மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மோர் குழம்பு, மருந்து குழம்பு செய்வது எப்படி?

ஆச்சாரி

Apr 12, 2014

மோர் குழம்பு

ஒரு சிலருக்கு பால்ஏடு பிடிக்காது. தயிரில் இருந்தாலும் சாப்பிடமாட்டார்கள். அதை என்ன செய்வது? இதோ ஒரு யோசனை.

அந்த பால்ஏடுகளை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு மோர் (உறைமோர்) சேர்த்து வெளியில் 5 அல்லது 6 மணி நேரங்கள் வைக்கவும். அது தோய்ந்தபின் குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம். தினமும் பால் காய்ச்சும் பொழுது கிடைக்கக்கூடிய ஏடுகளையும்  அதனோடு சேர்த்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம். பத்து நாட்கள் சேர்ந்த ஏடுகளை ஒரு தினம் முன்னதாக எடுத்து வெளியில் வைக்கவும். அப்போதுதான் நன்றாக புளித்து இருக்கும். இந்த பால்ஏடுகளை பயன்படுத்தி எவ்வாறு மோர்குழம்பு செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சேர்த்துவைத்த பால்ஏடு – 1 கோப்பை

கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

மல்லி – 1 தேக்கரண்டி

சோம்பு – ¼ தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் -5 அல்லது 6

தக்காளி – 2

பச்சைமிளகாய் – காரத்திற்கேற்ப

வெங்காயம் – 2

இஞ்சி – சிறிதளவு

கடுகு – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

  • ஒரு நாள் முன்னதாகவே எடுத்துவைத்த பால்ஏடு கலந்த தயிரை நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அரைக்க:

கடலைப்பருப்பு, மல்லி, சோம்பு இவற்றை 1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பின் இதனுடன் பச்சைமிளகாய்,இஞ்சி சேர்த்து நீர் விட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்தவுடன் சிறியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் காய்ந்த மிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை நன்கு வதக்கவும். பின் அதில் அரைத்த விழுதை சேர்த்து சிறு அனலில் 5 நிமிடம் வதக்கவும். வதங்கிய பின் அரைத்த மோர், உப்பு, தேவையான அளவு நீர் சேர்த்து கொதித்தவுடன் இறக்கிவிடவும். சிறிதளவு பெருங்காயத்தூளை சேர்க்கவும். சுவையான மோர் குழம்பு தயார்.

தயிர் ஏடும் வீணாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

மருந்து குழம்பு

தேவையான பொருட்கள்:

வெள்ளை கடுகு – 1 தேக்கரண்டி

மிளகு – 2 தேக்கரண்டி

வரமிளகாய் – தேவையான அளவு

பரங்கி செக்கை – ஒரு நெல்லிக்காய் அளவு

சுக்கு – சிறிதளவு

பூண்டு – 50 கிராம்

வெங்காயம் -2

புளிக்கரைசல் – 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – சிறிதளவு

வெந்தயத்தூள் – சிறிதளவு

பெருங்காயத்தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

வெள்ளை கடுகு, மிளகு, காய்ந்த மிளகாய், பரங்கி செக்கை(நசுக்கியது), சுக்கு, பூண்டு இவை அனைத்தையும் நீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் அரைத்த விழுதை அதில் சேர்த்து 2 நிமிடங்கள் சிறு அனலில் வதக்கவும். பின் தேவையான அளவு கரைத்தபுளி, உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்றாக கொதித்தபின் சிறிதளவு வெந்தயத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கி விடவும்.

நல்ல சுவையுடன் கூடிய வாய்வு நோயை நீக்கக்கூடிய குழம்பு ரெடி.

இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Parents buy their http://celltrackingapps.com children smartphones to facilitate communications with them

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மோர் குழம்பு, மருந்து குழம்பு செய்வது எப்படி?”

அதிகம் படித்தது