மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

7 ம் அறிவு திரை விமர்சனம்

ஆச்சாரி

Dec 1, 2011

இப்படம் வருவதற்கு முன்பு , போதி தர்மர் என்பவர் யார் என்று உலகத் தமிழரிடம் கேட்டால், தெரியாது என்பதே கிட்டத்தட்ட அனைவரின் பதிலாக இருக்கும்.  திரை நட்சத்திரங்களையும், மட்டைப்பந்து வீரர்களையும், போலி சாமியார்களையும் அறிந்த தமிழ் உலகம் ,   போதி தர்மரை அறியாமல் விட்டிருப்பது நம்மை எல்லாம்  வெட்கப் படவைத்திருக்கிறது.

போதி தர்மர் என்பவர் யார் ?
கி. பி. 5 ம நூற்றாண்டில், புத்த துறவியாக வாழ்ந்த ஒரு ஞானி.  அவர் ஒரு கை தேர்ந்த மருத்துவர் மட்டுமில்லமால் ,  தற்காப்பு கலையான கலரி மற்றும் நோக்கு வர்மத்திலும்(பார்வையால் மற்றவர்களை வசப்படுத்துதல்) வல்லவர்.
அந்த நூற்றாண்டில் சீனாவில் பரவிய கொடிய தொற்று நோய்களை தீர்த்து மக்களின் அன்பையும், நன் மதிப்பையும் பெற்றார். அங்கே,  தான் கற்ற கலைகளை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அவருக்கு சீனர்கள் கோயில் கட்டி கடவுளாக இன்றளவும் வழிபட்டு வருகின்றனர். (http://www.youtube.com/watch?v=H2li5qd3k_Q) .

இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், ஒரு தமிழர்  என்பது நம்மை மெய் சிலிர்க்க  வைக்கிறது . இவர் பல்லவ அரசின் மூன்றாம் இளவரசர். தன் குருவின் ஆணையை ஏற்று  காஞ்சிபுரத்திலிருந்து சீனாவிற்கு சென்றார்.

இப்போது படத்தின் கருவிற்கு செல்வோம்.

போதிதர்மரின் வரலாற்றை சொல்வதோடு படம் ஆரம்பிக்கிறது . அவர் கற்று கொடுத்த கலையை , சீனர்  நமக்கே ஆபத்தாக திருப்பினால் என்னவாகும்? என்பதைத் தான் இப்படம் சொல்ல வருகிறது .  சீனாவிலிருந்து நம் ஊருக்கு, அக்கலை நன்கு கற்ற ஒருவனை அனுப்பி வைக்கின்றனர். அவனுடைய இலக்கு , கொடிய விசக்கிருமியை இந்தியாவிற்குள் பரப்ப வேண்டும் என்பதே.  அவன் தன் நோக்கத்தை செவ்வனே செய்கிறான். தன்னை தடுக்க நினைப்போரை நோக்கு வர்மத்தால் கவர்ந்து, தன் பக்கம் திருப்பி தன் பணியை இலகுவாக செய்கிறான்.  அவன் தன் நோக்கத்தை நிறைவேற்றினானா ? இல்லையா என படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று போதி தர்மரை தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். அதற்கு காரணம் , ஏ . ஆர் . முருகதாசின்   “7  ம் அறிவு” திரைப்படம் . அதற்காக அவருக்கு நமது மனமார்ந்த நன்றியை  தெரியப் படுத்த கடமைப்பட்டுள்ளோம்.

Franklin is explaining that when he educated himself as a youth he learned to drop his habit of abrupt contradiction, and positive argumentation and to become more diffident www.paper-writer.org in putting forward his opinions

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

5 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “7 ம் அறிவு திரை விமர்சனம்”
  1. babu says:

    enpa meganatha vantharai vazhavaitha tamilukku vandhavargal sondhamillaya?

  2. குமணன் says:

    வணக்கம், 7ம் அறிவுக்காக ஒரு பக்கம் ஒதுக்கியதற்கு நன்றி. அப்ப தான் இதில் இருக்கும் சில அபத்தங்களை நம்மால் பகிர்ந்துக்கொள்ள முடியும். போதி தருமர் தமிழரா? அல்லது வேற்றொருவரா? என்ற ஆராய்ச்சிக்கு நான் போகவில்லை. அய்ந்தாம் நூற்றாண்டு வீரனை பற்றி பெருமை பேசும் இப்படம், நிகழ்கால வீரர்களை, நாங்கள் பார்த்து, படித்து,பயனடைந்து, பெருமைப்பட்டு, அவர்களுடன் இணைந்து களப்பணி செய்ய வழிவகுத்த எங்கள் மக்களை அடிமை தலையிலிருந்து விடுவிக்க போராடிய எங்கள் தலைவர்களை அசிங்கப்படுத்தியுள்ளது, கொச்சைப்படுத்தியுள்ளது. ஆம் பெரியார் போராடி எங்களுக்கு வாங்கிக்கொடுத்த இடஒதுக்கீட்டை படத்தின் கதைஆசிரியர், படத்தின் கதாநாயகியின் மூலம் கொச்சைப்படுத்தியிருக்கிறார். படத்தின் ஒருக் காட்சியில் இடஒதுக்கீடு இருப்பதனால் தான் மாணவர்கள் (மக்கள்) முன்னேறமுடியாமல் இருப்பதாக கதாநாயகி பேசுகிறார். இதை நாம் வன்மையாகக் கண்டித்தாக வேண்டும். இடஒதுக்கீடு இருப்பதனால் தான் இன்று எங்கள் மக்கள் ஓரளவேனும் கல்வியறிவுப் பெற்று, அரசு பணிகளிலும், ஓரளவு தனியார் துறையிலும் வேலைக்கு செல்ல முடிகிறது. ஆனால் இன்று எல்லா அரசு நிறுவனங்களும் வேகவேகமாக தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டு வருகின்ற நேரத்தில், இனி எங்கள் மக்களின் எதிர்க்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் தான் தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக்கோரி போராடுகிறோம். இதில் பெரியக்கொடுமை இடஒதுக்கீட்டின் மூலம் பயனடைந்த பலரும் அதற்கு எதிராக பேசுவதோடு மட்டுமல்லாமல் இதுபோன்ற காட்சிகளை கைத்தட்டி வரவேற்கவும் செய்கின்றனர். இது வேதனையிலும் வேதனை. உண்மைகளை போட்டுடைக்க நாம் என்றும் தயங்கக்கூடாது. நல்லவற்றை வரவேற்கும் நேரத்தில் தீயவற்றை சுட்டிக்காட்டவும் செய்ய வேண்டும்.மறர்படி 7ஆம் அறிவினால் நமக்கு ஒன்றும் பயனில்லை.

    • Prabakaran says:

      திறமை உள்ளவர்களூக்கு எதற்கு இடஒதுக்கீடு. திறமை அடிபடையில் தேர்வு செய்தால் அனைவரும் பயன் அடைவர்.

  3. meganathan says:

    podhidharma oru parppanan avan thamizhan illai. pallava mannargal anaivarm parppanargaldhan

  4. Muthukumar says:

    மிகவும் சுருக்கமாக இருப்பதாகப் படுகிறது. இப்படிப்பட்ட படங்கலை இன்னும் விரிவாக அலசுவதில் சிறகு தயக்கம் காட்டக்கூடாது. மற்றபடி, விமர்சனம் நன்றாகவே உள்ளது.

அதிகம் படித்தது