மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம்- பகுதி-6

ஆச்சாரி

Apr 12, 2014

தினை லட்டு

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைத்த தினை மாவு (நரிவால் தினை)– 1 கோப்பை

பொடித்த வெல்லம் – ½ கோப்பை

நெய் – 3 தேக்கரண்டி

திராட்சை மற்றும் முந்திரிபருப்பு – தேவையான அளவு

ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை

செய்முறை:

வறுத்து அரைத்த தினை மாவு, பொடித்த வெல்லம், ஏலக்காய் பொடி இவற்றை கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு வாணலியில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் திராட்சை மற்றும் முந்திரிபருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின் இதனை கலந்து வைத்துள்ள தினை மாவுடன் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக செய்தால் சுவையான தினை லட்டு தயாராகிவிடும்.

கேழ்வரகு இடியாப்பம்

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 1 கோப்பை

அரிசி மாவு – 1கோப்பை

உப்பு – தேவையான அளவு

சூடான தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

கேழ்வரகு மாவு, அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பும் கலந்து சூடான தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதிலிருந்து இடியாப்பம் தயார் செய்யலாம். இதனை ஓமவல்லி பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.

உளுந்தங்களி

தேவையான பொருட்கள்:

உளுந்தம்பருப்பு – 2 கோப்பை

வெல்லம் – 50 கிராம்

நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:

உளுந்தம்பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து பின் நன்றாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு வாணலியில் மாற்றி வெல்லம் நன்கு கரையும் வரையிலும் உளுந்தமாவு நன்றாக வேகும் வரையிலும் அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவேண்டும். கடைசியாக 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்.

நெல்லிக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் (கொட்டை நீக்கியது) – 2

பச்சைமிளகாய் சிறியது – 1

இஞ்சி – 5 கிராம்

தயிர் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

நெல்லிக்காய், பச்சைமிளகாய், இஞ்சி இதனை அம்மியில் இட்டு ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். பின் அதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி உப்பு மற்றும் தயிர் கலந்து பரிமாறவும்.

Mariah also realized that although her readers are other communications majors who are interested in the https://www.pro-essay-writer.com topic, they may want to read a paper about a particular issue in mass media

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம்- பகுதி-6”
  1. baluappaji@gmail.com says:

    nice..kindly send me to my -email id and include me in ur mailing list please.

அதிகம் படித்தது