மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தன்னேரிலாத தமிழ்

ஆச்சாரி

Nov 30, 2011

”ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது

தன்னே ரிலாத தமிழ்”                   – தண்டியலங்காரவுரை மேற்கோள்

4000 ஆண்டுகளுக்கு முன் ஆதி இந்தியாவின் (பாக்கிசுதானும் சேர்த்து) பெரும்பாலானப் பகுதிகளில் தொல் திராவிட மொழி பேசப்பட்டு வந்ததற்குச் சான்றுகள் கிடைத்து வருகின்றன. பலுசிசுத்தான் பகுதியில் பிராகூயி என்கிற திராவிட மொழி பேசப்பட்டு வருவது இதற்குச் சான்று. கி.மு 1900-க்குப் பின்பு ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து (கசாக்சுதான்) சிறிது சிறிதாக அரப்பாவில் (http://en.wikipedia.org/wiki/Harappa) குடியேறத் துவங்கினர்.  ஆரியர் அரப்பாவிற்கு வந்த போது சிந்து வெளி நாகரீகம் (கி.மு. 2900 – 1900) பெரும்பாலும் அழிந்திருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் தொல் திராவிட மொழி பேசியிருக்க வாய்ப்புள்ளது என்று பின்லாந்தைச் சேர்ந்த இந்தியவியல் பேராசிரியர் அசுகோ பர்ப்போலா (http://en.wikipedia.org/wiki/Asko_Parpola) அவர்களும், தமிழகத்தைச் சேர்ந்த திரு ஐராவதம் மகாதேவன் (http://en.wikipedia.org/wiki/Iravatham_Mahadevan) அவர்களும் கூறுகின்றனர். ஆனால் அரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் பல மொழிகள் பேசப்பட்டுள்ளதாக கூறுகின்றார் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் சமசுகிருதப் பேராசிரியர் மைக்கல் விட்சல் (http://en.wikipedia.org/wiki/Michael_Witzel) அவர்கள். அவர் அப்பகுதியில் முண்டா மொழிகளும் பேசப்பட்டிருக்கக் கூடும் என்கிறார். எது எப்படியோ சிந்து வெளி மக்கள் ஆரியருக்கு முன்னரே வாழ்ந்துள்ளனர் என்று இதிலிருந்து தெரிகிறது. தொல் திராவிட மொழி அங்கு பேசப்பட்டிருக்கும் வாய்ப்புமுள்ளது என்பது வேதகாலத்தில் ஆரியர்கள் எழுதிய இருக்கு (Rig Veda : 1500 -1200 BCE) வேதத்திலிருக்கும் திராவிடச் சொற்கள் மூலம் தெரிகிறது. முண்டா மொழிச் சொற்களும் இருக்கு வேதத்திலிருப்பதிலிருந்து முண்டா மொழியும் அங்கு பேசப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

