மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆற்று மணலுக்கு மாற்று மணல்

ஆச்சாரி

Oct 15, 2013

இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் மணல் இயற்கை மணல் ஆகும். இது எவ்வாறு உருவாகின்றது என்றால் ஒரு இடத்தில் மழை, தட்பவெப்பநிலை, வெப்பம்,  காற்றும்,  நீர் மற்றும் பல இயற்கை காரணிகளின் மூலம் உருவாகின்றது. அவ்வாறு உருவாகும் மணல் எல்லா இடத்திலும் ஒரே அளவிலும் தரத்திலும் இல்லை. இடத்திற்கு இடம் அதன் தன்மைகள் மாறுபடுகின்றன.

இவ்வாறு உருவான மணலை நாம் எடுக்க எடுக்கக் குறையாமல் இருக்கும் இயற்கை மறுபடியும் இந்த மணலை உற்பத்தி செய்யும் என்று எண்ணுகிறோம். அது தவறு. மணலை எடுப்பதன் மூலம் மணலை உருவாக்கும் இயற்கைக் காரணிகளை சூழ்நிலைகளை நாம் அழித்து விடுகின்றோம். பிறகு எப்படி மணல் உருவாகும்? அதனால் நாம் இந்த மணலைப் பாதுகாக்க மாற்று வழிகளை கண்டுபிடித்துச் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் நமக்கு பிறகு வரும் சந்ததியினருக்கும், தலைமுறையும் இந்த இயற்கைச் செல்வத்தை விட்டு வைப்போம்.

நிலத்தில் ஒரு செ.மீ மணல் உருவாவதற்கு 100 ஆண்டுகள் தேவைப்படுகின்றது. அப்படியானால் நாம் இதனை எவ்வாறு போற்றிப் பாதுகாக்கவேண்டும். மணலைப் பாதுகாப்பது உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் கடமையாகின்றது. இவ்வாறு உள்ள மணலைப் பாதுகாக்க நாம் புதியதாக உள்ள  (Manufactured sand, Artificial sand) என்று அழைக்கப்படும் செயற்கை மணலை மாற்று மணலாக கட்டிடத் தொழில்களில் நாம் பயன்படுத்தலாம்.

இன்றைய சூழ்நிலையில் தரமான தூய்மையான மணல் குறைவாகவே உள்ளது. மேலும் அதனை எடுப்பதும் கடினமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து நாம் அதிகமாகப் பயன்படுத்துவதனாலும் இதனைக் காப்பாற்றும் கட்டாயத்தில் இன்று நாம் உள்ளோம்.

செயற்கை மணல் முறையான தொழிற்சாலைகளில் அதன் சரியான இயந்திரங்களை பயன்படுத்தி முறையாகத் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படுகின்ற செயற்கை மணலை, நல்ல மாற்று மணலாக இயற்கை மணலுக்குப் பதிலாக கட்டிடங்கள் கட்டுவதற்கும் மற்ற கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்துவதின் மூலம் இயற்கை மணலை நாம் பாதுகாக்கலாம். இந்தச் செயற்கை மணல் துகள்கள் 150 மைக்ரோன் முதல் 4.75 mm வரை சரியான விகிதத்தில் உள்ளது.

இந்த செயற்கை மணல் சிமெண்ட்டின் பயன்பாடுகளை குறைக்கின்றது மற்றும் அதிக பணச் செலவுகளையும் குறைக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் கட்டிடம் கட்டுதல், கட்டுமான பணிகள் மற்றும் கான்கிரீட் தயாரித்தல் என்பது அதிவேகத்தில் வளர்ந்துள்ளது மற்றும் வளர்கின்றது. இதன் தேவையை இயற்கை மணல் ஈடுசெய்வது என்பது கடினமான ஒன்று. இயற்கை மணல் உருவாவதற்குப் பல கோடி ஆண்டுகள் தேவைப்படுகின்றது. இவ்வாறு உள்ள இயற்கை மணலை நாம் இழந்தால் அதனை ஈடுசெய்வது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில் இயற்கை மணல் குறைந்த அளவில் மட்டுமே ஆற்றுப்படுகைகளில் மற்றும் சில இடங்களில் காணப்படுகின்றது. ஆதனால் நாளுக்கு நாள் அதன் விலையும் விண்ணை தொடும் அளவிற்கு உயர்கின்றது. இந்த இயற்கை மணல் நாம் வாழ்நாளில் நாம் பயன்படுத்தியதை மாதிரியே வரும் தலைமுறையினருக்கும் பயன்படும் என்பது கேள்விக்குறியே?

