மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தவறான திசையில் தமிழிசை ஆர்வம்

ஆச்சாரி

Feb 22, 2014

தமிழ் மொழியில் அடிப்படை அறிவு கூட இல்லாமல், செவி மூலம் உணரும் ஒலி அறிவினைப் பயன்படுத்தி, தாம் பயன்படுத்தும் சொற்களில் எதுகை மோனையைத் தேடிக் கண்டுபிடித்து மேடையில் பேசி, தம்மைத் தமிழ் ஆர்வலராகக் காண்பிப்பவர்களைத் தமிழக வரலாறு சந்தித்துள்ளது. அதே போல் இசையைப் பற்றிய அடிப்படை அறிவு பெறுவதில் ஆர்வமின்றி, தமிழிசையைத் தான் “களவாடி’ கர்நாடக இசை உயர்வான இடத்தைப் பிடித்துள்ளது என்பது, கர்நாடக இசை மிகவும் உயர்வானது என்ற எண்ணத்தில், தமிழிசை ஆர்வத்தின் அடையாளமாக முன் வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தன்னைத் தமிழ் ஆர்வலராகக் காண்பிக்கத் தேவைப்படும் அடையாளங்களில் முக்கியமான ஒன்று இத்தகைய தமிழிசை ஆர்வமாகும். எனது இசை ஆராய்ச்சி ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடையும் வரை, நானும் இந்த தவறான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டிருந்தேன் என்பதை இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.

கர்நாடக இசை மிகவும் உயர்வானது என்ற எண்ணத்தில், தமிழிசையைத் தான் “களவாடி’ கர்நாடக இசை உயர்வான இடத்தைப் பிடித்துள்ளது என்ற நிலைப்பாட்டில் உள்ள குறைபாடுகளையும், அதனால் தமிழிசை வளர்ச்சிக்கு உள்ள அபாயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.

இந்த நிலைப்பாட்டின் முதல் பலியாக (victim) தேவார இசை உள்ளது. ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் சிதம்பரம் கோவிலில் இருந்து  தேவாரச் சுவடிகள் மீட்கப்பட்டது. அதை எவ்வாறு இசைப்பது என்பது வழக்கொழிந்து போயிருந்த நிலையில், அதை இசைப்பதும் அவரது ஆட்சியில் தான் மீண்டும் வழக்கிற்கு வந்தது. வழக்கொழிந்து போயிருந்த தேவார இசைப்பிற்கும், நீண்ட இடைவெளிக்குப் பின் புதுப்பிக்கப்பட்ட தேவார இசைப்பிற்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகள் பற்றிய சான்றுகள் ஏதும் கிடைத்துள்ளதாக நான் அறியவில்லை.. ஆனால் தேவார இசைப்பு  புதுப்பிக்கப்பட்ட பின் மரபு வழியாக ஓதுவார்கள் மூலம் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாக ஓதுவார்கள் தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், தேவார இசை தான் கர்நாடக இசையாக பின்பற்றப்படுகிறது என்று சொல்லி, கர்நாடக இசையைப் போன்று தேவாரத்தைப் பாடிக் காட்டும் முயற்சிகளும் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன.

“தோடுடைச் செவ்வியன்’ என்ற புகழ்பெற்ற தேவாரப் பாடலை ஓதுவார்கள் மூலம் பாடச்செய்து, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வகத்தில் (French Institute) பதிவு செய்து வைத்துள்ளார்கள். அதைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அந்தப் பாடலை வெவ்வேறு ஓதுவார்கள் வெவ்வேறு விதமாகப் பாடியுள்ளது எனது கவனத்தை ஈர்த்தது. அதே போல் இன்று கோவில்களில் பாடப்படுகின்ற தேவாரப் பாடல்களைப் பதிவு செய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகும். வழக்கொழிந்து போயிருந்த தேவார இசைப்பிற்கும், நீண்ட இடைவெளிக்குப் பின் புதுப்பிக்கப்பட்ட தேவார இசைப்பிற்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகள் பற்றிய சான்றுகள் நம்மிடம் இல்லை. புதுப்பிக்கப்பட்ட தேவார இசையையும் ஓதுவார்கள் வெவ்வேறு விதமாகப் பாடி வருவது பற்றிய சான்றுகளை முழுமையாகப் பதிவு செய்வது பற்றி ஏதும் முயற்சிகள் நடப்பதாக எனக்கு தெரியவில்லை.