ஆரியர் வருகைக்குப் பின் வட மொழியின் நெருக்கடியினாலும் ஆரிய மன்னர்களின் பலத்தினாலும் வடக்குத் திராவிட மொழிகள் ஒன்றன்பின் ஒன்றாக அழியத் துவங்கின. தென்னிந்தியாவில் அக்காலத்தில் ஆரிய மொழியின் தாக்கம் அதிகமில்லாததால் திராவிடமொழி அங்கு தொடர்ந்து வழக்கத்திலிருந்தது. தொல் திராவிட மொழியிலிருந்து முதலில் தோன்றியது தமிழ் மொழி. அதன் பின் கன்னடமும் தெலுங்கும் தோன்றின. ஆனால் இவ்விரண்டு மொழிகளிலும் சமசுகிருதத்தின் தாக்கம் அதிகமாகவுள்ளது. 12-ம் நூற்றாண்டிற்குப் பின்பு தமிழிலிருந்து தோன்றிய மலையாள மொழியிலும் வட மொழியின் தாக்கம் அதிகமுள்ளது. ஆனால் தமிழர் மட்டும் வட மொழி ஆதிக்கத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து தமிழின் தனித்துவத்தைக் காத்து வருகின்றனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழின் இலக்கியத் தொடர்ச்சி வியக்கத் தகுந்தது. அதனால்தான் அன்று எழுதப்பட்ட சங்கத் தமிழ் இன்றும் நம்மால் படித்து புரிந்துக் கொள்ள முடிகிறது. இந்த இலக்கியத் தொடர்ச்சி எம்மொழிக்குமில்லை என்பது வெறும்புகழ்ச்சியில்லை, உண்மை. இதற்குக் காரணம் நம் முன்னோர்களின் உழைப்பும் தமிழுணர்வுமாகும். தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் போரிட்டாலும் தமிழ்ப்புலவர்கள் தமிழுணர்வோடு மன்னர்களினிடையில் அமைதிக்காகப் போராடியுள்ளனர் என்பதை புறநானூற்றுப் பாடல்களில் காணலாம்.  (எ.கா. புறம் 27). அதியனுக்கு ஆதரவாக ஔவை மூவேந்தர்களிடம் பேசியது சங்கப் பாடல்களில் காண்கிறோம்.

தமிழின் தொன்மையை அறிய மற்றுமொரு சான்று கி.மு. 2-ம் நூற்றாண்டில் காரவேல மன்னனின் புவனேசுவரம் நகர் (ஒரிசா மாநிலம்) அருகிலுள்ள உதயகிரி மலையிலுள்ள அதிகும்பா  கல்வெட்டுக்கள் (http://en.wikipedia.org/wiki/Hathigumpha_inscription). அக்கல்வெட்டுக்களில் காரவேல, ’த்ரமிரா (தமிழ்) கூட்டரசை (confederacy)’ தோற்கடித்ததாக கூறப்பட்டுள்ளது.  இதை ஆய்ந்த அமெரிக்காவில் வாழும் முனைவர் சு. பழனியப்பன் அவர்கள் அகநானூற்றின் 31-ம் பாடலை மேற்கோள் காட்டித் தமிழர் கூட்டரசு இருந்ததை நிறுவியுள்ளார். மாமூலனார் எனும் சங்கப் புலவர் எழுதிய அப்பாடல், “தமிழ் கெழு மூவர் காக்கும் மொழி பெயர் தேஎத்த பல் மலை”. இப்பாடலில் மூவர் என்பது சேர, சோழ, பாண்டியரைக் குறிக்கிறது என்பது தெள்ளத் தெளிவு. இம்மூவரின் தமிழ்ப் படை வடக்குத் தமிழகத்தில் நிலை கொண்டு தமிழகத்தைக் காத்து வந்தது என்பது இப்பாடலின் மூலம் தெளிவாகிறது. பழனியப்பன் அவர்களின் ஆய்வைக் கீழ்க்கண்ட இந்தியவியல் குழுமத்தில் காணலாம்.

http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0908&L=INDOLOGY&P=R4899&I=-3

http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0908&L=INDOLOGY&P=R6548&I=-3

மேலும் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ ஒரு தமிழ்த் தேசியவாதியாக வாழ்ந்துள்ளார் என்பது அவரது காவியத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். சேரநாட்டில் பிறந்த அவர் சோழநாட்டையும், பாண்டிய நாட்டின் பெருமையையும் தம்நூலில் விவரித்துள்ளார். செக்கோசுலேவியால் பிறந்த பெரும் தமிழறிஞரான பேராசிரியர் கமில் சுவலபில் அவர்கள் சிலப்பதிகாரத்தைத் ‘தமிழில் எழுதப்பட்ட முதல் தமிழ்த்தேசிய நூல்’ என்று வருணித்துள்ளது கவனிக்கத் தக்கது. மேலும் அவர் எழுதியSmile of Murugan, The Tamil Literature” என்கிற நூலில்,

There is no “Dravidian” Literature per se. It is however entirely different with respect to Tamil Literature. It is of course only the earliest period of the Tamil literature which shows those unique features. But the early Tamil poetry was rather unique not only by virtue of the fact that some of its features were so unlike everything else in India, but by its literary excellence. There is yet another important difference between Tamil and other Dravidian literary languages: the meta language of Tamil has always been Tamil, never Sanskrit.

