்டு மகிழலாம்.

But if a student is making mistakes in every other word there is likely to be serious confusion about meaning, so that the teacher is unable to mark https://pro-essay-writer.com the work fairly

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “2013 ஆம் ஆண்டு உலக அளவில் தொடங்கப்பட்ட மிகச்சிறந்த தொழில் நிறுவனங்கள் ஓர் அலசல்”

அதிகம் படித்தது