தேவாரப் பாடல்களிலேயே(Text) பறை உடுக்கு போன்ற தாள இசைக்கருவிகள் இசைப்பதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று இசைக்கப்படும் தேவார இசையில் துணை இசைக்கருவிகளாக இவை இடம் பெறுவதில்லை. இத்தகைய பறை உடுக்கு போன்ற தாள இசைக்கருவிகளுக்கு இத்தகைய “தீண்டத்தகாத’ நிலை ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் விவசாயிகள், மீனவர்கள், உள்ளிட்ட எல்லாப் பிரிவனரும் இத்தகைய  பறை வகைத் தாள இசைக்கருவிகளை இசைத்ததற்கு நிறைய சான்றுகள் உள்ளன. எனவே ராஜராஜசோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட தேவார இசைப்பில் பறை உடுக்கு போன்ற தாள இசைக்கருவிகளுக்கு இத்தகைய “தீண்டத்தகாத’ நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இசையில் இத்தகைய “தீண்டத்தகாத’ நிலை பிற்காலத்தில் தான் அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். செவ்விசை(classical music) நாட்டுப்புற இசை (Folk Music) போன்ற பிரிவுகள் தமிழிசையில் இதேபோல் பிற்காலத்தில் தான் அறிமுகமாகியிருக்க வேண்டும் என்றும் நான் கருதுகிறேன். செவ்விசை மற்றும் நாட்டுப்புற இசை போன்ற சொற்கள் மேற்கத்திய சிந்தனை முறையில் தான் தமிழிசை மற்றும் பிற இந்திய இசை தொடர்பான விவாதங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாயநாயனார் காலம் வரை இத்தகையப் பிரிவுகள் தமிழிசையில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்பது எனது ஆய்வுகளில் வெளிப்பட்டுள்ளது.

இந்திய சிந்தனை காலனியமயமாக்கப்பட்டதானது (Colonisation of Indian Mind)  இசை தொடர்பான ஆராய்ச்சிகளிலும், (ஆபிரகாம் பண்டிதர் மேற்கத்திய இசையின் -குறைபாடுகள் மிகுந்த- ஈகுவல் டெம்பரமண்ட் (Equal Temperament)  முறையால் ஈர்க்கப்பட்டு, அதுவே பழந்தமிழ் வட்டப்பாலை முறை என முடிவு செய்தார்.) அது தொடர்பான விவாதங்களிலும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை நான் அனுபவித்து வருகிறேன். இந்திய சிந்தனை காலனியமயமாக்கப்பட்டதன் காரணமாக சிம்பொனி இசை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளாமலேயே அதனை மிக உயர்ந்த இசையாக வழிபடும் போக்கினை நான் சந்தித்துள்ளேன். அதே போல் கர்நாடக இசை மிகவும் உயர்வானது என்ற எண்ணத்தில், தமிழிசையைத் தான் “களவாடி’ கர்நாடக இசை உயர்வான இடத்தைப் பிடித்துள்ளது என்பதில் உள்ள குறைபாடுகளையும் நான் சந்தித்து வருகிறேன்.

கர்நாடக இசையின் கொள்கையாக (Theory) உள்ள மேளகர்த்தா இசைக் கொள்கை சுமார் 300 வருடங்களுக்கு முன் தஞ்சையில் உருவான கொள்கையாகும். எனவே கர்நாடக இசையின் கொள்கை தமிழிசையிலிருந்து களவாடப்படவில்லை.

அடுத்து செய்முறை இசை (practical music)  என்று வரும் போது , சுருதித் தீர்மானிப்பும் (Pitch Standard), இசைச்சுர இடைவெளி அளவு முறையும் (Intervals) முக்கிய இடம் பெறுகின்றன. இன்றைக்கு கர்நாடக இசையில் சுருதிப் பெட்டிக்கு சுருதி நிர்ணயம் வெள்ளைக்காரர்கள் அறிமுகப்படுத்திய சுருதிக்குழல் (டண்ற்ஸ்ரீட் டண்ல்ங்) அடிப்படையில் செய்யப்படுகிறது. இது தொடர்பான சான்றுகளை “தொல் இசைப் புதையல்கள்- புதிய இசைக்கான தேடல்’ (Ancient Music Treasures – Exploration for New Music) என்ற ஆங்கிலப் புத்தகத்தில் நான் விளக்கியுள்ளேன். இதனை இந்திய இசைக்கான சுருதிப் பெட்டி வியாபாரத்தில் முன்னணியில் உள்ள ராடல் (Radel) நிறுவனமும் உறுதி செய்து எனக்கு மடல் அனுப்பியுள்ளார்கள். எனவே கர்நாடக இசையின் சுருதித் தீர்மானிப்பும் தமிழிசையிலிருந்து “களவாடப்பட”வில்லை.

அடுத்து கர்நாடக இசையில் உள்ள இசைச்சுர இடைவெளி அளவு முறை பற்றி பார்ப்போம்.