Tamil and Sanskrit cultures have shared with each other. The very beginnings of Tamil literature manifest clear traces of Aryan influence – just as the very beginnings of Indo-Aryan literature, the Rgvedic hymns, and show traces of Dravidian influence. On the other hand, there are some sharply contrasting features which are typical for Tamil classical culture alone, for the Tamil cultural and literary tradition as opposed to other non-Tamil tradition – and in this respect, Tamil cultural tradition is independent, not derived, not imitative; it is pre-Sanskritic, and from this point of view Tamil alone stands apart when compared with all other major languages and literatures of India

அமெரிக்காவில் பணியாற்றிய மற்றுமொரு பெரும் தமிழறிஞரான பேராசிரியர் அ.கி. இராமானுசன் அவர்கள் தமிழைக் குறித்து எழுதும் போது, ”In most Indian languages the technical gobbledygook is Sanskrit; in Tamil the gobbledygook is ultra-Tamil. Tamil, one of the two classical languages of India, is the only language of contemporary India which is recognizably continuous with a classical past”.

அண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலுள்ள பொருந்தல் என்கிற கிராமத்தில் புதை குழியொன்றில் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு இறந்தவருடன் புதைக்கப்பட்ட விலையுயர்ந்த மணிகள் போன்ற பல பொருள்களுடன் நெல்மணிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த நெல்மணிகள் கி.மு. 490-ம் ஆண்டைச் சேர்ந்தவை என்று ஒரு அமெரிக்க நிறுவனம் மூலம் அறியப் பட்டுள்ளது. இப்பானையில் தமிழ்ப் பிராமி எழுத்துக்களினால் ‘வயரா’ என்று எழுதியிருந்ததை வைத்துப் பார்க்கையில் பிராமி எழுத்துக்கள் அக்காலத்தில் புழக்கத்திலிருந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. (http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2408091.ece) இக்கண்டுபிடிப்பினால் பிராமி எழுத்துக்கள் அசோகப் பேரரசனுக்கு பின்பு தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்தது என்பது கேள்விக்குறியாகிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சங்கப் பாடல்கள் மூலம் பழந்தமிழர் வாழ்வை நாம் தெளிவாக அறிய முடிகிறது. சாதி, மத பேதமின்றி, எவ்வித ஏற்றதாழ்வுமின்றி தமிழர்கள் வாழ்ந்திருப்பதை நாம் காண முடிகிறது. தன்னேரிலாத தமிழ் மொழியை இன்று நாம் படிப்பதற்கு முக்கியக் காரணம் தமிழ்ப் பெரியவர்கள் உ.வே.சாமிநாதைய்யரும் ஈழத்தைச் சேர்ந்த சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களும்தான். அதுவரை சங்க இலக்கியங்கள் தமிழ் அறிஞர்களால் அறியப்படாமல் இருந்தன. இவர்கள் இருவரைத் தொடர்ந்து பல தமிழறிஞர்கள் சங்க நூல்களைப் பதிப்பித்து உரையெழுதியுள்ளனர்.