இயற்கை மணல் துகள்கள் என்பது நாட்டின் பல பகுதிகளில் முறையைத் தரப்படுத்தவில்லை. [not graded properly] இந்த மணலில் வண்டல் மற்றும் கரிம அசுத்தங்கள்[sift and organic impurities]  பல உயிரினங்களின் எலும்புகளின் மூலம் இந்த இயற்கை மணல் உருவாகின்றது. இதனால் இதனைக் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தும் போது அதில் பயன்படும் கம்பிகள் [steel] மாசுகளை உருவாக்குகின்றன. செயற்கை மணலில் இது போன்று எந்த கரிம அசுத்தங்களும் வண்டல்களும் இல்லை.

நமது நாட்டில் இந்த செயற்கை மணலைப் பயன்படுத்துவதற்கு மக்களிடம் பல தவறான எண்ணங்கள் மற்றும் செயற்கை மணலை பற்றிய முறையான தகவல்களை அறியாததனாலும் அவற்றைப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டிடத்தைப் பற்றித் தெளிவான விவரங்கள் இல்லாததனால் அவர்கள் இதனை பயன்படுத்துவது மிக குறைவாக உள்ளது.

இந்த செயற்கை மணல், இயற்கை மணலைவிட தரத்தில் சிறந்தது. இதனை இந்தியாவின் சில பகுதிகளில் வெளிநாட்டினிலும் பயன்படுத்துகின்றனர்கள் உதாரணத்திற்கு இந்தியாவின் புனேயில் மும்பை விரைவு [Mumbai expressway]முற்றிலும் செயற்கை மணலை [manufactured sand]  பயன்படுத்திக் கட்டப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில் சிவில் பொறியாளர்கள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டிம் கட்டிட ஒப்பந்தக்காரர்களான இவர்கள், இன்று கிடைக்கக் கூடிய ஆற்றில் கிடைக்கும் குறைபாடுள்ள மணல்களில் உள்ள வண்டல் அடங்கிய அதிகமான அசுத்தங்கள் அடங்கிய மணலை வடிகட்டிப் பயன்படுத்தாமல் நேரடியாக கட்டிடத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டதும் பயன்படுத்துகின்றனர்கள்.

இந்த இயற்கை மணலில் நிலக்கரி, எலும்புகள், ஓடுகள்;[shells], மைக்கா மற்றும் சில தாதுக்கள் போன்ற பிற அசுத்தங்கள் உள்ள மணலில் தயாரிக்கப்படும் சிமெண்ட், கான்கிரீட் நாட்கள் செல்ல செல்ல வெப்பநிலை விளைவு காரணமாக [weathering effect] இந்தப் பொருட்களில்சிதைவு ஏற்ப்பட்டு கான்கிரீட்டின் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கின்றனர்.

இன்று அனைவரும் வீடு கட்டுவதற்கு வாஸ்து (மனை சாஸ்திரம்)  பார்ப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. உண்மையான வாஸ்து என்பதை யாரும் தெரிந்திருக்கவில்லை அதில் கூறியுள்ளதாவது, வீடு கட்டப் பயன்படுத்தப்படும் பொருள்களில் எலும்புகள் மற்றும் கரிம அசுத்தங்கள் இருக்கக்கூடாது தூய்மையான பொருள்கள் இருக்கவேண்டும் என்று உள்ளது. அதனை பார்த்தால் இன்றைய காலகட்டத்தில் யாரும் இயற்கை மணலில் வீடு கட்டமாட்டார்கள்.