மேற்கத்திய இசையில் இசைச்சுர இடைவெளி அளவு முறையில் ஈகுவல் டெம்பரமண்ட் (Equal Temperament) மற்றும் ஜஸ்ட் இன்டொனேசன் (Just Intonation) என்ற இரண்டு முறைகள் உள்ளன. இசை அறிஞர் சாம்பமூர்த்தி கர்நாடக இசையின் இசைச்சுர இடைவெளி அளவு முறை ஜஸ்ட் இன்டொனேசன் என்று தெரிவித்து அதற்கான இசைச்சுர இடைவெளி அதிர்வு எண் தகவு மதிப்புகளை (Frequency Ratio) தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். இம்மதிப்புகளுக்கும்,  மேற்கத்திய இசையில் உள்ள ஜஸ்ட் இன்டொனேசன் மதிப்புகளுக்கும் இடையே வேறுபாடு இருப்பதையும் மேலே சொன்ன எனது நூலில் விளக்கியுள்ளேன். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இசைச்சுர இடைவெளி அதிர்வு எண் தகவு மதிப்புகளையும் நான் கணக்கிட்டு காட்டியுள்ளேன். அவை மேலே சொன்ன இரண்டு விதமான ஜஸ்ட்  இன்டொனேசன் மதிப்புகளிடமிருந்தும் மாறுபட்டு இருப்பதையும் நான் விளக்கியுள்ளேன். எனவே கர்நாடக இசையில் உள்ள இசைச்சுர இடைவெளி அதிர்வு எண் தகவு மதிப்புகள் தமிழிசையிலிருந்து “களவாடப்பட”வில்லை.

அத்துடன் கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் சுருதிப்பெட்டி கிறித்துவ பாதிரியார்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதற்கான சான்றுகளையும் அந்நூலில் விளக்கியுள்ளேன். எனவே கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் சுருதிப்பெட்டியும் தமிழிசையிலிருந்து “களவாடப்பட”வில்லை.

சுருதித் தீர்மானிப்பிலும், சுருதிப் பெட்டியிலும் மேலே குறிப்பிட்டபடி கர்நாடக இசை காலனியமயமாக்கலுக்கு (Colonisation in Karnatic Music) உள்ளாகியுள்ளது. பாரம்பரிய தமிழ் இசை வாய்ப்பாட்டிலும் இந்த பாதிப்பு உள்ளது.

இந்த குறைபாடுகள் பற்றியும், அவற்றை நிவர்த்தி செய்தால் உலக இசைச் சந்தையில் இந்திய இசைக்கு கிடைக்க இருக்கும் முக்கியத்துவம் பற்றியும் மேலே சொன்ன நூலில் நான் விளக்கியுள்ளேன்.

மேலே சொன்ன குறைபாடுகள் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல், பழம் தமிழ்ப் பண்கள் தான் இன்று கர்நாடக இசையில் பெயர் மாற்றம் அடைந்து வருவதாக ‘ பண் ஆராய்ச்சிகள்’ தமிழ் நாட்டில் நடந்து வருகின்றன. “பண்’ என்ற சொல்லின் பொருள் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் கிடைக்கும் தகவல்களுடன், கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் “ராகம்’ என்ற சொல்லின் பொருள் பற்றிய தகவல்களை ஒப்பிட்டால் இரண்டிற்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பது தெளிவாகும். மேற்கத்திய இசையில் உள்ள ஸ்கேல் (Scale) (அதாவது, இசைக்கப்படும் இசையில் என்னென்ன சுரங்கள் இடம் பெறும் என்ற தகவல்) என்ற சொல்லின் பொருள் மட்டுமே  “பண்’ என்ற சொல் பற்றிய தகவல்களுக்கும்,  “ராகம்’ என்ற சொல் பற்றிய தகவல்களுக்கும் பொதுவாக இருக்கிறது.

வழக்கொழிந்து போயிருந்த தேவார இசைப்பிற்கும், நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்ட தேவார இசைப்பிற்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகள் பற்றிய சான்றுகள் நம்மிடம் இல்லை. புதுப்பிக்கப்பட்ட தேவார இசையையும் ஓதுவார்கள் வெவ்வேறு விதமாகப் பாடி வருவது பற்றிய சான்றுகளை முன்னர் பார்த்தோம்.

உண்மையில்  தேவாரப் பாடல்களில் உள்ள ஸ்கேலை அடையாளம் கண்டு, அவற்றை கர்நாடக இசையின் ராகங்களில் உள்ள ஸ்கேலுடன் ஒப்பிட்டு, ஒத்துப்போகும் ஸ்கேலில் உள்ள தேவாரப் பண் தான் இன்று கர்நாடக இசையின் ராகமாக உள்ளது என்ற முடிவுகள்  ‘ பண் ஆராய்ச்சிகள்’ என்ற பெயரில் அறிவிக்கப்படுகின்றன. இந்த முயற்சியை உலகில் உள்ள எல்லா வகை இசைகளுடனும் ஒப்பிட்டு இது போன்ற முடிவுகளையும் பெறலாம்.