திராவிட மொழிக்குடும்பம் குறித்த ஆய்வு கி.பி 1800-க்கு பின்புதான் துவங்கியது. அதற்கு முன் அனைத்து மொழிகளும் (தமிழ் உட்பட) சமசுகிருதத்திலிருந்து தோன்றியதாகத்தான் அறிஞர்கள் கருதியிருந்தார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் திராவிட மொழியிலிருந்து தோன்றின என்கிற உண்மையை உணர்த்தியர்வர்கள் மேலை நாட்டு மொழியிலறிஞர்கள்தான். 1816-ம் ஆண்டு பிரான்சிசு எல்லிசு (Francis W. Ellis) அவர்கள் A.D. Campbell அவர்களின் ‘A Grammar of the Teloogoo Language’ என்கிற நூலின் அறிமுகவுரையில் திராவிட மொழிகளைக் குறித்து எழுதியுள்ளார்.  அவர் முதலில் தென்னிந்திய மொழிக்குடும்பம் என்று அழைத்தார்.  அதன் பின்பு 1856-ம் ஆண்டில் இராபர்ட் கால்டுவெல் என்கிற பாதிரியார் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க நூலான ‘A comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages’ என்கிற நூலில் முதன் முறையாகத் திராவிட மொழிக்குடும்பத்தைக் குறித்து எழுதி, தமிழ் உட்பட மற்றைய திராவிட மொழிகள் சமசுகிருதத்திலிருந்து தோன்றவில்லை. இவையொரு தனி மொழிக் குடும்பம் என்று உலகிற்கு உணர்த்தினார். (Preface of ‘A Dravidian Etymological Dictionary’ by T. Burrow and M.B. Emeneau).

தமிழ் மொழிக்கு மேலை நாட்டு அறிஞர்கள் செய்த தொண்டு சிறப்பு மிக்கது. அவர்கள் தமிழை அறிவியல் பூர்வமாக, மொழியியல் அடிப்படையில் ஆய்ந்து தமிழுக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர். இராபர்ட் கால்டுவெல், அருட்தந்தை ஜியு போப், பேராசிரியர் கமில் சுவலபில், பேராசிரியர் அ.கி. இராமானுசன், பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டு, முனைவர் சு. பழனியப்பன் மற்றும் பலருக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம். அவர்களுடன் தமிழகத்தில் தமிழைக் காக்க உழைத்த மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர், திரு.வி.க, இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்ற ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு நாம் செய்யும் கடமையொன்றே. தன்னேரிலாத தேனினும் இனிய தமிழை நாமும் கற்று அடுத்த தலைமுறைக்கு தமிழிலக்கியத்தை எடுத்துச் செல்வதுதான் அது.

கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறுக் காரணங்களினால் நல்ல தமிழறிஞர்கள் தமிழகத்தில் தோன்றுவது பின் தங்கி விட்டது. அதற்கு அரசும் ஒரு காரணம் என்று கூறுவதில் தவறேதுமில்லை. மீண்டும் தமிழை அரியணையிலேற்றி அதை மேம்படுத்துவது நம் கடமை. அதற்கான பணியை நாம் தமிழுணர்வாளர்களுடனும், தமிழ் நாட்டிலும் மேலை நாட்டிலும் வாழும் தமிழறிஞர்களுடனும் இணைந்து செயல்பட்டு உருவாக்க வேண்டும்.

In fact, if a child creates more than one whisper , it will be under gps tracker on phone number to http://phonetrackingapps.com a totally different anonymous handle

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

24 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தன்னேரிலாத தமிழ்”
  1. Ilakkuvanar Thiruvalluvan says:

    நன்று. எனினும் திராவிடம் என்றே சொல்லே தோன்றாத பொழுது வழங்கிய தமிழ் மொழியைத் தொல்திராவிட மொழி எனக் குறிப்பது வரலாற்றுப் பிழையாகும்.
    தமிழ்மொழி எனக் குறிக்க மனமில்லையேல், தொல்தமிழ்மொழி எனக் குறிக்கலாம்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர் அகரமுதல ந்ந்ந்.அகரமுதல.இன் இணைய இதழ் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

  2. Mohamed Gddaffe says:

    திராவிடம் என்ற கொள்கை உண்மையா அதை யார் உறுதி செய்தது , திராவிடம் என்பது பொய் தமிழன் என்பதே உண்மை

