மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செட்டிநாட்டு சமையல் – மணத்தக்காளிக் கீரை தேங்காய்ப்பால் கழனி

ஆச்சாரி

Jan 25, 2014

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி கீரை – 1 கட்டு

தேங்காய் துருவியது – 1 கோப்பை

கடுகு – சிறிது

உளுந்தம்பருப்பு – சிறிது

வரமிளகாய் – 2

சின்ன வெங்காயம் -சிறிது

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

தேங்காயை பால் பிழிந்து கெட்டிப்பால், தண்ணிப்பால் என்று தனித்தனியாகப் பிரித்து வைத்துக்கொள்ளவும் (அதாவது துருவிய தேங்காயை சிறிது நீர் விட்டு அரைத்து அதை பிழிந்து எடுத்தது கெட்டிப்பால், அரைத்து பிழிந்த தேங்காயை மீண்டும் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பிழிந்து எடுப்பது தண்ணிப்பால்), வெங்காயத்தை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து அது வெடித்ததும், சின்னவெங்காயம் மற்றும் வரமிளகாயையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் கீரையையும் சேர்த்து நன்றாக வதக்கவும் வதக்கியபின் எடுத்துவைத்த தண்ணிப்பாலை ஊற்றி கீரையை வேகவிடவும். கீரை வெந்ததும் கெட்டிப்பாலை ஊற்றி உப்பு சேர்த்து இறக்கிவிடவும். சுவையான மணத்தக்காளி கீரை தேங்காய்ப்பால் கழனி தயார்.

For instance, bunreacht na hireann, the irish constitution, is available online and students can be asked to https://www.homework-writer.com/ read it as a paratext for colm tibns the heather blazing, which focuses on a supreme court judge and his rulings on it

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செட்டிநாட்டு சமையல் – மணத்தக்காளிக் கீரை தேங்காய்ப்பால் கழனி”

அதிகம் படித்தது