 -தொடரும்

Hinge’s terms of use ask users to agree they have reached the legal age required to entering into binding contracts where you live spy phone app in http://cellspyapps.org

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தவறான திசையில் தமிழிசை ஆர்வம்”
  1. nithyavani says:

    வணக்கம்…. அடியேனும் நம் தமிழிசையைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளேன்… http://nithyavani.blogspot.com/2013/06/blog-post.html

  2. kasi visvanathan says:

    // கர்நாடக இசை மிகவும் உயர்வானது என்ற எண்ணத்தில், தமிழிசையைத் தான் “களவாடி’ கர்நாடக இசை உயர்வான இடத்தைப் பிடித்துள்ளது என்ற நிலைப்பாட்டில் உள்ள குறைபாடுகளையும், அதனால் தமிழிசை வளர்ச்சிக்கு உள்ள அபாயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.//
    இதில் தெட்டத் தெளிவாகவே நாம் கர்நாடக இசையின் உயர்வு நிலை நாட்டப்பட்டுள்ளதனையும் பாராட்டுகின்றேன். மேலும் காட்டுமிராண்டிகளின் கற்பனையான தமிழிசை கருவிலேயே வளர்ச்சியில்தான் இருக்கின்றது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைக் கருவிலேயே கலைக்கப்பட வேண்டும் என்பதனைக் கருத்தில் கொண்டு வருவது வரவேற்கப்படவேண்டியதுதான். காலமெல்லாம் தந்தை பெரியார் செய்யமுடியாததை இன்று திராவிட அறிவுஜீவிகள் முனைப்பாகச் செய்வது வரலாற்றில் பொறிக்கப்படும். முள்ளிவாய்க்காலில் புதைக்கப்படும். பயணம் தொடரட்டும் கர்நாட்டிக் செழிக்கட்டும். திராவிட சீர்திருத்தம் எல்லாத் துறைகளிலும் வலுப்பெறட்டும். சிறகு ஊடகம் செய்யும் அரும்பனி பாராட்டப்பட வேண்டியது. வாழ்த்துக்கள்.

  3. kasi visvanathan says:

    மிக நல்ல கட்டுரை. தமிழிலில் இசை என்பதே இல்லை என்பதை உறுதிசெய்யும் கட்டுரை. காலத்தால் அவசியமானது. தமிழ்க் கூச்சல் போட்டு தமிழிசை இயக்கம் என்ற காட்டுமிராண்டித் தனத்திற்கு நல்ல சவுக்கடி. தொடரட்டும்.
    கர்நாட்டிக் என்ற சொல்லே செவ்வியலானது. இதனைத் தமிழன் கருநாடகம் என்று ஏளனம் செய்வது மிகவும் காட்டுமிராண்டித்தனமானது என்பதனை அவன் உணரும் காலம் வரும்.

    • செ.அ.வீரபாண்டியன் says:

      ‘தமிழிலில் இசை என்பதே இல்லை என்பதை உறுதிசெய்யும் கட்டுரை.’ என்ற முடிவுக்கு வருவதற்கு கட்டுரையில் எந்த தகவலும் இல்லையே. தற்போது ‘கர்நாடக இசை’ என்பதில் உள்ள குறைபாடுகளும், அதையே தமிழிசை என்று அடையாளம் காண்பதில் உள்ள குறைபாடுகளும் தான் சுட்டிக்காட்டப் பட்டிருக்கின்றன. கட்டுரை தொடர் முழுவதும் வெளிவந்த பின் இது தெளிவாகும். ச, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு சுர எழுத்துக்களுக்கான தொன்மையான இலக்கியச் சான்று தமிழில் தான் உள்ளது.(‘சேந்தன் திவாகரம்’ கி.பி 7 ‍- 8) சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் அதற்குப் பின்னரே தான் உள்ளது. ‘சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம்,தைவதம், நிஷாதம்’ என்ற சமஸ்கிருத மொழியிலுள்ள சுரப்பெயர்களிலிருந்து மேலே சொன்ன 7 சுர எழுத்துக்களையும் சமஸ்கிருத இலக்கணப்படி பெற முடியாது என்பதை திருவையாறு சமஸ்கிருதக் கல்லூரி இசைப் பேராசிரியர் திரு.நாராயண சாஸ்திரி தெளிவு படுத்தியுள்ளார். ( பக்கம் 527 கருணாமிர்த சாகரம்’, ஆபிரகாம் பண்டிதர்)

அதிகம் படித்தது