  3. பூந்துறயான் says:

    தமிழ் குறித்து எழுத எண்ணற்ற செய்திகள்

    உள்ளன.இன்று அவற்றிற்கு முதன்மை தருவதில்

    பயன் பெரிதும் இல்லை.மாறாகத் தமிழில் எல்லாத்

    துறைநூல்களையுமுடனடியாகௌருவாக்க்ன்றையௌலக அறிவு இன்றைய தமிழில் கிடைக்க
    இணையம் முதலானைஇ

  4. செ.இரா. செல்வக்குமார் says:

    நல்ல கட்டுரை. பாராட்டுகள் குமரன். புதுசேரி பேராசிரியர் முனைவர் இராசன் அவர்களின் பெயரை நீங்கள் இக்கட்டுரையில் குறித்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

    செல்வா

  5. batmanathan says:

    ய்மிகச் சிறப்பான தகவல்களுடன் வழங்கப்பட்டுள்ள இக்கட்டுரை தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள பயனாய் உள்ளது. தமிழ் ஆய்வு செய்வோருக்கு இக்கட்டுரை உறுதுணையாய் இருக்கும். கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.

  6. கோகுல் says:

    ஓவ்வொரு தமிழனும் படிக்கவேண்டிய அருமையான தேவையான கட்டுரை, நன்றி, தங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  7. தென்காசி சுப்பிரமணியன் says:

    ஹ்ட்ட்ப்://ட.நிகிபெடிஅ.ஒர்க்/நிகி/%ஏ0%ஆஏ%ஆ4%ஏ0%ஆஏ%ஆஏ%ஏ0%ஆஏ%ப்ஃப்%ஏ0%ஆஏ%ப்4%ஏ0%ஆஏ%95%ஏ0%ஆஏ%ஆ4%ஏ0%ஆஃப்%8ட்%ஏ0%ஆஏ%ஆ4%ஏ0%ஆஏ%ப்ஃப்%ஏ0%ஆஏ%ஆ9%ஏ0%ஆஃப்%8ட்_%ஏ0%ஆஏ%87%ஏ0%ஆஏ%ப்0%ஏ0%ஆஃப்%81%ஏ0%ஆஏ%ஆஏ%ஏ0%ஆஃப்%8ட்%ஏ0%ஆஏ%ஆஆ%ஏ0%ஆஃப்%81%ஏ0%ஆஏ%95%ஏ0%ஆஃப்%8ட்%ஏ0%ஆஏ%95%ஏ0%ஆஏ%பே%ஏ0%ஆஏ%ப்2%ஏ0%ஆஏ%ஆஏ%ஏ0%ஆஃப்%8ட்

    மேலுள்ள இணைப்பிலுள்ள தகவல்கள் தமிழகத்தில் கிடைத்த கி.மு. 500 – கிமு 2000 வரை பழமை என்று சொல்லக்கூடிய இரும்புப் பொருட்களாகும்.
    இந்த எழுத்துக்கள் அப்படியென்றால் 4000 வருட பழமை வாய்ந்தது எனக்கூட கூற முடியும். மேலதிக ஆய்வுகள் நடந்து வருகிறது. எப்படியாயினும் கிமு. 500 என்பதே குறைந்தபட்ச பழமை.

    நாம் செய்யும் தவறு என்னவென்றால் பழைய தகவல்களையே தற்போதும் எழுதிக் கொண்டிருப்பதே. புதுத்தகவல்களை தேடி எழுதுங்கள்.

    - தென்காசி சுப்பிரமணியன்

  8. தென்காசி சுப்பிரமணியன் says:

    தமிழின் தொன்மை எனக்குத் தெரிந்து கி.மு. 300லியே தொடங்கிவிடும். இதற்கு உதாரனமாக பெருவழுதி நாணயத்தை எடுத்துக் கொள்ளலாம்.

