மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செட்டிநாட்டு சமையல் – கோசு மல்லி,நண்டு ரசம்

ஆச்சாரி

Feb 15, 2014

கோசு மல்லி

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் -5

உருளைக்கிழங்கு- 2

சின்ன வெங்காயம் – சிறிது

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 6

காய்ந்த மிளகாய் – 2

கடுகு – சிறிது

உளுந்தம் பருப்பு – சிறிது

கொத்த மல்லி – சிறிது

கருவேப்பிலை – சிறிது

மஞ்சள் தூள் – சிறிது

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் வேகவைத்து தோல் உறித்து இரண்டையும் பிசைந்து வைக்கவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகை வெடிக்க விடவும். பின் உளுந்தம்பருப்பு சேர்த்து பின் பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை இவற்றை சேர்த்து வதக்கவும். அத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைந்து வைத்திருக்கும் கலவையையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும். சுவையான கோசு மல்லி தயார்.

இது இட்லி, தோசை, இடியாப்பம் இவற்றிற்கு ஏற்றவை.

நண்டு ரசம்

தேவையான பொருள்கள்:

நண்டு – ½ கிலோ

சீரகம் – 25 கிராம்

மிளகு – 25 கிராம்

வெந்தம் – சிறிது

கடுகு – சிறிது

நல்லெண்ணெய் – தேவையான அளவு

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மல்லித் தூள் – ½ தேக்கரண்டி

மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி

சின்ன வெங்காயம் – தேவைக்கு

பூண்டு – 25 கிராம்

சோம்பு – சிறிது

கருவேப்பிலை- சிறிது

கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவையான அளவு

அரைக்க:

மிளகு, சீரகம் இவ்விரண்டையும் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பூண்டை நசுக்கி வைத்துக்கொள்ளவும், நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.

செய்முறை:

சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, வெந்தயம், சோம்பு  சேர்த்து வெடித்ததும் கருவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் நண்டை போட்டு கிளறவும். பிறகு மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நண்டு வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான நண்டு ரசம் தயார்.

நண்டு ரசம் சளிக்கு நல்லது, உடம்பு வலி நீங்கும், தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த ரசத்தைக் குடித்தால் பால் நன்றாக சுரக்கும். தாய் சேய்க்கு நல்லது.

You are viewing their real interactions and seeing http://www.spying.ninja/ events unfold in real time, and are better able to protect them

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செட்டிநாட்டு சமையல் – கோசு மல்லி,நண்டு ரசம்”

அதிகம் படித்தது