இயற்கை மணல் எடுக்கும் இடத்திற்கு வந்து செல்லும் கனரக வாகனங்களின் மூலம் போக்குவரத்துச் சாலைகளின் வழித்தடங்கள் பாதிப்புக்குள்ளாகின்றது மற்றும் அதிகமான விபத்துக்களும் நடைபெறுகின்றது. இயற்கை மணல் அதிகமாக ஆற்றுப்படுக்கைகளில் இருந்து எடுக்கும் பொழுது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது. நிலத்தடிநீர் குறைகின்றது. அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பல பகுதிகளில் நிலத்தின் நீர் குறைவின் காரணமாக விவசாயங்கள் பாதிக்கப்படுகின்றது. பிற உயிரினங்களும் பாதிக்கப்பட்டு அழியும் அபாயம் உருவாகின்றது இதனால் வறட்சி அதிகமாகின்றது. மழைப் பொழிவின்  பொழுது நிலத்தடி நீர் தேங்குதல் குறைகின்றது வெப்பநிலை உயர்கின்றது.

செயற்கை மணல் துகள்கள் அதிக வலிமையான கான்கிரீட்டை உருவாக்குகின்றன. இதன் துகள்கள் அனைத்தும் சரியான அளவுகளில் அனைத்துத் துகள்களும் ஒரே சீராக உள்ளது. இதுபோன்று இயற்கை மணலில் இருக்காது அவற்றின் துகள்கள் ஒரே சீராக இருப்பதில்லை. எனவே கான்கிரீட் போடப் பயன்படும் பொழுது கண்களுக்கு புலப்படாத சிறு சிறு இடைவெளி உருவாகும். அந்தத் துகள்களும் ஒன்று சேர்வதில்லை இதனால் கான்கிரீட் தரம் குறைகின்றது.

இயற்கை மணலில் வண்டல் அசுத்தங்கள் 2% அதிகமாக உள்ளது. இது போன்று செயற்கை மணலில் அசுத்தங்கள் இல்லை. செயற்கை மணல் அனுமதிக்கப்பட்ட அளவு 75 மைக்கரான்கள் கீழே எல்லை 15%  மேல் இருக்கக் கூடாது.

இயற்கையாகக் கிடைத்த வடிகட்டப்பட்ட மணல் Filter sand இது கட்டிடம் கட்டுதலுக்குத் தரம் குறைவானது என்று ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றும் இதனைப் பயன்படுத்துவதை கர்நாடக மாநில அரசு தடைவிதித்துள்ளது. இந்த Filter sand மூலம் உருவாகும் கட்டிடத்தில் விரிசல்கள் [cracks] உருவாகின்றது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றும் இந்த Filter sand டானது ஏரிகள், குளம், குட்டைகளில் அதிகம் எடுக்கப்படுகிறது.  இதில் அதிகமான வண்டல், சேற்றுக் கனிமங்கள் [chemicals] உள்ளது.

எனவே இதைப் பயன்படுத்திக் கட்டிடம் கட்டுவதில் கம்பிகள் கரைத்து சிதைக்கவல்ல காரணிகள் அதிகமாக உள்ளது என்று ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வண்டல் மற்றும் சேறு போன்றவை கான்கிரீட்டுக்கு எதிரிகள். அதன் பலத்தைக் குறைக்கும். PROMAN என்ற தொழிற்சாலையானது இந்த செயற்கை மணல் தயாரித்து பெங்களூர் பன்னாட்டு விமான விரிவாக்க பணி மற்றும் மெட்ரோ Rail போன்றவற்றிற்கு வழங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளது. மற்றும் கர்நாடக மாநில அரசு (all PWD Work)  அனைத்து பொதுப்பணித்துறையின் கட்டிட வேலைகள் அனைத்திற்கும் இந்தச் செயற்கை மணலைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. இது போன்று மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தப்படவேண்டும். இதனை மத்திய அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்தச் செயற்கை மணல் தரத்தைத் தேசிய அளவிலான சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களின் தரக் கண்காணிப்புக் கூட்டமைப்பு (national council for cement and building meterials ) என்ற அமைப்பு சோதித்து அதற்குத்  தரத்தின் அடிப்படையில் சான்றிதழ்களை வழங்குகின்றது. மற்றும் இந்த அமைப்பு அதன் தரத்தினைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. சரியான தரத்தில் தொழிற்சாலைகளில் முறையான தொழில் நுட்பத்தில் தயாரிக்கின்றனவா? என்றும் கண்காணிக்கின்றது. மற்றும் அதைத்தொடர்ந்து பின்வரும் சோதனைகளையும் செய்கின்றது. Sieve analysis | optical microscopic study to check the particle shape | effectiveness | cube test for compressive strength and mix designs.