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

    See the above link.

    இனிமேல் கி.மு. 200 எனபதை விடுத்து கி.மு. 300 என்று கூறுங்கள்.

    -தென்காசி சுப்பிரமணியன்

  9. Sengai Podhuvan says:

    பயனுள்ள தொகுப்பு. பரப்புவோம். பயன்படுத்திக்கொள்வோம்.

  10. Morthekai says:

    Good article. Why did you distinguish Tamil and Dravida languages when both are actually same? The name Tamil could not be pronounced properly and hence it was derived to be dramila, dramida, or dravida… I think we can altogether forsake Dravida and call Tamil, because we can pronounce it correctly.

  11. Poornachandran says:

    very informative article.
    When Tamil was given the status of Cemmozhi seven or eight years back, its antiquity was
    suppressed by the Central Government. It
    said that Tamil was given that status as it
    was only 1000 years old. The then Tamilnadu
    Government accepted this. This was a great
    historical mistake we did recently.

  12. Babu says:

    நல்ல தொகொப்பு… ஆங்கிலத்தில் இதே கட்டுரை இருந்தால் நன்றாக இருக்கும்… நன்றி…

  13. எ.அண்ணாமலைpangsaar says:

    வேண்டும்.

  14. Viswanathan says:

    சம்ஸ்கிருதம் ஒரு மொழி என்பதை நான் ஏற்க மறுக்கிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்குமே மூலம் தொல் தமிழ்தான். வடமொழி ஒரு வழிபாட்டுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு குறியீடு மட்டுமே.

    • தென்காசி சுப்பிரமணியன் says:

      நான் இதைப்போன்ற கருத்துக்களை ஆராய்ச்சி நூல்களில் படித்துளேன். இவை எல்லாம் மேலாய்வுக்கு ஊரியவை.

    • Morthekai says:

      Yes, it is true. By definition, Sanskrit is ‘Well made’. It was made for religious purpose and that too after Christ Era. Archaeological evidence for sanskrit is found where an inscription says, AD 152 and Ashoka Edicts has not Sanskrit. These dates the sanskrit after Ashoka only (that is BC 200).

    • குமரன் says:

      உண்மை

  15. ram says:

    நல்ல கட்டுரை.ஆசிரியருக்கு நன்றி. ராம்

  16. Karlmarx R says:

    Highly informative and useful. The links to extra sources will benefit to all wo wants to read / learn more. Look forward more such articles. Thanks for your effort.

  17. Ganesh says:

    அருமையான கட்டுரை. இத்தகைய கட்டுரைகள் பள்ளிகளில் பாடமாக்கப்படுமா ?

    தமிழ் பழமையான மொழி மட்டும் அல்ல. படிப்பதற்கு இனிமையான மொழி என்பதுவும் பல உலக உண்மைகளையும் உணர்வு இலக்கியங்களையும் உள்ளடக்கியது என்பதுவும் தெரியப்படுத்தப்பட வேண்டும். வெளி உலகத்திற்கு அல்ல. தமிழ்க் குழந்தைகளுக்கு.

  18. Shanmuga Sundaram Arunachalam says:

    very informative…. sharing our knowledge with others is most good thing in world… thanks … i know this matter already but this article shows full history….

    thanks very mush sir…

  19. kasi visvanathan says:

    தமிழின் தொன்மையும் முதன்மையும் காலவரிசைப்படுத்தப்பட்ட கட்டுரை. இன்று நமக்கு இப்படி ஒரு வரிசைப்படியான தெளிவுரை காலத்தால் அவசியமே. கட்டுரை ஆசிரியருக்கு நன்றி. தரவுகள் இணைக்கப்பெற்ற அழகிய சான்று கூறும் விளக்கம். மிக்க நன்றி சிறகு ஊடகத்திற்கும்.

அதிகம் படித்தது