மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செட்டிநாட்டு சமையல் – முட்டை தொக்கு, கவுனி அரிசி இனிப்பு

ஆச்சாரி

Mar 8, 2014

கவுனி அரிசி இனிப்பு

தேவையான பொருட்கள்:

கவுனி அரிசி – 1 கோப்பை

சர்க்கரை – ¾ கோப்பை

ஏழக்காய் -2

நெய் – 2 தேக்கரண்டி

தேங்காய் துருவியது – ½ கோப்பை

செய்முறை:

கவுனி அரிசியை முதல்நாள் ஊறவைத்துக் கொள்ளவும். ஊறிய அரிசியை தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். அதனுடன் துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய், நெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அருமையான இந்த இனிப்பை குழந்தைகளுக்கும் தரலாம்.

செட்டிநாடு முட்டை தொக்கு

தேவையான பொருட்கள்:

முட்டை – 4

பெரிய வெங்காயம் – ½ கிலோ

பச்சைமிளகாய் – 2

தக்காளி – 2

பூண்டு – 2

மஞ்சள் தூள் – சிறிது

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முட்டை, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் இவற்றை நன்றாக கலக்கி, ஒரு சட்டியின் அடியில் எண்ணெய் தடவி கலக்கிய கலவையை ஊற்றி ஆவியில் வேக வைக்கவும். பின் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும் பின் வெட்டிவைத்துள்ள துண்டுகளை இதில் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான முட்டை தொக்கு தயார்.

Out of class homework help writing assignments four per semester, two of them using draft and revision

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செட்டிநாட்டு சமையல் – முட்டை தொக்கு, கவுனி அரிசி இனிப்பு”

அதிகம் படித்தது