இயற்கை மணலில் கடலினங்களின் பங்கு 2-4 % (marine products) பெரிய துகள்கள் 6-10%(oversized material)களிமண், 5-20%(clay and silt), ஈரப்பதம் 4-5% (moisture) மற்றும் 17% தேவையில்லாத பொருள்கள் கலந்துள்ளது இந்த இயற்கை மணலில்.

ஒரு 12 மாடிகட்டிடம் கட்டும்பொழுது குறைந்தபட்சமாக 1100 metric tones இயற்கை மணல், 6000 கிலோ லிட்டர் நீர் போன்றவை பயன்படுகின்றது. இந்த செயற்கை மணலைப் பயன்படுத்தும் பொழுது மேற்சொன்ன செலவுகள் வெகுவாகக்  குறைகின்றது. மற்றும் நேரம், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைகின்றது.

இயற்கை மணல் அளவில் குறைவாகவே உள்ளது. இதனைப் பயன்படுத்துவதினால் ஏற்படும் இயற்கை சுற்றுச்சூழல் மாசுகளைக் கட்டுப்படுத்தவும் இயற்கை மணல் விலை உயர்வு போன்று உள்ளதனால் கட்டிடத் தொழில்கள் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் இந்த செயற்கை மணலை அதிக அளவு பயன்படுத்த வேண்டும்.

இயற்கை மணலுக்குப் பதிலாக செயற்கை மணலை அதிகமாக பயன்படுத்துவதற்கு உள்ளூர் அதிகாரிகள் [local authorities ], PWD, அரசாங்க கட்டிடங்கள் போன்றவற்றிற்கு இந்தச் செயற்கை மணலை பயன்படுத்த வேண்டும். மத்திய மாநில அரசாங்கங்கள் இணைந்து உடனடியாக புதிய மணல் கொள்கை என்று ஒன்றை உருவாக்க வேண்டும். அதனை எல்லா கிராமங்கள், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பல தொழிற்சாலைகள் அமைப்பதையும் இந்தச் செயற்கை மணல் உற்பத்தியையும் அரசாங்கம் ஊக்குவிக்கவேண்டும். அதற்கு மானியங்களும் அளிக்க வேண்டும். மற்றும் சில தொழிற்சாலைகளை பல கிராமம் மற்றும்  மாவட்டங்களில் அரசாங்கமே அமைத்துச் செயல்படுத்தி செயற்கை மணல் உற்பத்தியைப் பெருக்கவேண்டும். மேலும்  மத்திய அரசு செயற்கை மணல் சம்மந்தமான பல ஆராய்ச்சி  நிறுவனங்களை அமைத்து செயல்படுத்த வேண்டும்.

இயற்கை மணல் ஆனது மீன் மற்றும் நீர் உயிரினங்கள் மற்றும் சில சிறு நில உயிர் வாழினங்களுக்கும், ஊர்வன போன்றவற்றிற்கும் ஆதாரமாக உள்ளது. இவ்வாறு உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள இயற்கை மணலை நாம் காப்பாற்ற வேண்டும்.

இயற்கையை அழிக்கும் தொழில்நுட்பத்தைப் பெரும் அளவில் நாம் இன்று பயன்படுத்துகின்றோம். ஆனால் இயற்கையைக் காக்கும் இந்தத் தொழில்நுட்பம் சிறிய அளவில் உள்ளது. இதனைப் பெரிதுபடுத்தி இயற்கையை காப்பாற்றிட வழிவகுக்க வேண்டும் நாம்.

மேலும் அறிய இங்கே சொடுக்கவும்:

You can’t know where they really are, with whom they are speaking, trackingapps.org/ and what they are saying in text messages

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “ஆற்று மணலுக்கு மாற்று மணல்”
  1. suresh says:

    useful

  2. abdul azeez says:

    Nan varaverkiren.

அதிகம் படித்தது